Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 17, 2017

தேனி அருகே கஞ்சா பயிரிட்டதை தட்டிக்கேட்ட விவசாயி கொலை: உடலை கிணற்றில் வீசி சென்ற கொலையாளிகள்


தேனி மாவட்டம், ஓடைப்பட்டி அடுத்த வெள்ளையம்மாள் புறத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. வெள்ளையம்மாள் புரத்தை சேர்ந்த விவசாயி பாண்டி அதே ஊரை சேர்ந்த தவமுருகன் என்பவருக்கு தனது நிலத்தை குத்தகைக்கு விட்டதாக கூறப்படுகிறது. கடந்த 4 வருடங்களாக அந்த நிலத்தில் முருங்கை பயிரிட்டு வந்த தவமுருகன் திடீரென நிலத்தை கொடுக்க மறுத்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது நிலத்துக்கு புல் அறுக்கச்சென்ற பாண்டி மாயமானார்.

அவரை மர்ம கும்பல் தாராபுரத்தில் கடத்திவைத்திருப்பதாக கூறி குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்து கடிதம் ஒன்றையும் அனுப்பியது. இதனால் மாயமான பாண்டி கடத்தப்பட்டிருப்பார் என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையில் புகாரளித்தனர். அவரது இரு சக்கர வாகனம் மேகமலை செல்லும் சாலையில் இருந்து கைப்பற்றப்பட்ட நிலையில் காவல்துறையினர் வழக்கை விசாரிப்பதில் வேகம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தில் உள்ள தரை கிணற்றில் விவசாயி பாண்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரை கஞ்சா வியாபார கும்பல் கொலை செய்து கிணற்றில் வீசி விட்டதாக அவரது உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

பாண்டியின் நிலத்தை குத்தகைக்கு எடுத்த தவமுருகன் அந்த முருங்கை தோட்டத்தின் ஒரு பகுதியில் கஞ்சா பயிரிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அதே இடத்தில் வைத்து கஞ்சா வியாபாரம் செய்து வந்தததை பார்த்து பாண்டி சத்தம் போட்டதாகவும் கூறப்படுகிறது. தெரியாமல் தவறு செய்து விட்டோம் என்று நடித்த தவமுருகன் கும்பல் பாண்டியை தீர்த்து கட்ட திட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. அதன்படி சில தினங்கள் கழித்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக முதல் அமைச்சரின் தனி பிரிவில் பாண்டி புகார் அளித்தது போன்று கடிதம் எழுதி உள்ளது. அது தொடர்பாக காவல்துறையினர் பாண்டியிடம் விசாரித்துள்ளனர். அப்போது பாண்டி தனக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை, தான் கடிதம் ஏதும் எழுதவில்லை என்றும் போலீசில் எழுதி கொடுத்துள்ளார்.

இதற்கு மறுநாள் தோட்டத்துக்கு சென்ற பாண்டியை கொலை செய்து கிணற்றுக்குள் வீசிவிட்டு அவரை கடத்தி வைத்திருப்பது போல நாடகமாடி போலீசாரையும் தங்களையும் ஏமாற்றி உள்ளனர் கொலையாளிகள் என்கின்றனர் உறவினர்கள். இரு தினங்கள் கழித்து பாண்டியின் சடலம் கிணற்றில் கிடைத்த பின்னர் சந்தேகத்துக்கு இடமான நபர்களான தவமுருகன், முருகன், குமார் ஆகிய 3 பேரும் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவல்துறையினர் சுனக்கம் காட்டுவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர் உறவினர்கள் கஞ்சா பயிரிட்டதை தட்டிக்கேட்ட விவசாயியை திட்டமிட்டு கொலை செய்தவர்களை விரைந்து கைது செய்து ஓடைப்பட்டி காவல்துறையினர் சட்டத்தின் மூலம் நீதியை நிலை நாட்டவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.