Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 27, 2017

அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள தனிமம் எதுன்னு தெரியுமா? .. பொது அறிவுக் கேள்விகள்


டி.என்.பி.எஸ்.சி, டி.இ.டி, போலீஸ் தேர்வு, நுழைவுத் தேர்வு மற்றும் அரசுத் தேர்வாணையம் நடத்தும் போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் பயன்படும் வகையில் பொதுஅறிவு வினா விடை கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.

பொது அறிவு வினா விடைகள்
1. பீனாலுக்கு வழங்கப்படும் வேறு பெயர்
அ. சாலிசிலிக் அமிலம் ஆ. கார்பாலிக் அமிலம் இ. மெத்தில் அசிட்டேட் ஈ. கிளிசரால்
(விடை : கார்பாலிக் அமிலம்)

2. மிகவும் லேசான எரியாத தனிம வாயு எது?
அ. He ஆ. N இ. C ஈ. Ar
(விடை : He)


3. அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள தனிமம்
.அ. தாலியம் ஆ. இண்டியம் இ. காலியம் ஈ. அலுமினியம்
(விடை : காலியம்)

4. தனிம அட்வணையில் போரான் குடும்பம் அமைந்துள்ள தொகுதி?
அ. 13 ஆ. 14 இ. 15 ஈ. 16
(விடை : 13)

5. பின்வருவனவற்றுள் எத்தனிமம் 13வது தொகுதியைச் சேர்ந்தது அல்ல?
அ. B ஆ. Al இ. Ge ஈ. In
(விடை : Ge)

6. அணுவின் எலக்ட்ரான் நாட்டம்
அ. உருவ அளவுடன் நேர்விகிதத் தொடர்புடையது ஆ உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது இ. தொடர்புடையது ஈ. எதுவுமில்லை
(விடை : உருவ அளவுடன் எதிர்விகிதத் தொடர்புடையது)

7. ஒரு மீள்வினையின் தொடக்க நிலையில் பின்னோக்கு வினையின் வினை வேகம்
அ. முன்னோக்கு வினையின் வேகத்திற்குச் சமம் ஆ முன்னோக்கு வினையின் வேகத்தைவிட அதிகம் இ. ஒன்று ஈ. பூஜ்ஜியம்
(விடை : பூஜ்ஜியம்)

8. மந்தவாயுக்களின் எலக்ட்ரான் நாட்டம்
அ. குறைவு ஆ. அதிகம் இ. பூஜ்யம் ஈ. எதிர்க்குறியீடு
(விடை : குறைவு)

9. பொட்டாஸ் படிகாரம் பெருமளவில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ. அலுநைட் ஆ. அலுமினான் இ. பெரிக் படிகாரம் ஈ. குரோம் படிகாரம்
(விடை : அலுநைட்)

10. ஹேலஜன்களின் தொகுதி
அ. 14 ஆ. 15 இ. 17 ஈ. 18
(விடை : 17)

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.