Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 3, 2017

பிங்’ தேடல் பொறியை பயன்படுத்தினால் உங்களுக்கு மைரோசப்ட் பணம் அளிக்கும்..!


இணையதள உலகில் கூகுள் தேடு பொறியை பயன்படுத்துபவர்களைப் பிங் தேடு பொறியைப் பயன்படுத்த வைக்க வேண்டும் என்பதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் பயனர்களுக்குப் பணம் அளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.

இப்படிப் பிங் பயன்படுத்தும் பயனர்களுக்குப் பணம் அளிப்பதன் மூலம் போட்டி நிறுவனமான தேடு பொறி ஜாம்பவான் கூகுள் நிறுவனத்தை எளிதாகப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்று மைக்ரோசாப்ட் திட்டம் தீட்டியுள்ளது.

வெகுமதிகள் திட்டம்
மைக்ரோசாப்ட் நிறுவனம் பிங் தேடு பொறியை பயன்படுகிறதும் பயனர்களுக்கு வெகுமதி புள்ளிகளை அளிக்கும், இந்த வெகுமதி புள்ளிகளைப் பயன்படுத்தி இணையதளத்தில் இசை, திரைப்படம் மற்றும் பொருட்கள் வாங்குவது போன்றவற்றைச் செய்யலாம்.

 வெகுமதி திட்டம் எதற்காக?
வெகுமதி புள்ளிகள் திட்டத்தின் மூலமாக ஏற்கனவே உள்ள பிங் பயனர்கள் இதனால் நல்ல பயன் அடைவார்கள் என்றும் அதே நேரம் புதிய பயனர்களும் அதிகளவில் பிங் தேடு பொறியைப் பயன்படுத்துவார்கள் என்று மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கப்படுகின்றது.

வெகுமதி புள்ளிகள் எப்படிக் கிடைக்கும்?
வெகுமதி புள்ளிகளை மீட்டெடுத்துப் பயன்படுத்த இரண்டு நிலை உள்ளன. முதல் நிலையில் ஒரு நாளைக்கு 10 தேடல் என்ற விதத்திலும், இரண்டாம் நிலையில் ஒரு நாளைக்கு 50 தேடல் என்ற விதத்திலும் வெகுமதி புள்ளிகள் கிடைக்கும்.
பயன்படுத்தப்படும் தேடல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்கப்படும்.

 எட்ஜ் உலாவி பயனாளிகளுக்கு அதிகப் புள்ளிகள்
எட்ஜ் உலாவி பயனாளிகளாக நீங்கள் இருந்தால் 60 புள்ளிகள் கிடைக்கும், இதுவே பிற உலாவி அதாவது க்ரோம், மொஜில்லா உள்ளிட்ட உலாவிகளில் பிங் தேடு பொறியில் தேடும் போது 30 புள்ளிகள் கிடைக்கும்.
இது மட்டும் இல்லாமல் இங்கிலாந்து மைக்ரோசாப்ட் ஸ்டோரில் செலவு செய்யும் ஒவ்வொரு பவுண்டிற்கும் 1 புள்ளிகள் வெகுதமிகளாகக் கிடைக்கும்.

விரைவில் பிற நாடுகளில்
விரைவில் இந்த வெகுமதி திட்டம் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகின்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.