மழை மெல்ல தூற ஆரம்பித்தது.
வரிசை வீடு தான். என்றாலும் மொட்டை மாடி எல்லோருக்கும் பொதுதான்.
வள்ளி புத்தகத்தை படித்துக்கொண்டிருந்த அபியை விரட்டினாள்.
“சீக்கிரம் போடி. மொட்டை மாடியில் காய வச்சுருக்கிற மிளகாய், தனியாவை எடுத்துட்டு வா. நாளைக்கு பருப்பு வாங்கிப் போட்டு வறுத்து, சாம்பார் பொடி அரைச்சுட்டு வரணும். கடையில பொடி வாங்கி கட்டுப் படி ஆகலை” என்றாள்.
அபி அசையவில்லை.
“என்னடி! நான் சொல்லிட்டே இருக்கேன், நீ பேசாமலே இருக்கே?”
“ஏம்மா டென்ஷனா இருக்கே. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி துணி எடுக்கப் போகும்போது வானம் இருட்டற மாதிரி இருந்துச்சு. நானே முறத்தை எடுத்துட்டு வந்துட்டேன். கட்டில் மேலே வச்சுருக்கேன் பாரு” என்று சொல்லி விட்டு படிப்பை தொடர்ந்தாள்.
வள்ளிக்கு ஆச்சரியமாய் போனது.
நம்மை விட ரொம்பவும் விவரமாகவும், தெளிவாகவும் தான் இருக்கிறாள் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள்.
அபி, ‘பிளஸ்-ஒன்’ மாணவி.
விடியற்காலையில் நாலரை மணிக்கே எழுந்து கை, கால், முகம் கழுவிக் கொண்டு படிக்க அமர்ந்து விடுகிறாள்.
வள்ளி ஐந்தரை மணிக்கு எழுந்து போய் பால் வாங்கி வரச் சொல்வாள்.
முகம் கறுக்காமல் வாங்கி வருவாள்.
அவளை வளர்க்க என்ன பாடுபடப் போகிறோமோ என்று கணவன் விபத்தில் இறந்தபோது கவலைப் பட்டாள் வள்ளி.
அவளுக்கு கணவன் செக்யூரிட்டியாய் வேலை பார்த்த கணிப்பொறி நிறுவனத்தில் சுத்தம் செய்யும் வேலை கொடுத்தார்கள்.
அலுவலகத்தை சுத்தம் செய்வது, தேவைப்படும் போது பிளாஸ்க்கில் காபி, டீ வாங்கித் தருவது இதுதான் வேலை.
சம்பளம் வீட்டு வாடகைக்கும், இருவர் செலவுக்கும் போதுமானதாக இருந்தது.
அபி மாலையில் மூன்று நாலு சிறுமிகளுக்கு பாடம் எடுக்கிறாள்.
அதில் வரும் 300 ரூபாயையும் அம்மாவிடம் கொடுத்து விடுகிறாள்.
பல நேரங்களில் அவளுக்கு அபியை நினைத்து பெருமையாய் இருக்கும்.
அவளுக்கு தொலைக்காட்சி சீரியல்கள் பார்க்கும் விருப்பமோ, ஆசையோ இருந்ததில்லை. அதனால் கேபிள் கனெக்ஷன் கிடையாது.
படித்து முடித்து சாப்பிட ஆரம்பித்தபோது கேட்டாள் வள்ளி.
“அபி எனக்கு ஒரு யோசனை இருக்கு?”
“என்னம்மா?”
“அன்னைக்கு கேட்டப்ப நீ சொன்னியே சி.ஏ.படிக்கணும்ன்னு. உன்னால நிச்சயம் முடியும். அதுக்கு பணம் இப்பவே சேர்க்க வேண்டாமா?”
“அதுக்கு?”
“மாவு அரைக்கும் மெஷின் ஒண்ணு வாங்கி வீட்டுலேயே இட்லி மாவு போடலாம்ன்னு பார்க்கறேன். வீட்டுக்கே வந்து அதை வாங்கறவங்க நிறைய பேர் இருக்கிறாங்க. எப்படியும் நாலு காசு தேறும்”
“நல்லா யோசிச்சு பார்த்துக்கோ. மாவுன்னு போட்டா வீட்டுக்கு யார் யார் வாங்க வருவாங்கன்னு தெரியாது. தேவையில்லாத புதிய வரவுகள் நம்ம நிம்மதியான வாழ்க்கைக்கு எந்தவித சங்கடத்தையும் தந்து விடக்கூடாது”
“அதுவும் சரிதான். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறியோ?” என்றாள் வள்ளி.
