Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 17, 2017

ஐஸ்கிரீம் உருகுவது என்ன மாற்றம் தெரியுமா?.. பொது அறிவுக் கேள்விகள்


பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம்
அ. இயற்பியல் மாற்றம் ஆ. இடப்பெயர்ச்சி இ. அறிவியல் மாற்றம் ஈ. வேதியியல் மாற்றம்
(விடை : இயற்பியல் மாற்றம்)

2. எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது ஆவியாதல்
அ. ஆவியாதல் ஆ. திண்மமாதல் இ. திரவமாதல் ஈ. பதங்கமாதல்
(விடை : ஆவியாதல்)

3. இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் ஆல்கஹால்
அ. ஆல்கஹால் ஆ. மீத்தேன் இ. ஈத்தேன் ஈ. பீனால்
(விடை : ஆல்கஹால்)

4. பொருள்களின் இயக்கத்திற்கும் செயல்படும் விசைகளுக்கும் இடையிலான தொடர்பைப் பற்றி கூறுவது
அ. இயக்கவியல் ஆ. எந்திரவியல் இ. விசையியல் ஈ. நிலையியில்
(விடை : விசையியல்)

5. அலைவுறும் ஊசல் எவ்வகை ஆற்றலைப் பெற்றுள்ளது?
அ. நிலையாற்றல் ஆ. இயக்க ஆற்றல் இ. வெப்ப ஆற்றல் ஈ. ஒலி ஆற்றல்
(விடை : இயக்க ஆற்றல்)

6. ஓய்வு நிலையிலுள்ள கனமான பொருளின் உந்நம்
அ. மிக அதிகம் ஆ மிகக் குறைவு இ. முடிவிலி ஈ. சுழி
(விடை : சுழி)

7. உந்த மாறுபாடு வீதத்திற்குச் சமமான இயற்பியல் அளவு
அ. இடப்பெயர்ச்சி ஆ. முடுக்கம் இ. விசை ஈ. கணத்தாக்குவிசை
(விடை : விசை)
8. எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள்
அ. நைட்ரஜன் ஆ. ஹைட்ரஜன் இ. ஆக்ஸிஜன் ஈ. கார்பன்னை ஆக்ஸைடு
(விடை : நைட்ரஜன்)

9. ஒரு பொருளின் முடுக்கத்திற்குக் காரணம்
அ. சமன் செய்யப்பட்ட விசை ஆ. சமன் செய்யப்படாத விசை இ. நிலைமின்னியல் விசை ஈ. கணத்தாக்கு விசை
(விடை : சமன் செய்யப்படாத விசை)

10. பொருளின் நிலைமத்திருப்புத்திறன் எதனைச் சார்ந்ததல்ல?
அ. கோணத்திசைவேகம் ஆ. நிறை இ. சுழற்சியின் அச்சு ஈ. நிறையின் பரவல்

(விடை : கோணத்திசைவேகம்)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.