Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 23, 2017

ஆபத்தான பாஸ்வேர்டுகள்!


வங்கிக் கணக்கு, சமூகவலைதளம், மின்னஞ்சல் முகவரி ஆகியவைகள் முடக்கப்படுவது குறித்தும், அதிலிருக்கும் தகவல்கள் திருடப்படுவது குறித்தும் அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இணைய பாதுகாப்புக்கு பெயர் போன அமெரிக்காவிலும் இத்தகைய சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்றால், நமது நாட்டில் கேட்கவா வேண்டும்?
மேற்கண்ட மோசடிகளை ஆய்வு செய்தபோது, ஒரு புதிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது, அனைத்து கணக்குகளிலும் குறிப்பிட்ட சில பாஸ்வேர்டுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதும், அதை எப்படியோ தெரிந்து கொண்ட மர்ம நபர்கள், பிறரின் வங்கிக் கணக்குகளில் ஊடுருவி மோசடியில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்தது. அவற்றில் பெரும்பாலான பாஸ்வேர்டுகள் மிகவும் எளிதாகவும், யாரும் எளிதில் ஊகிக்க கூடியவை ஆகும். அதை இப்போது நாம் காணலாம்:

* 123456
*  password
* 12345
* 12345678
* qwerty
* 1234567890
* 1234
* baseball
* dragon
* football
* 1234567
* monkey
* letmein
* abc123
* 111111
* mustang
* access
* shadow
* master
* michael
* superman
* 696969
* 123123
* batman
* trustno1

இந்த பாஸ்வேர்டுகளில் ஏதேனும் ஒன்று நீங்கள் பயன்படுத்தும் பாஸ்வேர்டாக உள்ளதா? சிறிதும் தாமதிக்க வேண்டாம். உடனடியாக அதை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களது கணக்குகளும் முடக்கப்படலாம் அல்லது தகவல்கள் திருடப்படலாம்.
- வீ.சண்முகம்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.