சொல்லி விட்டாளே ஒழிய தூங்க சென்றபோது, ‘அடுத்து என்ன செய்வது, பணம் ஓரளவுக்கு கையில் இருந்தா தான் நல்லது. பார்க்கலாம்.. என்னதான் செய்வது’ என்ற சிந்தனையில் நித்திரையில் கரைந்தாள்.
விடிந்தது.
வழக்கம் போல மகளுக்கும், தனக்கும் காபி போட்டு எடுத்துக்கொண்டு படித்து கொண்டிருந்த அபியிடம் ஒரு தம்பளரை கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள்.
“என்னம்மா வழக்கத்தை விட இன்னைக்கு காபி டேஸ்ட் அதிகமா இருக்கு?”
“நம்ம ரெண்டு பேர்தானேன்னு பாலில் தண்ணி ஊத்தாம காய்ச்சினேன்”
“அம்மா எனக்கு ஒண்ணு தோணுச்சு. இந்த இட்லி மாவு போடற வேலையெல்லாம் வேண்டாம். கடலை உருண்டை, எள் உருண்டை போடு, நல்லா விற்பனையாகும். நாமே கடைகளுக்கு கொண்டு போய் கொடுத்துவிடலாம்” என்றாள்!
வள்ளி கடலை மிட்டாய் போட்டாள்.
எள்ளு உருண்டையும் போட்டாள்.
கணிசமாக வருமானம் பெருகியது.
பரீட்சை நெருங்கும் நேரம்.
நாலு தெரு தள்ளி இருக்கும் மினி டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் எடுத்து வந்த ஆர்டரை கொடுத்து விட்டு பணம் வாங்கி வரப் போனாள்.
அவள் போகும் போது கடையில் கூட்டம் இருந்தது. கொஞ்ச நேரம் காத்திருக்க சொன்னார் மினி மார்க்கெட்டின் முதலாளி.
பின் அழைத்தவர், “அம்மா.. கடலை மிட்டாய் ரொம்ப நல்லா விக்குது. அடுத்த சப்ளையில இரண்டு மடங்கா கொண்டு வா. அப்புறம், இனிமே ‘வவுச்சர்ல்ல பே மெண்ட்’ கொடுக்க முடியாது. செக் தான் தர முடியும். உங்கம்மாவுக்கு பான் கார்டு இருக்கா?” என்று கேட்டார்.
அபி, “இல்லே சார். குடிசைத் தொழில் தானே சார் இது” என்றாள்.
“சரிதாம்மா. பெரிய டிபார்ட்மெண்ட் சப்ளைன்னு வந்துட்டா எங்களுக்கு ஆடிட்டிங்ல பிரச்சினை வரும். பான் கார்டு இல்லேன்னா நானே பார்ம் தர்றேன். அம்மாகிட்ட கையெழுத்து மட்டும் வாங்கிட்டு வா. ஏற்கனவே வங்கியில கணக்கு இருக்கு இல்லே”
“இல்லே சார். அவங்க வவுச்சர்ல்ல சம்பளம் வாங்கறாங்க”
“இருக்கட்டும். நீங்க ரெண்டு பேரும் உழைக்கிற உழைப்புக்கு பெரிய அளவுல வருவீங்க. எல்லாத்தையும் முறைப்படி செஞ்சு வச்சுக்குங்க” என்றார்.
அவரே படிவம் கொடுத்து எங்கே கையெழுத்து போட வேண்டும். போட்டோ எங்கே ஒட்ட வேண்டும் என்று சொல்லி, “இதை பூர்த்தி பண்ணி ரேஷன் கார்டு ஜெராக்ஸ் கொண்டு வந்திரும்மா. பணம் நான் கட்டிக்கிறேன்” என்றார்.
‘சரிங்க’ என்று வாங்கி கொண்டாள்.
“இதுக்கு முன்னாடி கொடுத்த பில்லுக்கு காசு வாங்கிக் கிடவா?”
“உள்ளே கேபின்ல போய் வாங்கிக்க, இண்டர்காம்ல்ல சொல்லிடறேன்” என்றார்.
அவர் பையன் தான் உள்ளே இருந்தான்.
