Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2017

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்


தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு மாத்திரையை எடுத்தாலும், அது தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் செல்லும். சில நேரங்களில் உங்கள் குழந்தையின் பால் பற்களில் கருப்பு நிற கறை இருப்பது போன்று தெரியும். அப்படி தெரிந்தால், அதற்குஅந்த மாத்திரை தான் காரணம். அதுமட்டுமின்றி, தாய் எடுத்த மாத்திரையின் பக்க விளைவு குழந்தைக்கும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்ட மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* பூண்டு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட, குழந்தைக்கு அது பிடிக்காமல் போகலாம். அப்படி உங்கள் குழந்தைக்கு பூண்டு பிடிக்கவில்லையெனில், தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கும். எனவே நீங்கள் பூண்டை உணவில் அதிகம் சேர்த்து, உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, நீங்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

* தாய்ப்பால் கொடுக்கும் போதும், மீன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

* காரமான உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையின் உடலினுள் சென்று, அவர்களின் செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் சில நேரங்களில் வாந்தியை கூட ஏற்படுத்தும். எனவே மிகவும் காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலில் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை தாய்மார்கள் உட்கொண்டால், அது குழந்தைகளையும் பாதிக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு வாயு உற்பத்தி செய்யும் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளான பீன்ஸ், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் இதுப்போன்ற வாயு உற்பத்தியை அதிகரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவிர்க்க வேண்டும்.

* பால் மற்றும் பால் பொருட்களால் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிறைய குழந்தைகளால் மாட்டுப் பாலின் புரோட்டீனை செரிக்க முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீஸ், தயிர் மற்றும் இதர பால் பொருட்கள் உட்கொண்டால், குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அடிவயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடும். எனவே குழந்தையின் நலனுக்காக இவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.