Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2017

செய்து பாருங்கள்! - அழகிய நோட்புக் அட்டை!-குட்டீஸ் ஸ்பெஷல்


வருங்கள் குட்டீஸ்... சாதாரணமாக இருக்கிற உங்கள் நோட்டு புத்தக அட்டையினை நம் கற்பனைத் திறமை பயன்படுத்தி அழகுபடுத்தலாம்! உங்கள் பிரண்ட்ஸ் எந்த கடையிலடா வாங்கினேனு கேப்பாங்க.. அப்போ உங்க பெயரைச் சொல்லி அந்த கடையில வாங்கினேன்னு சொல்லி அசத்துங்க!

தேவையான பொருட்கள்: பென்சில், ரூலர், பிளெயின் மற்றும் டிசையிண்ட் பேப்பர், சாதா மற்றும் ஜிக் ஜாக் சிசர்ஸ், கம் ஸ்டிக்.

செய்முறை:

1. முதலில் பென்சில் மற்றும் ரூலரை பயன்படுத்தி 1 மற்றும் ஒன்றரை செ.மீ. அகலத்தில் கோடு வரைந்து அதை பிளெயின் மற்றும் ஜிக்-ஜாக் சிசர்ஸ் ஆல் கட் செய்து கொள்ளவும்.

2. பிளெயின் பேப்பரால், நோட் புக் அட்டை பகுதி முழுவதும் ஒட்டிவிட்டு. அதன் மேல் சிறிய ரிப்பன் போல் வெட்டி வைத்துள்ள கலர் பேப்பர்களை வரிசையாக ஒட்டவும்.

3. வெளியே நீட்டிக் கொண்டிருக்கிற பகுதியை நன்கு க்ளு தடவி மடித்து உள்பக்கமாக ஒட்டி விடவும்.

4. உட்புறமுள்ள அட்டையை சரியாக அளந்து இரண்டு பேட்டர்ன்ட் கலர் பேப்பரை வெட்டி எடுத்து உட்புற அட்டையில் ஒட்டி விடவும்.

இப்போ பாருங்க உங்க நோட்டு புத்தகத்தை... அச்சோ சூப்பரோ சூப்பரா!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.