Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 16, 2017

இளைஞர்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் ஐடி நிறுவனங்கள்..! எப்போது தீரும் இந்த பிரச்சனை..?


உலகில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மக்களின் வாழ்க்கையில் பல மடங்கு எளிமைப்படுத்தியிருக்கும் நிலையில், இந்தியாவில் இத்துறை சார்ந்த நிறுவனங்களே இதன் ஊழியர்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்து, கடுமையாக்கி வருகிறது.

ஆம், கடந்த சில மாதங்களாக இந்திய ஐடி துறையில் அறிவிக்கப்பட்ட ஆட்குறைப்புகள் இளைஞர்களைப் பெரிய அளவில் பாதித்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் தடுமாறி நிற்கிறது.

புனேவில் இருக்கும் ஒரு முன்னணி ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர், பணிநீக்கத்தால் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த வேதனையில் புதன்கிழமை, ஐடி துறையில் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதமில்லை, எனது குடும்பம் குறித்து நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது' என்று எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

அதேபோல் மற்றொரு இடத்தில், 60வயதுடைய ஒருவர் கூறுகையில், தனது மகள் சமீபகாலமாக மிகவும் அமைதியாகிவிட்டால் இந்தப் பிரச்சனையில் இருந்து அவளை வெளியில் கொண்டுவர பெற்றோர்கள் அந்தப் பெண்ணைக் கவுன்சிலிங் அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது தான் தெரிந்துள்ளது அந்தப் பெண் தனது நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதனை மறைக்க, தான் தினமும் வேலைக்குச் செல்வதைப் போலத் தினமும் வெளியில் சென்று வருகிறாள் என அவளது தந்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் பணிநீக்கம் இன்போசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, காக்னிசென்ட் போன்ற பெரிய நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் சிறு சிறு நிறுவனங்களிலும் நிலவுகிறது.

குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையில் உள்ளது.

இந்தப் பணிநீக்கத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது 25 - 35 வயதுடைய இளைஞர்கள் தான்.

மனமுடைந்த இளைஞர்கள் உறுதியற்ற மனநிலையில் தற்கொலை போன்ற மிகவும் மோசமான முடிவுகளை எடுக்கின்றனர். மறுபுறம் அதிகமானோர் சைக்காலஜி மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங் தளத்தை நாடி வருகின்றனர்.

ஐடி நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் நிலவும் இந்த நிலையைச் சரி செய்ய யுவர்தோஸ்த் என்ற ஆன்லைன் கவுன்சிலிங் தளம் கடந்த மாதம் Fired to Fired Up எனச் சேவையை அறிமுகம் செய்யது. இதில் முதல் 3 நாட்களில் மட்டும் சுமார் 260 அழைப்புகள் மற்றும் 800 சாட்கள் வந்துள்ளது. (ஜூன் 29- ஜூலை1)

யுவர்தோஸ்த் அமைப்பிற்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்த நிலையில், 43 சதவீத அழைப்புகள் ஐடி துறையைச் சேர்ந்தது. மேலும் அதிகமான அழைப்புகள் கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து வந்துள்ளது.

கலைவாணி கூறுகையில், 10 வருடங்களுக்கும் அதிகமாக ஐடித்துறையில் பணியாற்றி வருகிறேன், தற்போது நிலவி வரும் பணிநீக்கத்தில் நான் பாதிக்கப்பட வில்லை என்றாலும், என்னுடைய நண்பர்கள் பலர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இது என்னை மிகப்பெரிய அளவில் பாதித்துள்ளது. நான் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் கவலை இல்லை, ஆனால் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் கேள்வியை எதிர்கொள்வதே மிகப்பெரிய அளவிலான அச்சுருத்தலாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

ஐடித்துறையில் நிலவும் உண்மையான நிலையை உறுதிப்படுத்தும் வகையில் ராகேஷ் குமார் ஒரு செய்தியை தெரிவித்துள்ளார்.

தான் பணியாற்றும் பெரிய நிறுவனமாக இருந்தாலும், தனது மொத்த அணியையும் நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது. இவர் ஐடித்துறையில் சுமார் 7 வருடம் பணியாற்றியுள்ளார்.

மகேஷ் யுவர்தோஸ்த் தளத்தில் கூறியுள்ள படி, தனது மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறாள், 4 பேர் கொண்ட குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளத் தனக்கு இருக்கும் ஓரே வாய்ப்பு வேலையும் மாதாமாதம் கிடைக்கும் சம்பளம் தான்.

பணிநீக்கத்தைச் சந்தித்த மகேஷ் உறுதியாக அடுத்த வேலையைத் தேட துவங்கினாலும், தனது மனதில் இருக்கும் பாரத்தைக் குறைக்க யுவர்தோஸ்த் தளத்தை நாடியுள்ளார்.

இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் தற்போது தனது செலவுகளைக் குறைத்து முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் காட்டினால் போது, அதனால் தனது ஊழியர்கள் நிலையைச் சற்றும் பொருட்படுத்தாமல் பணியை விட்டு பல ஆயிரம் ஊழியர்களை நீக்கி வருகிறது.

இக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து பெயர்களும் பெயர் மாற்றப்பட்டவை.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.