Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 4, 2017

வாழைப்பழ பிணைப்பு எதில் காணப்படுகிறதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்


டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.


 பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. கீழ்க்கண்டவற்றுள் வலுவற்ற பிணைப்பு எது?
அ. ஆஸ்பிரின் ஆ. மார்பின் இ. குளோரம் பெனிகால் ஈ. பெனிசிலின்
(விடை : மார்பின்)

2. இன்டிகோ என்பது ஒரு
அ. தொட்டிச் சாயம் ஆ. நேரடிச் சாயம் இ. அமிலச் சாயம் ஈ. காரச் சாயம்
(விடை : தொட்டிச் சாயம்)

3. பிக்ரிக் அமிலம் என்பது
.அ. டிரை நைட்ரோபீனால் ஆ. டிரை புரோமோபீனால் இ. டிரை புரோமோ அசிட்டானிலைடு ஈ. டிரை நைட்ரோ டொலுவின்
(விடை : டிரை நைட்ரோபீனால்)

4. ஆர்சனிக் மருந்துகள் எந்த நோயைக் குணப்படுத்தப் பயன்படுகின்றன?
அ. மஞ்சள் காமாலை ஆ. டைபாய்டு இ. சிபிலிஸ் ஈ. காலரா
(விடை : சிபிலிஸ்)

5. வாழைப்பழ பிணைப்பு எதில் காணப்படுகிறது?
அ. எத்திலீன் ஆ. பென்சீன் இ. டைபோரேன் ஈ. இவற்றுள் ஏதுமில்லை
(விடை : டைபோரேன்)

6. கிரெசாலை துத்தநாகத் தூளுடன் காய்ச்சி வடிக்கும் பொழுது கிடைப்பது
அ. பென்சீன் ஆ சைலின் இ. டொலுவின் ஈ. க்யூமின்
(விடை : டொலுவின்)

7. லூனார் காஸ்டிக் என்பது?
அ. சோடியம் ஹைட்ராக்ஸைடு ஆ பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு இ. வெள்ளி நைட்ரேட் ஈ. சோடியம் நைட்ரேட்
(விடை : வெள்ளி நைட்ரேட்)

8. தாமிரத்தை பிரித்தெடுக்கையில் வெளிப்படுவது எது?
அ. இரும்பு சிலிகேட் ஆ. கால்சியம் கார்பனேட் இ. கால்சியம் ஆக்ஸைடு ஈ. கால்சியம் சிலிகேட்
(விடை : கால்சியம் சிலிகேட்)

9. உட்ஸ் வினையில் பயன்படும் உலோகம் எது?
அ. சோடியம் ஆ. பொட்டாசியம் இ. லித்தியம் ஈ. நிக்கல்
(விடை : சோடியம்)

10. அணைவுச் சேர்ம வேதியியலின் தந்தை யார்?
அ. வெர்னர் ஆ. சிட்விக் இ. பாலிங் ஈ. மெண்டலீப்
(விடை : வெர்னர்)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.