Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 18, 2017

மின் விசிறியில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் என்ன?.. பொது அறிவுக் கேள்விகள்


பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.


பொது அறிவு வினா விடைகள்
1. கதிரியக்கத் தனிமங்களின் எண்ணிக்கை
அ. 30 ஆ. 40 இ. 50 ஈ. 60
(விடை : 30)

2. அணுவில் உள்ள பிரிக்கக்கூடிய துகள்கள்
அ. புரோட்டான்கள் ஆ. நியூட்ரான்கள் இ. எலெக்ட்ரான்கள் ஈ. இவை அனைத்தும்
(விடை : இவை அனைத்தும்)

3. தனிமத்தின் மிகச்சிறிய அலகு
அ. அணு ஆ. எடை இ. நிறை ஈ. வேகம்
(விடை : அணு)

4. அணு என்ற சொல்லுக்கு என்ன பொருள்
அ. பிரிக்க இயலாதது ஆ. பிரிக்கக் கூடியது இ. சேர்க்க இயலாதது ஈ. சேர்க்கக் கூடியது
(விடை : பிரிக்க இயலாதது)

5. வெப்ப ஆற்றலை கொடுக்கும் முதன்மை மூலம் எது?
அ. அகச்சிவப்பு கதிர்கள் ஆ. சூரியன் இ. புற ஊதாக் கதிர்கள் ஈ. மேற்கூரிய எதுவுமில்லை
(விடை : சூரியன்)

6. வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதை கண்டறிந்தவர்
அ. கலிலியோ ஆ ஆர்க்கிமிடிஸ் இ. ஜேம்ஸ் ஜூல் ஈ. நியூட்டன்
(விடை : ஜேம்ஸ் ஜூல்)

7. கோள்களுக்கும் சூரியனுக்கும் இடையே செயல்படும் விசை
அ. நிலை மின்னியல் விசை ஆ ஈர்ப்பு விசை இ. கணத்தாக்கு விசை ஈ. புற விசை
(விடை : ஈர்ப்பு விசை)

8. மின் விசிறியில் ஏற்படும் ஆற்றல் மாற்றம் என்ன?
அ. மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக ஆ. இயக்க ஆற்றல் மின் ஆற்றலாக இ. வேதி ஆற்றல் வெப்ப ஆற்றலாக ஈ. வேதியாற்றல் மின் ஆற்றலாக
(விடை : மின் ஆற்றல் இயக்க ஆற்றலாக)

9. நீர் பனிக்கட்டியாக உறையும் போது
அ. வெப்பம் உட்கவரப்படும் ஆ. வெப்பநிலை உயரும் இ. வெப்பநிலை குறையும் ஈ. வெப்பம் வெளியிடப்படும்
(விடை : வெப்பம் வெளியிடப்படும்)

10. நிலக்கரியை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம்
அ. அணு மின்சாரம் ஆ. அனல் மின்சாரம் இ. நீர் வழி மின்சாரம் ஈ. சூரிய ஆற்றல் மின்சாரம்
(விடை : அனல் மின்சாரம்)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.