Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2017

பம்பர வடிவ வேர்க்கிழங்கு எதுன்னு தெரியுமா? ... பொது அறிவுக் கேள்விகள்


பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. மக்னீசியம் எதனுடைய ஓர் அங்கப் பொருள் ஆகும்?
அ. இரத்தம் ஆ. ஹீமோகுளோபின் இ. பச்சையம் ஈ. வைட்டமின் சி
(விடை : பச்சையம்)

2. பம்பர வடிவ வேர்க்கிழங்கு
அ. கேரட் ஆ. பீட்ரூட் இ. வெங்காயம் ஈ. முள்ளங்கி
(விடை : பீட்ரூட்)

3. சைமோபேஜ்கள் எதன் மீது தொற்றுகிறது?
.அ. பாக்டீரியம் ஆ. ஈஸ்ட் இ. மைக்கோபிளாஸ்மா ஈ. ஆல்கா
(விடை : ஈஸ்ட்)

4. கீழ்க்கண்டவற்றுள் எது டெர்பீன் ஆகும்?
அ. மார்பின் ஆ. பைட்டால் இ. பைப்ரின் ஈ குயினைன்
(விடை : பைப்ரின்)

5. மரங்கள் மற்றும் காய்கறிகளின் வளர்ப்பு
அ. எபிகல்சர் ஆ. ஆர்போரிகல்சர் இ. மொரிகல்சர் ஈ. ஆய்ஸ்டர்கல்சர்
(விடை : ஆர்போரிகல்சர்)

6. பொன்னி என்பது கீழ்வருபவற்றுள் எதன் பெயர் ஆகும்?
அ. பருத்தி ஆ. நெல் இ. நிலக்கடலை ஈ. சோளம்
(விடை : நெல்)

7. ஹெட்டிரோடிரைக்கஸ் பழக்கத்தை காட்டுவது
அ. வாச்சிரியா ஆ. டிக்டியோட்டா இ. எக்டோகார்பஸ் ஈ. ஸ்பைரோகைரா
(விடை : ஸ்பைரோகைரா)

8. ஒரு செல்லில் உள்ள ரைபோசோமின் முக்கிய பங்கு
அ. கொழுப்பு ஆ. ஒளிச்சேர்க்கை இ. புரத உற்பத்தி ஈ. சுரத்தல்
(விடை : புரத உற்பத்தி)

9. உயரமான உயிர் உள்ள மரம் எது?
அ. யூகலிப்டஸ் ஆ. பனை மரம் இ. செக்கோயா ஈ. பெரணி
(விடை : செக்கோயா)

10. பருத்தி இழை எதனால் ஆக்கப்படுகிறது?
அ. புரோட்டீன் ஆ. செல்லுலோஸ் இ. தாதுக்கள் ஈ. லிக்னின்
(விடை : செல்லுலோஸ்)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.