Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2017

ரூ 1500 போனும், அம்பானியின் சூட்சமமும்…!


அம்பானிக்கு உடம்பெல்லாம் மூளை என்றுதான் சொல்ல வேண்டும்….

1500 ரூபாய்க்கு மொபைல் போன். அந்த பணமும் திருப்பி தரப்படும். இதில் உள்ள #சூட்சமம் யாருக்காவது புரிகிறதா?
தோராயமாக 100 கோடி மொபைல் 1500 ரூபாய்க்கு கொடுக்க டார்கெட்.

1. முதலில் ஒன்றை கவனியுங்கள் இது திரும்ப கொடுக்கப்படும் பணம். ஆக இது விற்பனை இல்லை. வைப்பு பணம். No sales, its only security ammount. இந்த பணத்திற்கு எல்லாம் GST கிடையாது. மொபைல் போன் விற்பனைக்கு 12% GST. ஆனால் இந்த திட்டம் மூலமாக அது தவிர்க்கப்படுகிறது. அலைபேசி சாதனமும் உங்கள் கையில் கிடைத்துவிடுகிறது.

2. 1500 X 100 கோடி = 150000 கோடி அம்பானி குழுமத்தில் உள்ளே வந்து விட்டது. அதுவும் விற்பனை வரி கட்டாமல். 3 வருடம் கழித்து இதை திரும்ப பெற்று கொள்ளலாம்.

3. இந்த 3 வருடத்தில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்யாமல், இந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாயை எந்த துறையில் வேண்டுமானாலும் அம்பானியால் முதலீடு செய்ய முடியும்….. அதிலிருந்து லாபமும் பெற முடியும்….

4. அப்படி முதலீடு செய்ததில் 20% லாபம் என்று குறைந்த பட்ச கணக்கை வைத்து கொள்வோம். ஊரான் பணத்தை முதலீடாக செய்து அதில் வந்த லாபம் மட்டும் 30000 கோடி (குறைந்தபட்சம்). இது ஒரு வருஷத்துக்கு மட்டும். மூன்று வருஷத்திற்கு நீங்கள் கணக்கு போட்டு பாருங்கள். குறைந்தது 75000 கோடி. இன்னும் முதலீடு அப்படியே தான் இருக்கிறது.

5. மூன்று வருடம் கழித்து, முதலீடு 150000 கோடி மக்களிடம் திரும்ப கொடுக்கப்பட்டு, மொபைல் போன் தயாரிக்கப்பட்ட செலவு அதிகபட்சமாக 15000 கோடியை கழித்து பார்த்தால், நிகர லாபம் மட்டும் 60,000 கோடி. முதலீடு இல்லை. விற்பனை வரி இல்லை.

6. அந்த மொபைல்களால் இரண்டாம் கட்ட வருமானமாக ஜியோ நிறுவனத்திற்கு எவ்வளவு வரும் என்பதையும் இங்கு கணக்கில் எடுக்க வேண்டும்….!!!

#மாஸ்டர்_பிளான்… இதை திருட்டுத்தனம் அல்லது சாமர்த்தியம் என்று எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்….. அது உங்கள் மன பக்குவத்தை பொறுத்து. என்னை பொறுத்தவரை இது #சாமர்த்தியம் தான்…..!!!

ஒரே ஒரு கேள்வி மட்டும் உருத்துகிறது… இதை ஏன் #bsnl செய்ய முன்வரவில்லை….?

-AK
26.07.17

நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.