Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 6, 2017

எலுமிச்சம் பழத்தின் புளிப்புச் சுவைக்கு காரணம் என்ன? ..


டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.


 பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. நியூட்ரான்கள் அற்ற தனிமம் எது?
அ. ஹைட்ரஜன் ஆ. லீத்தியம் இ. பெரிலியம் ஈ. ஹீலியம்
(விடை : ஹைட்ரஜன்)

2. நீரின் மேல் சேகரிக்கக் கூடிய வாயு எது?
அ. ஹைட்ரஜன் ஆ. ஆக்ஸிஜன் இ. நைட்ரஜன் ஈ. கரிய மில வாயு
(விடை : ஹைட்ரஜன்)

3. எது நீருக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கும்?
.அ. மஞ்சள் பாஸ்பரஸ் ஆ. கற்பூரம் இ. கால்சியம் ஈ. பாதரசம்
(விடை : மஞ்சள் பாஸ்பரஸ்)

4. விளக்கில் உள்ள திரியில் எண்ணெய் ஏறுவதற்கு காரணம்
அ. எண்ணெய் மிகவும் இலேசானது ஆ. எண்ணெய் எளிதில் ஆவியாகும் இ. பரப்பு இழுவிசை ஈ. நுண்புழையேற்றம்
(விடை : நுண்புழையேற்றம்)

5. எலுமிச்சை பழத்தின் புளிப்புச் சுவைக்கு காரணம்
அ. டார்டாரிக் அமிலம் ஆ. ஹைடிரோ குளோரிக் அமிலம் இ. சிட்ரிக் அமிலம் ஈ. இவற்றுள் ஏதுமில்லை
(விடை : சிட்ரிக் அமிலம்)

6. பசுங்கணிகம் தோன்ற எது தேவை?
அ. தாமிரம் ஆ துத்தநாகம் இ. அலுமினியம் ஈ. மக்னீஸியம்
(விடை : மக்னீஸியம்)

7. மாங்கனீசின் முக்கிய தாது
அ. கிரையோலைட் ஆ ஹேமடைட் இ. பாக்ஸைட் ஈ. பைரோலுசைட்
(விடை : பைரோலுசைட்)

8. சிட்ரஸ்-என்பதன் கனி
அ. பெர்ரி ஆ. ட்ரூப் இ. ஹெஸ்பெரிடியம் ஈ. சோரோசிஸ்
(விடை : ஹெஸ்பெரிடியம்)

9. கமின பென்சின் என்பது?
அ. போரசின் ஆ. டைபோரேன் இ. கார்ப்ன் டெட்ராகுளோரைடு ஈ. சோடியம் போரோஹைட்ரைடு
(விடை : போரசின்)

10. மீதேனில் எத்தனை சிக்மா இணைப்புகள் உள்ளன?
அ. 1 ஆ. 0 இ. 3 ஈ. 4
(விடை : 4)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.