Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

என்ன கொடுமை சார் இது: வேலைப் பளு காரணமாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!


சமீபகாலமாக தற்கொலை என்ற கையோங்கி நிற்கிறது. காதல் தோல்வி, கல்வியில் தோல்வி, வீட்டு பிரச்சனை என எதற்கொடுத்தாலும் தற்கொலை செய்து கொள்ளத்தான் நினைக்கிறார்கள் பெரும்பாலான மனிதர்கள்.

இந்நிலையில், மனிதர்கள் தான் இப்படி என்று நினைத்தால் ரோபோக்களும் தற்போது தற்கொலை செய்து கொள்ளும் ஒரு ஆச்சர்யமான விடயம் நடந்து வருகிறது.

அதாவது, கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, நைட்ஸ்கோப் K5 (Knighscope K5)

இந்த ரோபோ வொஷிங்கடன் நகரில் உள்ள ஷொப்பிங் மால் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வந்தது.

இதன் வேலை, பார்க்கிங் ஏரியாவில் வரும் வாகனங்கள், வாகன் ஓட்டிகள் ஆகியவற்றை கண்காணிப்பதாகும். 136 கிலோகிராம் எடை, 5 அடி உயரம் உள்ள இந்த ரோபோ மணிக்கு 3 மைல் வேகத்தில் நடக்கும்.

இந்த ரோபோவிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை பணியில் இருக்கும் போது அருகில் இந்த நீர் அலங்கார குட்டையை நோக்கிச் சென்று அதில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளது.

ரோபோவின் இந்த தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.