Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2017

கெட்டிக்காரன் புளுகு - சிறுகதை


ஒரு நாள் காலையில் ஒரு மரத்தின் மீது சேவல் ஒன்று  உட்கார்ந்து இருந்தது. காலை நேரம் ரம்மியமாக இருந்தபடியால் சேவல் கூவியது! உற்சாகம் மேலிட பலதடவை கூவியது!

சேவலின் குரலைக் கேட்ட ஒரு நரி அங்கே வந்தது. நரிக்கு நல்ல பசி! கூவிக்கொண்டிருந்த சேவலைப் பிடித்துச் சாப்பிட ஆசைப்பட்டது. ஆனால் சேவல் மரத்தின் உச்சியில்  இருந்ததால்  அதைப் பிடிக்க முடியவில்லை. இதற்காக நரி ஒரு தந்திரம் செய்ய நினைத்தது. உடனே சேவலைப் பார்த்து, ""சகோதரரே! வணக்கம்! ஒரு நல்ல செய்தியை நீ கேள்விப்பட்டாயா? பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது!...இனி ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது...,அன்பாக நடந்து கொள்ள வேண்டும்...சகோதர மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நீ கொஞ்சம் கீழே வாயேன்! இந்த நல்ல செய்தியைப் பற்றிப் பேசுவோம்.'' என்றது.

 நதியின் தந்திரப் பேச்சை சேவல் புரிந்துகொண்டது. அதை வெளியே காட்டவில்லை. தூரத்தில் எதையோ பார்ப்பதைப்போல தலையைத் தூக்கிப் பார்த்தது.

 இதனைக் கண்ட நரி, ""என்ன சகோதரா! ரொம்ப அக்கறையாக எதையோ அடிக்கடி பார்க்கிறாயே! அங்கே என்ன இருக்கிறது?'' என்று கேட்டது.

 அதற்கு சேவல், ""சற்று தூரத்தில் வேட்டை நாய்கள் வருவது மாதிரி தெரிகிறது. வேட்டை நாய்கள்தானா என்பதைக் கவனிக்கிறேன்.'' என்றது!

 அவ்வளவுதான்! நரிக்கு உடல் நடுங்கியது.

""சரி...,சரி...! நான் அப்புறமாக வந்து உன்னிடம் பேசுகிறேன்'' என்று கூறி கிளம்பியது.

 சேவல், நரியிடம், ""அருமை சகோதரா! போகாதே. நான் இதோ கீழே வருகிறேன். நாய்களைக் கண்டு ஏன் பயப்படுகிறாய்?...இப்போதுதானே நீ சொன்னாய்! எல்லோருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது....என்று!'' என்றது.

 அதற்கு நரி ""அந்த ஒப்பந்தத்தைப் பற்றி அநேகம் பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். அந்த நாய்களுக்குத் தெரியாமல் இருந்தால்....?...என் கதி என்ன ஆவது?...நான் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு ஒரே ஓட்டமாய் ஓடிக் காட்டுக்குள்  மறைந்து விட்டது.

 சேவல், ""யாரை ஏமாற்றப் பார்க்கிறாய்? உன்னுடைய கெட்டிக்காரப் பொய்கள் என்னிடம் பலிக்காது'' என்று கூறிச் சிரித்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.