Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 19, 2017

எரிபொருளில் உள்ள வேதியாற்றல் எவ்வகை ஆற்றலாக மாறுகிறது? .


பொது அறிவுக் கேள்விகள் டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. எரிபொருளில் உள்ள வேதியாற்றல் எவ்வகை ஆற்றலாக மாறுகிறது?
அ. வெப்ப ஆற்றல் ஆ. ஒளி ஆற்றல் இ. வெப்பஆற்றல், ஒளி ஆற்றல் ஈ. மின் ஆற்றல்
(விடை : வெப்பஆற்றல், ஒளி ஆற்றல்)


2. ஒரு இயங்கும் குளிர்ப்பதனி ஒரு மூடிய அறையினுள் வைக்கப்பட்டுள்ள போது அறையின் வெப்பநிலை
அ. உயரும் ஆ. குறையும் இ. மாறாது ஈ. அறையின் பரப்பினைச் சார்ந்திருக்கும்
(விடை : உயரும்)


3. இயல்பு வெப்பநிலையில் பனிக்கட்டி ஒரு அறையினுள் வைக்கப்பட்டிருப்பின் அது பின்வருவனவற்றுள் எவ்வாறு இருக்கும்?
அ. கதிர் வீசாது ஆ. குறைவாக கதிர்வீசுகிறது ஆனால் அதிகமாக உட்கவருகிறது இ. உட்கருவதைவிட அதிகமாக கதிர்வீசும் ஈ. உட்கவரும் அளவு கதிர்வீசும்
(விடை : குறைவாக கதிர்வீசுகிறது ஆனால் அதிகமாக உட்கவருகிறது)


4. கீழ்க்கண்டவற்றுள் எது அதிகமான அளவில் வெப்பத்தைக் கதிர்வீசும்
அ. பளபளப்பான வெண்மைப்பரப்பு ஆ. சொரசொரப்பான வெண்மைப் பரப்பு இ. பளபளப்பான கருமைப் பரப்பு ஈ. சொரசொரப்பான கருமைப் பரப்பு
(விடை : சொரசொரப்பான கருமைப் பரப்பு)


5. வெப்ப மாற்றீடற்ற நிகழ்வின் போது ஒரு தொகுதியின் மாற்றமடையாத பண்பு எது?
அ. வெப்பநிலை ஆ. பருமன் இ. வெப்பம் ஈ. அழுத்தம்
(விடை : வெப்பம்)


6. இயல்பு வாயு ஒன்றின் அக ஆற்றல் இருப்பது
அ. பகுதி இயக்க ஆற்றலாக ஆ பகுதி நிலையாற்றலாக இ. முழுவதும் நிலையாற்றலாக ஈ. முழுவதும் இயக்க ஆற்றலாக
(விடை : முழுவதும் இயக்க ஆற்றலாக)


7. குறிப்பிட்ட வெப்ப நிலையில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் இவற்றின் ஆர்.எம்.எஸ் திசைவேகங்களின் தகவு
அ. 4 ஆ 10 இ. 16 ஈ. 8
(விடை : 4)


8. வாயுவின் இயக்கவியற் கொள்கையின்படி மூலக்கூறு ஒன்றின் சராசரி இயக்க ஆற்றல்
அ. 3/2 கேடி ஆ. 2/3 கேடி இ. 1/2 ஆர்டி ஈ. 3/4 கேடி
(விடை : 3/2 கேடி)


9. வெப்ப இயக்கவியலின் முதல்விதி எதன் அழிவின்மையால் உண்டாகும் விளைவு
அ. உந்தம் ஆ. மின்னூட்டம் இ. நிறை ஈ. ஆற்றல்
(விடை : ஆற்றல்)


10. கிடைத்தளப்பரப்பில் நகரும் எறும்பு ஒன்றிற்கான மொத்த உரிமைப்படிகள்
அ. 1 ஆ. 2 இ. 3 ஈ. 6
(விடை : 2)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.