Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 1, 2016

'நடுரோட்டில் வச்சு தலைய தனியா எடுத்துடுவேன்...!' - அதிமுக அமைச்சரின் 'பகீர்' ஆடியோ!


அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி,  அதிமுக பிரமுகர் ஒருவரை போனில் மிரட்டி கொலைமிரட்டல் விடுக்கும் ஆடியோ,  வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின்  செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சராக இருப்பவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி.
இவர் அதிமுக பிரமுகர் பைபாஸ்  ராமசாமி என்பவர் குறித்து, அவருக்கு நெருக்கமான சிவகுமார் என்பவரிடம் போனில் பேசியுள்ளார்.
அதில், 'சிவா...இந்த பைபாஸ் ராமசாமிய கொஞ்சம் ஒழுங்கா இருக்க சொல்லுங்க. நடுரோட்டில வச்சு தலைய தனியா எடுத்துடுவேன்.  நான் சொன்னா வெட்டறதுக்கு என்கிட்ட நூறு பேரு இருக்கான். அந்த நாய் பயலுக்கு வெட்றதுக்கு ஒரு பய கிடையாது. தெருவுல கிடக்கான். என்கிட்டே இருக்குற ஆளு பூரா உனக்கு தெரியும்.
இனிமேல் என்னை பத்தி பேசினான்னா வீட்டுக்குள்ள விட்டு வெட்ட விட்டுடுவேன். நான் சொன்னேன்னு சொல்லுங்க. அந்த **** பையனுக்கு போன் போட்டால் எடுக்க மாட்டேன்றான். அந்த ***** மகன் எனக்கு ஒண்ணும் வேலை செய்ய வேண்டாம். திமுகவுக்கே வேலை செய்யட்டும். இவனால நான் ஒண்ணும் ஜெயிக்கல.இவன் என்ன ***** பையன் செஞ்டுவான் அங்க. இந்த ஜாதியைக் காட்டி மிரட்டுறது, ஆளைக் காட்டி மிரட்டுறது  எல்லாம் என்கிட்டே காட்டக் கூடாது. பாலகிருஷ்ணன் கிட்ட வச்சுக்க சொல்லு. என்கிட்டே காட்டினான் என்றால் நடு ரோட்டுல நானே வெட்டிப்புடுவேன். என்ன விளையாடுறானா....கமிஷனர் ஆபிஸ்ல போய் என்ன என்ன பேசியிருக்கான்... கூப்பிட்டு சொல்லுங்க சிவா..." என்று ராஜேந்திர பாலாஜி பேசி இருப்பது பகீர் கிளப்புவதாக உள்ளது. 

ஏற்கெனவே எம்.எல்.ஏ. சீட் வாங்கித் தருகிறோம் என்று அதிமுக பிரமுகர்களிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக  புகார் எழுந்துள்ள விவகாரத்தில்,  இந்த உரையாடலில் உள்ள சிவா என்பவர் மீது அதிமுக தலைமை நவடிக்கை  எடுத்தது. மேலும் அவர் கைதும் செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த ஆடியோ வெளியாகி  அதிமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

அண்மையில், அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா தனது ஆண் நண்பருடன் போனில் பேசிய உரையாடலின் ஆடியோ  பகுதி வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை உண்டாக்கியிருந்தது.
இந்நிலையில் தற்போது  வெளியாகியுள்ள ஆடியோ விவகாரம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்டபோது, "இது நான் ஒரு ஆண்டுக்கு முன்பு பேசியது. என் வீட்டு பெண்களை ஆபாசமாக  பேசியதால் ஆத்திரத்தில் பைபாஸ் ராமசாமிக்கு  நெருக்கமான சிவக்குமாரை கூப்பிட்டு சத்தம் போட்டு வைக்கும்படி பேசினேன். தற்போது தேர்தல் வருவதால் அரசியல்  உள் நோக்கத்தோடு இதை வெளியிட்டுள்ளனர். ஆனால் அம்மாவுக்கு எல்லாம் தெரியும்' என்று கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.