Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 14, 2017

கதறடிக்கும் "வான்னாகிரை" வைரஸ்.. 99 நாடுகள் பாதிப்பு.. இந்தியாவிலும் பரவியது! #WannaCry


உலகம் முழுவதும் புதிய வைரஸ் தாக்குதல் கம்ப்யூட்டர்களைப் பதம் பார்த்து வருகிறது. வான்னாகிரை வைரஸ் என்ற இந்த வைரஸை, ஹேக்கர்கள் ஏவியுள்ளனர். பணம் பறிக்கும் நோக்கில் இந்த வைரஸை இந்தக் கும்பல் ஏவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் 99 நாடுகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன.
படு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முழுமையான பாதுகாப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இன்டர்நெட் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை பிரித்து வைப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்கிறார்கள்.
ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ் என எந்தத் தற்காப்பும் கை கொடுக்கவில்லையாம். அதைத் தாண்டி இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருகிறதாம்.

 ஹேக்கர்கள் அட்டகாசம்
ஹேக்கர் கும்பலின் கைவரிசைதான் இந்த வைரஸ். இந்த வைரஸ் தாக்கும் கம்ப்யூட்டர்கள் லாக் ஆகி விடும். இதைத் தொடர்ந்து வைரஸை அனுப்பிய ஹேக்கர் கும்பல், அன்லாக் செய்ய உதவுகிறோம். பணம் கொடுங்க என்று மிரட்டி பண் பறிக்கிறார்களாம்.

வெள்ளிக்கிழமை முதல் பரவுகிறது
கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த மிரட்டல் வைரஸ் பரவி வருகிறது. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான். எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கம்ப்யூட்டர்களை லாக் செய்து விட்டது. தற்போது லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இது லாக் செய்துள்ளது.

 பேரைப் பாருங்க
இந்த வைரஸுக்கு பெயர் வானாகிரிப்டோஆர் 2.0 அல்லது வானாகிரை என்பதாகும். இங்கிலாந்து, ஸ்பெயின் நாடுகளைத்தான் இது கடுமையாக பாதித்துள்ளது. மேலும் பல நாடுகளையும் இது தொடர்ந்து தாக்கி வருகிறது. 99 நாடுகள் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 இந்தியாவிலும் தாக்குதல்
இந்தியாவிலும் கூட இந்த வானாகிரை வைரஸ் பரவியுள்ளது. ஆந்திர மாநில காவல்துறையின் கம்ப்யூட்டர்களை இது தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் வங்கி நெட்வொர்க்கை குறி வைத்துத்தான் இந்த வைரஸ் பரவி வருகிறது என்பதால் ஏடிஎம் சேவைகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளது. ஆன்லைன் சேவைகளும் கடும் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புகள உள்ள

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.