November 10, 2016
“மோடிஜி, எனக்கு ஒரு உண்மை தெரியணும்” – ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்ட நெல்லை வக்கீல்!!
500, 1000ம் ரூபாய் தடை விவகாரத்தில், மக்கள் மத்தியில் பிரதமர் மோடிக்கு பின்னடைவு என்றாலும், பொருளாதார வல்லுனர்கள் இந்த முடிவை சரியாகவே பார்க்கின்றனர். ஆனால், மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் செய்தது தான் குற்றமாக பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்த திடீர் முடிவு தொடர்பாக பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா என்பவர், ஆர்.டி.ஐ. மூலம் பல்வேறு கேள்விகளை கேட்டு, பிரதமர் மோடிக்கு குடைச்சலை ஏற்படுத்தியுள்ளார்.
1.ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார் என்பதன் விவரம் தர வேண்டும்.
2.ரூபாய் நோட்டுக்களானது ரிசர்வ் வங்கி கவர்னரால் கையொப்பமிட்டு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்குவழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு எந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது அதன் விவரம் தர வேண்டும்.
3.ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அந்த முடிவானது ரிசர்வ் வங்கி கவர்னர் அவர்களுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது எனில் மேற்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமருக்கு எந்த அடிப்படையில் எந்த சட்டத்தின் கீழ்அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.
4.ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை பிரதமர் தடை செய்து உத்தரவிட்டதை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த அடிப்படையில் அந்த உத்தரவினை ஏற்பளிப்பு செய்தார் என்ற விவரம் தர வேண்டும்.
5.ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது தொடர்பாக என்னென்ன கோப்புகளில் பிரதமர் அவர்கள் கையொப்பமிட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ளார் அந்த கோப்புகளின் நகல் தர வேண்டும் என்று நிறைய கேள்விகளை அதில் கேட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடியின் அமைச்சகம் இந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது தொடர்பான ஆலோசனையில் இருக்கின்றது.
“மோடிஜி, எனக்கு ஒரு உண்மை தெரியணும்” – ஆர்.டி.ஐ. மூலம் கேள்வி கேட்ட நெல்லை வக்கீல்!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
November 10, 2016
Rating: 5
1 comment:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.
Subscribe to:
Post Comments (Atom)


Good question but all this coming under what section? Yes changing the notes alone is not going to solve corruption, so this change cost us 20,000 crores but what is the benefit?
ReplyDelete