July 11, 2017
சத்தான, சுவையான ப்ராக்கோலி சப்பாத்தி செய்ய...!
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - கால் கப்
இஞ்சி - சிறு துண்டு
கோதுமை மாவு - 2 கப்
உப்பு - தேவைகேற்ப
கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் ப்ராக்கோலி சேர்த்து 5 நிமிடம் கழித்து இறக்கி ஆற விடவும்.
* மிக்சியில் ஆற வைத்த ப்ரோகோலி, இஞ்சி, இரண்டு டீஸ்பூன் ப்ரோகோலி வேகவைத்த தண்ணீர், கொத்தமல்லி சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.
* ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, உப்பு, அரைத்த விழுது, தேவையான அளவு வடிகட்டிய தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் மாவை சப்பாத்திகளாக திரட்டி, மடித்து மறுபடியும் திரட்டி வைக்கவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் உருட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்தது திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான சத்தான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி. இதற்கு தொட்டு கொள்ள தயிர் பச்சடி சுவையாக இருக்கும்.
சத்தான, சுவையான ப்ராக்கோலி சப்பாத்தி செய்ய...!
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.