Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 25, 2017

5ஜி : ஆப்பிளின் சுயநலமான மற்றும் இரகசியமான சோதனை.!



இன்டர்நேஷ்னல் கம்பெனிகளில் பிராண்ட் மதிப்பீட்டில் முதல் இடம் வகிப்பது ஆப்பிள் நிறுவனம் தான்.ஸ்மார்ட்போன் மார்கெட்டில் பல மாடல் ஸ்மார்ட்போன்கள் இருந்தாலும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கென மக்களிடம் எப்பொழுதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை வயர்லெஸ் தொழில்நுட்பங்களை சோதிக்க  தயாராக உள்ளது. மேலும் 5ஜி என்று அழைக்கப்படுகிற இணையவேகத்தை செயல்படுத்த தீவிரமாக முயற்சி செய்துவருகிறது.

இந்த 5ஜி சேவை பொருத்தமாட்டில் ஆப்பிள்-ன் தனது மொபைல் மாடல்களுக்கு மட்டுமே சுயநலமாக இணையவேகத்தை அதிகரிக்க இந்த சோதனையை முயற்சி செய்து வருகிறது.

எப்சிசி அறிக்கை:
மில்லிமீட்டர் அலை எனப்படும் புதிய வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கு ஒரு பரிசோதனை உரிமத்திற்கான விண்ணப்பம் செவ்வாயன்று கையொப்பம் இடப்பட்டது. என எப்சிசி அறிக்கையில் கூறப்பட்டது.
 
ஆப்பிள் இன்க்:
ஆப்பிள் இன்க். செல்லுலார் இணைப்பு செயல்திறனை மதிப்பீடு செய்ய முயற்சிக்கிறது. இவை டிரான்ஸ்மிட்டர்கள் தொழிழ்நுட்பத்தை செயல்படுத்தி பனிகளை செய்துவருகிறது ஆப்பிள் நிறுவனம். இந்த மதிப்பீடுகள், வயர்லெஸ் கேரியர்கள் கொண்டு எதிர்கால 5ஜி நெட்வொர்க்குகள் சாதனங்களின் செயல்பாட்டிற்கு பொருந்தக்கூடிய பொறியியல் தரவுகளை வழங்கும்.
 
மில்பிடாஸ்:
ஆப்பிள் கட்டுப்பாட்டு வசதிகளான கபெர்டினோ மற்றும் மில்பிடாஸ், சிஏ ஆகிய இடங்களில் அமைந்துள்ள இரண்டு நிலையான புள்ளிகளிலிருந்து ஆப்பிள் 5ஜி செயல்திறனை அனுப்ப விரும்புகிறது. இதன் மூலம் இன்டெர்நெட் வேகம் அதிகரிக்கும்.
 
ஜிஎச்இசெட் பேண்ட்:
ஆப்பிள் பயன்பாடு குறிப்பாக 28 மற்றும் 39 ஜிஎச்இசெட் பேண்ட் குறிப்பிட்டுள்ளது, எப்சிசி கடந்த ஆண்டு 5ஜி பயன்பாடுகள் வணிக பயன்பாட்டிற்கு ஒப்புதல் பெற்றது. மேலும் ஏ.ஹெச் சிஸ்டம்ஸ் மற்றும் அனலாக் டிவைசஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் தொழில்நுட்பங்களை கொண்டு பல்வேறு சோதனைகளை செயல்படுத்துகிறது, ஆப்பிள் நிறுவனம்.
 
5ஜி ;
5ஜி அல்லது மில்லிமீட்டர் அலை தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய மாற்றங்கள் ஏறப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இவை நெட்வோர்க்கில் மிகப் பெரிய சாதனை ஏறப்படுத்தும் என தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.