Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 18, 2017

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியவர் யார்? .. பொது தமிழ் கேள்விகள்


டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுதமிழ் வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

 பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது தமிழ் வினா விடைகள்
1. கீழ்வரும் தொடர் யரைக் குறிக்கிறது உத்தம சோழப் பல்லவராயன்
அ. அப்பர் ஆ. சுந்தரர் இ. சேக்கிழார் ஈ. மாணிக்கவாசகர்
(விடை : சேக்கிழார்)

2. கல்வியில்லாதப் பெண்கள் களர்நிலம் போன்றவர் என்று கூறியவர்
அ. பாரதியார் ஆ. பாரதிதாசன் இ. வாணிதாசன் ஈ. முடியரசன்
(விடை : பாரதிதாசன்)

3. செந்நாப் போதகர் என்று சிறப்பிக்கப்படும் சான்றோர் யார்?
.அ. கம்பர் ஆ. திருவள்ளுவர் இ. இளங்கோவடிகள் ஈ. சாத்தனார்
(விடை : திருவள்ளுவர்)

4. தெய்வப் புலவர் என்று போற்றப் பெறுபவர் யார்?
அ. அகத்தியர் ஆ. தொல்காப்பியர் இ. திருவள்ளுவர் ஈ. பரிமேலழகர்
(விடை : திருவள்ளுவர்)

5. அறம் வைத்து பாடப்பட்ட நூல் எது?
அ. நந்திக் கலம்பகம் ஆ. திருவெங்கைக் கலம்பகம் இ. திருக்காவலூர் கலம்பகம் ஈ. திருச்சிற்றம்பலக் கோவை
(விடை : நந்திக் கலம்பகம்)

6. குடிமக்கள் காப்பியம் எனப்படும் நூல் எது?
அ. இராமாயணம் ஆ. சிலப்பதிகாரம் இ. மணிமேகலை ஈ. பெரிய புராணம்
(விடை : சிலப்பதிகாரம்)

7. பங்கிம் சந்திர சட்டோபாத்தியார் எழுதிய வந்தே மாதரம் என்ற பாடலைத் தமிழில் தேசீய கீதங்கள் என்ற தலைப்பில் மொழி பெயர்த்தவர் யார்?
அ. கவிமணி ஆ. பாரதியார் இ. பாரதிதாசன் ஈ. வாணிதாசன்
(விடை : பாரதியார்)

8. மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று கூறியவர் யார்?
அ. டாக்டர் மு.வரதராசனார் ஆ. கலைஞர் கருணாநிதி இ. பேரறிஞர் அண்ணா ஈ. பாரதியார்
(விடை : பேரறிஞர் அண்ணா)

9. கல்வியில் பெரியன் இத்தொடரால் குறிக்கப்பெறும் சான்றோர் யார்?
அ. திருவள்ளுவர் ஆ. இளங்கோவடிகள் இ. சேக்கிழார் ஈ. கம்பர்
(விடை : கம்பர்)

10. பாவலரேறு எனப்படுபவர் யார்?
அ. சீத்தலைச் சாத்தனார் ஆ. தேவநேயப் பாவணர் இ. சோமசுந்தர பாரதியார் ஈ. பெருஞ்சித்தரனார்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.