அவள் உள்ளே போனதும் ‘உட்காரு’ என்றான்.
அவன் எப்பொழுதுமே அப்படித்தான்.
கடுகடுப்பாய் இருப்பான்.
அவனுடைய அப்பாவிற்கு நேர் எதிர்.
கொஞ்ச நேரம் காத்திருந்தாள்.
அவன் வவுச்சரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணத்தை கொடுத்தான்.
கூடவே, ‘அப்பா தரச் சொன்னாங்க’ என்று பான் கார்டு விண்ணப்ப படிவத்தை கொடுத்தான்.
வாங்கிக் கொண்டு வெளியேறினாள்.
கதவு அருகே வந்தவளுக்கு ஏதோ உணர்வு.
சட்டென்று திரும்பிப் பார்த்தாள்.
அவன், அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளுக்கு மெல்லிய உறுத்தல்.
ஆனாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் வெளியே வந்தாள்.
முதலாளியிடம் சொல்லி விட்டு புறப்பட்டாள்.
வீட்டிற்கு வந்தவள் அம்மாவிடம் காசை கொடுத்து விட்டு பான் கார்டு விஷயத்தினை சொல்லி அந்த படிவத்தையும் கொடுத்தாள்.
ஒரு வாரம் கடந்தது.
அவள் பள்ளியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தாள்.
எப்போதும் நடந்துதான் வருவாள்.
வரும் வழியிலேயே சில கடைகளில் கடலை மிட்டாய்க்கு ஆர்டர் சேகரித்து வருவாள்.
இரண்டு கடைகளில் நின்று ஆர்டர் வாங்கி கொண்டு தெருவை கடந்து நடந்த போது ஒரு கார் அவள் அருகில் வந்தது.
பக்கத்தில் நின்றதும், அவள் ஏறெடுத்து பார்த்தாள்.
கதவினைத் திறந்து கொண்டு இறங்கியவன், டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஓனரின் மகன்.
“அபி நில்லு” என்றான்.
“என்ன?” என்றாள்.
“அபி என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”
“எந்த அர்த்தத்துல கேக்கறே?”
“ஒரு பையன் என்ன அர்த்தத்துல கேட்பான்?”
“எந்த அர்த்தத்துல அண்ணா?”
அவள் அண்ணா என்றதும் அவன் கொஞ்சம் திடுக் கிட்டுத்தான் போனான்.
“அபி நான் உன்னை லவ் பண்றேன்”
அவள் சிரித்தாள்.
“உங்க பேரு?”
“நவீன் சந்தர்”
“இங்க பாருங்க. எனக்கு வாழ்க்கையில கனவுகள் நிறைய இருக்கு. அதெல்லாம் சாதிக்கணும்ன்னு நினைக்கிறேன். என்ன விட்டுடுங்க”
சொல்லி விட்டு நிற்காமல் வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.
அவன் காரில் ஏறி விர்ரென்று போய் விட்டான்.
வீடு திரும்பியதும் டீ கொடுத்த அம்மாவிடம் விஷயத்தை சொன்னாள்.
“என்னடி சொல்றே?”
“அட விடும்மா. நான் அவனுக்கு தெளிவா சொல்லிட்டேன். நிச்சயம் தொந்தரவு பண்ண மாட்டான். அவங்க அப்பா காதுல ஒரு வார்த்தை போட்டா போதும்”
“நான் போய் பேசட்டுமா?”
“வேண்டாம்மா. நானே பார்த்துக்கறேன்”
“ஏதாவது பிரச்சினை ஆயிடப் போவுதும்மா”
“அதெல்லாம் ஆகாதும்மா. நான் கொஞ்சம் ‘அட்வான்சாவே’ சிந்திக்கற பொண்ணு. அவ்வளவு சீக்கிரம் காதல் கத்திரிக்காய்ன்னு போயிட மாட்டேன். என்னோட வாழ்க்கை லட்சியம் வேற. அதுக்கு தடை வந்தா எப்படி ரொம்ப ஜாக்கிரதையா அதிலிருந்து வெளியில வர்றதுன்னு எனக்கு தெரியும்” என்றாள்.
மறு நாள் அம்மாவிடம் கையொப்பம் வாங்கிய பான் கார்டு படிவத்தை கொடுக்கப் போகும் போது கூட பார்த்தான்.
