Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 22, 2017

செய்தித் தொடர்புச் சைகைகளை அனுப்புவதற்குப் பயன்படுவது எதுன்னு தெரியுமா? ..


டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.


பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. இராமன் நிறமாலை உதவியுடன் மூலக்கூறு அமைப்புகள் பிரிக்கப்பட்டு .............. வகைப்படுத்தப்படுகின்றன?
அ. சேர்மங்கள் ஆ. உப்புகள் இ. அமிலங்கள் ஈ. தனிமங்கள்
(விடை : தனிமங்கள்)

2. அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் மீது பட்டு சிதறலடைந்த ஒளி ஃபோட்டான்களைக் கொண்டு எவற்றை எளிதாக அறியலாம்
அ. இராமன் விளைவு ஆ. டின் விளைவு இ. ஒளி மின்விளைவு ஈ. அலைமுகப்பு
(விடை : இராமன் விளைவு)

3. முதன் முதலில் வளிமண்டல மூலக்கூறுகளில் ஒளிச்சிதறல் பற்றிக் கூறியவர் யார்?
.அ. ஹைஜென்ஸ் ஆ. லார்ட் ராலே இ. ஃப்ரெநெல் ஈ. ஐன்ஸ்டீன்
(விடை : லார்ட் ராலே)

4. வௌவால்கள் தாம் பறக்கும் திசையை எதனைப் பயன்படுத்தி அறிகின்றன?
அ. குற்றொலி ஆ. சைகை இ. மீயொலி ஈ. மேற்கூரிய எதுவுமில்லை
(விடை : மீயொலி)

5. செய்தித் தொடர்புச் சைகைகளை அனுப்புவதற்குப் பயன்படுவது எது?
அ. ஒளிஇழை ஆ. செவ்வகப்பட்டகம் இ. காற்று ஈ. கண்ணாடி
(விடை : ஒளிஇழை)

6. ஒலியின் மதிப்பு எதனைப் பொறுத்து இருக்கும்?
அ. அதிர்வெண் ஆ அலைவுக்காலம் இ. சைகை ஈ. வீச்சு
(விடை : வீச்சு)

7. ஒரு ஒளியின் அலைநீளம் நான்கு மடங்காகக் குறைந்தால் அதன் சிதறல் அளவு
அ. 16 மடங்கு அதிகரிக்கும் ஆ 16 மடங்கு குறையும் இ. 256 மடங்கு அதிகரிக்கும் ஈ. 256 மடங்கு குறையும்
(விடை : 256 மடங்கு அதிகரிக்கும்)

8. பெரிஸ்கோப் கலைடாஸ்கோப் போன்றவற்றில் எந்த தத்துவம் பயன்படுத்தப்படுகிறது
அ. பன்முக எதிரொளிப்பு ஆ. ஒளிவிலகல் இ. ஒளி பிரதிபலிப்பு ஈ. முழு அக எதிரொளிப்பு
(விடை : பன்முக எதிரொளிப்பு)

9. ஒளி எதிரொளிப்பு தளத்தில் படுகின்ற ஒளிக்கதிர் ........... ஆகும்
அ. எதிரொளிப்புக் கதிர் ஆ. படுகதிர் இ. குத்துக்கோடு ஈ. படுகோணம்
(விடை : படுகதிர்)

10. லெக்லாஞ்சி மின்கலனின் மின் இயக்கு விசை ................. ஆகும்
அ. 1.5 வி ஆ. 2.5 வி இ. 1.8 வி ஈ. 2.1 வி
(விடை : 1.5 வி)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.