Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 20, 2017

சமையல் டிப்ஸ்... பெண்கள் மட்டும் அல்ல


*இட்லி மாவு நீர்த்துப் போய்விட்டால் அதில் எண்ணெய்யில்லாமல் வறுத்த ரவையை சிறிது கலந்து அரைமணி நேரம் ஊறிய பின் இட்லி வார்க்கவும்.

*கோதுமை மாவுடன் சிறிது ரவை சேர்த்துப் பிசையுங்கள், பூரி எத்தனை மணி நேரமானாலும் கரகரப்பாகவும் உப்பலாகவும் இருக்கும்.
*இட்லி மாவில் சிறிது நல்லெண்ணெய்யை ஊற்றிக் கலந்த பின் இட்லி வார்த்தால் மென்மையாக இருக்கும்.

*பாலில் எலுமிச்சைச்  சாறு கலந்து கொதிக்க வைத்து வடிகட்டினால் பன்னீர் கிடைக்கும். மீந்துள்ள திரவத்தை சூப், குருமா போன்றவற்றில் சேர்க்கலாம். சப்பாத்தி பிசையவும் பயன்படுத்துங்கள். சத்து நிறைந்த திரவம் வீணாகாது.

*புதினா, கொத்துமல்லி, கறிவேப்பிலை போன்றவற்றை துவையல், சட்னி செய்யும்போது பச்சையாகவே அரைப்பது நல்லது. சத்துகள் அழியாமல்  இருக்கும்.

*கீரையைக் கூட்டு செய்யப் பொடி பொடியாக நறுக்காமல், ஒன்றிரண்டாக ஆய்ந்து, அளவான தண்ணீருடன் குக்கரில் வேகவிட்டு, மிக்ஸியில் அரைக்கவும். அரிந்தது போல் மசிந்துவிடும். சத்தும் கெடுவதில்லை; வேலையும் மிச்சமாகும்.
- அமுதா அசோக்ராஜா

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.