ஒன்றும் பேசவில்லை.
ஒரு வாரம் கடந்தது.
டிபார்ட்மெண்டல் ஸ்டோருக்கு தயாரித்த பொருட்களை எடுத்துக் கொண்டு போனாள்.
ஓனர் இருந்தார்.
“பத்து நாள்ல பான் கார்டு வந்திடும்மா. இப்ப இந்த டெலிவரிக்கு உடனே பேமெண்ட் வவுச்சர் போட்டு கொடுத்துடறேன்” என்றவர் தொடர்ந்து, “எனக்கு தினமும் ஐம்பது முளைப் பயறு பாக்கெட் வேணும். அது செய்ய தெரியுமா உனக்கு?” என்று கேட்டார்.
“தெரியும் சார். ரெண்டு நாள்ல சப்ளை பண்றேன்” என்றாள்.
அவருக்கு சந்தோஷம்.
“நல்லா படிக்கறியாம்மா?”
“படிக்கறேன் சார். உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். உங்க பையனோட கேபினுக்கு வர்றீங்களா?”
சென்றார்கள்.
கேபினுக்குள் நுழைந்ததும் பையன் எதிரே இருவரும் அமர்ந்தார்கள்.
பையன் கண்களில் கொஞ்சம் பீதி எட்டிப் பார்த்தது.
அவள் அவன் தன்னிடம் சொன்னது எல்லாவற்றையும் சொன்னாள்.
அவர் முகம் மாறியது.
“சார் நாங்க ரொம்ப கஷ்டப்படுற குடும்பம். அப்பா போனதுக்கு அப்புறம் அம்மா என்னை படிக்க வைக்க ரொம்பவே கஷ்டப்படறாங்க. எனக்கு பெரிய கனவு இருக்கு சார். சி.ஏ.படிக்கணும். நிச்சயம் முடிச்சுடுவேன். அதுல எனக்கு எந்தவித சந்தேகமும் கிடையாது. ஆனா இது போல் ஏதாவது சின்ன சின்ன தடை வந்தா ரொம்ப கஷ்டமா இருக்கு சார். நீங்க உங்க பையனை சரியான வழியில கொண்டு போறீங்க. அதுல சந்தேகம் இல்லே.
அவருக்கு காதல் கனவு இருக்கு. எனக்கு படிக்கற கனவு இருக்கு. அவருக்கு கல்யாணம் பண்ணி வையுங்க. நானும் அம்மாவும் வந்து உங்க வீட்டு கல்யாண வேலைகளை ரொம்ப சந்தோஷமா செய்யறோம். நீங்க, நான் சொல்றதை பாசிட்டிவ்வா எடுத்துக்கணும். உங்க பையனை எந்த காரணம் கொண்டும் திட்டாதீங்க. என்னோட வயசுல மத்த பொண்ணுங்க எப்படி இருக்காங்கன்னு எனக்கு தெரியும். அதனால்தான் உங்க பையன் எங்கிட்ட அப்படி வந்து பேசிட்டாரு” என்றாள்.
ஓனரின் முகம் மாறினாலும் கொஞ்ச நேரத்தில் சகஜமானார்.
“அபி நீ சின்ன பொண்ணா இருந்தாலும் உன்னோட ‘அப்ரோச்’ ரொம்ப நல்லா இருக்கு, நீ நல்லா வருவேம்மா. சீக்கிரம் என்னோட பையன் கல்யாண ‘இன்விடேஷனோட’ நாங்க உங்க வீட்டுக்கு வருவோம். நீ அவனோட தங்கையா வந்து கல்யாணத்துல கலந்துகிட்டு உன்னோட வேலைகளை செய்யணும். ரெண்டாவது எங்க வீட்டு கல்யாணத்துக்கு ரெண்டாயிரம் பேர் வருவாங்க. சாப்பாடுக்கு வேற ஆளை ‘அரேஞ்ச்’ பண்றேன். தாம்பூல பையில் முறுக்கு, கடலை மிட்டாய், முந்திரி வெல்லம், பட்டை எல்லாம் நீங்க தான் சப்ளை பண்ணனும்” என்றார்.
அபிக்கு மிகவும் சந்தோஷமாய் இருந்தது.
கண்கள் விரிய மெல்லிய கோடு கண்ணீராய் இறங்கியது.
“சரிப்பா” என்றாள்.

nalla kadhai.
ReplyDelete