Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 2, 2017

ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம் எதுன்னு தெரியுமா? ..


டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்

1. குறைத்தல் வினையில் சேர்க்கப்படுவது எது?
அ. ஹைட்ரஜன் ஆ. நீர் இ. ஆக்ஸிஜன் ஈ. பென்சீன்
(விடை : ஹைட்ரஜன்)

2. கீழ்கண்டவற்றுள் கலவைப் பொருள் எது?
அ. சுண்ணாம்பு ஆ. சமையல் உப்பு இ. சர்க்கரை ஈ. கடல்நீர்
(விடை : கடல்நீர் )

3. புகையிலையை உலராமல் பாதுகாத்து வைக்கப் பயன்படும் பொருள்
.அ. கிளிசரால் ஆ. கிளைக்கால் இ. எத்தனால் ஈ. அசிட்டோன்
(விடை : கிளிசரால்)

4. ஓசோன் அடுக்கில் ஓட்டை விழக்காரணம்
அ. குளோரோ புளரோ கார்பன் ஆ. நைட்ரஸ் ஆக்ஸைடு இ. நைட்ரஜன் ஆக்ஸைடு ஈ. இவை அனைத்தும்
(விடை : குளோரோ புளரோ கார்பன்)

5. கீழ்கண்டவற்றுள் எது மிகவும் கடினமானது?
அ. உருக்கு ஆ. பிளாட்டினம் இ. தங்கம் ஈ. வைரம்
(விடை : வைரம்)

6. இயற்கை ரப்பர் பின்வரும் எந்த சேர்மத்தின் பலபடியாகும்?
அ. பியூட்டாடையீன் ஆ எத்திலீன் இ. ஐசோபிரின் ஈ. புரோபிலீன்
(விடை : ஐசோபிரின்)

7. குறைந்த புகையுடன் எரியும் நிலக்கரி
அ. அனல் மிகு நிலக்கரி ஆ பழுப்பு நிலக்கரி இ. புகை மிகு நிலக்கரி ஈ. இவை எதுவும் இல்லை
(விடை : அனல் மிகு நிலக்கரி)

8. எரிதலின் போது நிகழும் வேதி மாற்றம்
அ. சிதைவடைதல் ஆ. ஆக்ஸிஜன் ஒடுக்கம் இ. பொதுவான ஆக்ஸிஜனேற்றம் ஈ. விரைவு ஆக்ஸிஜனேற்றம்
(விடை : சிதைவடைதல்)

9. வண்ணப்பிரிகை முறையில் பயன்படுத்தும் புறப்பரப்பு கவர்ச்சிப் பொருள்
அ. சிலிக்கா களி ஆ. பென்சீன் இ. அசிட்டோன் ஈ. ஈதர்
(விடை : பென்சீன்)

10. தனிம வரிசை அட்டவணையின் வலப்பக்கத்தில் உள்ளது எது?
அ. உலோகங்கள் ஆ. அலோகங்கள் இ. உலோகப் போலிகள் ஈ. அருமண் உலோகங்கள்
(விடை : அலோகங்கள்)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.