Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 14, 2017

அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக ஜனாதிபதி டிரம்ப் மீது வழக்குபதிவு


அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு டிரம்ப் மீது அரசியலமைப்பு சட்டத்தை மீறிய குற்றத்திற்காக நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அரசியலமைப்பு சட்டப்படி சாதாரண அரசு ஊழியர் முதல் ஜனாதிபதி வரை பதவி வகிப்பவர்கள் வெளிநாட்டு அரசாங்கத்திடம் இருந்து எவ்வித பரிசும் பணமும் பெறக்கூடாது என்பது விதியாகும்.

அதேபோல், அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிப்பவர்கள் சொந்தமாக தொழில் செய்து அதன் மூலம் லாபம் ஈட்டுவராக இருக்கவும் கூடாது.
இச்சட்டத்தை தொடர்ந்து டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னதாக தனது அனைத்து தொழில்களின் பொறுப்பை குடும்பத்தினருக்கு வழங்கியுள்ளார்.
ஆனால், ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அரசியலமைப்பு சட்டத்தை மீறியதாக தற்போது டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக மேரிலாண்ட் மற்றும் வாஷிங்டன் நகரங்களை சேர்ந்த அரசு வழக்கறிஞர்கள் இவ்வழக்கினை டிரம்ப் மீது பதிவு செய்ய உள்ளனர்.

பதவியில் இருக்கும்போது தனது ஹொட்டல்கள் மூலம் டிரம்ப் வெளிநாட்டு நிதிகளை பெற்றுள்ளார் என்பதே அவர் மீது வைக்கப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டு ஆகும்.

மேரிலாண்ட் நீதிமன்றத்தில் இன்று(திங்கள் கிழமை) வழக்கு பதிவு செய்யப்படுகிறது. எனினும், வழக்கு விசாரணையின்போது டிரம்ப் நீதிமன்றத்திற்கு வருவாரா? மாட்டாரா? என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.