Showing posts with label slider. Show all posts
Showing posts with label slider. Show all posts
July 24, 2017
வெற்றிகரமான இல்லற வாழ்க்கையின் ரகசியங்கள்!!
வெற்றிகரமான வாழ்க்கையை வாழ நீங்கள் பெரிதாக எதையும் படிக்க தேவையில்லை, உறவுகளை தவிர. பெரிதாக பயிற்சி எதுவும் தேவையில்லை, விடா முயற்சி மட்டுமே போதுமானது. திருமணத்திற்கு முன்னர் வரை உங்கள் தாய், தந்தை செய்து வந்ததை திருமணத்திற்கு பிறகு நீங்கள் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.
குடும்ப பொறுப்பு, பிள்ளை வளர்ப்பு, காதல், அரவணைப்பு, என கணவன், மனைவி உறவென்பது தான் இல்லறத்தின் ஆணிவேர். அது சற்று வலுவிழந்து போனாலும், ஒட்டுமொத்த குடும்பமும் ஆட்டம்கண்டுவிடும்.
பணம்
பணம் என்பது பொருளை வாங்க மட்டுமே உதவும், மனதையும், உறவையும் அல்ல என்பதை புரிந்து நடந்துக் கொள்ளுதல் வேண்டும்.
காதல்
அனைவர் மீதும் காதல் வைப்பது தவறல்ல. ஆனால், ஒருவருக்கு தெரியாமல், ஒருவர் மீது காதல் செலுத்துவது தான் தவறு. உறவுகளில் காதல் துரோகம் செய்தல் கூடாது.
பிள்ளை வளர்ப்பு
“எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவை நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன் னையின் வளர்ப்பினிலே ” என்ற பாடல் வரியை போல பிள்ளை வளர்ப்பில் சிறந்து விளங்க வேண்டும்.
குடும்ப அக்கறை
மனைவி, பிள்ளைகள், அவர்களது உடல்நலம், எதிர்காலம் போன்றவற்றின் மீது சரியான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
50-50
தொழிலாக இருப்பினும், சரி அலுவலக வேலையாக இருப்பினும் சரி. குடும்பம், வேலை என இரண்டையும் இரு கண்களாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
தாம்பத்தியம்
தாம்பத்தியம் என்பது புரிதலில் துவங்க வேண்டும். இருவரின் மனதும் அதற்கு இணைங்கி நடக்க வேண்டும்.
புரிதல்
உறவில் சந்தேகம் புகுந்துவிட்டால், சந்தோஷம் குலைந்துவிடும். முடிந்த வரை அனைத்தையும் மனதினுள் புதைத்து வைப்பதற்கு பதிலாக நேரடியாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
July 15, 2017
சுருட்டை முடி பராமரிப்பு எப்படி?
அதுமட்டுமல்லாமல் அதை சுத்தமாகவும் சிக்கல் இல்லாமலும் பராமரிப்பது மேலும் கடினமான விஷயமாகும்.
இத்தகைய முடியை உடைய பெண்கள், இதை எப்படி முறையாக பராமரிக்க முடியும் என்று தெரிந்து கொள்ள ஆசைபடுவீர்கள். சுருட்டை முடி நேராக இருக்கும் முடியை காட்டிலும் பராமரிப்பில் அதிகம் கடினமாக இருக்கும். ஆகையால் இதை எப்படி பாதுகாப்பு என்று குறிப்புகளை தற்போது பார்ப்போம். இந்த குறிப்புகள் தங்கள் முடியை அழகாகவும், அடர்த்தி குறையாமலும் இருக்க உதவும். சுருட்டை முடியை பராமரிக்க உதவும் பொருட்கள் கடைகளில் அதிகளவில் கிடைக்கின்றன. இதை வாங்கி பயன்படுத்தலாம். ஆனால் வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு முடியை மேம்படுத்துவது மிகவும் பாதுகாப்பானதாகும்.
கண்டிஷனர் : படர்ந்து விரியும் கூந்தலை கட்டுப்படுத்துவது கடினம் தான். ஆகையால் கண்டிஷனரால் இதை சிறிதளாவு கட்டுப்படுத்த முடியும். குளித்த பின் இதை போட்டால் சிறந்ததாகும். கடைகளில் கிடைக்கும் கண்டிஷனர் அல்லது வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இதை செய்யலாம். தேன், முட்டை, ஆப்பிள், சீடர் வினிகர் மற்றும் டீ ஆகிய பொருட்களை கொண்டு இதனை செய்ய முடியும்.
சுருள் முடியை சீவுதல் : சுருட்டை முடியை கொண்ட நீங்கள் பெரிய பற்கள் உடைய சீப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்தவும். இவை முடியின் சிக்கல்களை எளிதாக அகற்ற உதவும். முடி உடைவதையும் தடுக்கும். இதனால் முடி கூடிய வரை பாதுகாப்பாக இருக்கும்.
வாழ்க்கையின் அறிந்துகொள்ள வேண்டிய 33 ?
அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
July 11, 2017
வண்டிக்கு ரெட்டை ஜடை ! என்ன டிசைனோ ? என்னா ஒரு வில்லத்தனம் ? ப்ளீஸ் படிங்க பாஸ்.....
நம் ஆட்கள் ஓப்பனிங் எல்லாம் நன்றாகத்தான் கொடுப்பார்கள். ஆனால், போகப் போக என்ன ஆகும் தெரியுமா?
July 2, 2017
இளவரசி ஷெரில்! -சிறுகதை
முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும் சோம்பேறி. எவ்வளவு சொன்னாலும் ஒரு வேலைகூடச் செய்ய மாட்டாள். தாய் சொன்ன அறிவுரையை அவள் கேட்கவில்லை.
நாளாக ஆகத் தாய்க்கு சினம் மிகுதி ஆயிற்று.
ஒருநாள் மிகுந்த கோபத்தோடு ஷெரில் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். வலி தாங்காமல் ஷெரில் "ஓ'வென்று அழுதாள்.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வெளியே ஓசை ஒன்று கேட்டது. அரசி ஒருத்தி அந்த வழியாக ஒரு பல்லக்கில் போய்க் கொண்டிருந்தாள். ஷெரில் எழுப்பிய அழுகுரல் கேட்ட அரசி, பல்லக்கை நிறுத்தினாள்.
""யாரோ அழுகிற ஓசை கேட்டேன்? யார் அது?'' என்றாள்.
பல்லக்கில் இருந்து இறங்கிய அவள், குடிசையின் கதவைத் தட்டினாள்.
தாய் வெளியே வந்தபோது, ""என்ன நடந்தது? யார் அழுவது?'' என்று கேட்டாள்.
அரசியைப் பார்த்தவுடன் அவள்.
அரசியைப் பார்த்தவுடன் அவள்.
""என் மகள் மிகவும் நல்லவள். நூல் நூற்பது போதும் என்றால் கேட்க மறுக் கிறாள். அதோடு, அவளை அப்படியே விட்டால், நூற்றுக்கொண்டே இருப்பாள். என்னிடம் அந்த அளவிற்குப் பஞ்சு இல்லை. நான் என்ன செய்வேன்?'' என்றாள்.
அரசி பார்த்தாள்.
""வியப்பாக இருக்கிறதே... எனக்குக் கூட நூற்பது பிடிக்கும். நூற்பு இயந்திரச் சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை நான் விரும்புவேன். உங்கள் மகளை என்னோடு அரண்மனைக்கு அனுப்புங்கள். அவள் விரும்புகிற வரைக்கும் நூற்றுக்கொண்டே இருக்கட்டும். அங்கே பஞ்சுக்கு பஞ்சமே இல்லை,'' என்றாள்.
"ஷெரிலை எப்படியாவது துரத்தினால் போதும் என்று நினைத்த அவள்' அரசியோடு அவளை அனுப்பி விட்டாள்.
ஷெரில் அரண்மனைக்கு சென்றாள். ஒரு மாளிகையின் மேல்பகுதிக்கு அவளை அழைத்துச் சென்ற அரசி, அவளுக்கு ஓர் அறையைக் காட்டினாள். அது அவள் தங்குவதற்கு. பக்கத்தில் இரண்டு அறைகளில் மிகச்சிறந்த பஞ்சு மூட்டைகள் குவிந்திருந்தன.
அரசி அவளைப் பார்த்து, ""பெண்ணே, இங்கே நிறைய பஞ்சுப் பொதிகள் உள்ளன. இவற்றை நன்றாக நூற்றால், என் அன்பு மகனை உனக்குத் திருமணம் செய்து வைப்பேன். நீ ஏழைப் பெண் என்பதும், உன் தாய் தந்தையர் மிகவும் எளியவர் என்பதும் எனக்குத் தெரியும். அதற்காக, நான் உன்னை வெறுக்கமாட்டேன். உன் உழைப்பே உனது திறமை,'' என்று சொன்னாள்.
தனியே விடப்பட்ட ஷெரில், பஞ்சுப் பொதிகளைப் பார்த்து அஞ்சினாள். காலையில் இருந்து இரவு வரையில் நூற்றாலும் இவற்றை நூற்று முடிப்பதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இதை நினைத்தவுடன் அவளுக்கு அழுகையாக வந்தது. கன்னங்களில் நீர் வழிய ஷெரில் அழுதவாறு உட்கார்ந்திருந்தாள். நேரம் போய்க் கொண்டே இருந்தது. வேலை செய்ய மனம் வரவில்லை.
மூன்றாம் நாள் அரசி வந்தபோது பஞ்சு அப்படியே இருந்தது. வியப்போடு, ""என்ன ஆயிற்று? ஏன் ஒன்றும் செய்யவில்லை?'' என்று கேட்டாள்.
அச்சம் கொண்ட ஷெரில், அரசியைப் பார்த்து மன்னிப்பு வேண்டினாள். வீட்டு நினைவும், தாயின் நினைவும் வந்ததால், வேலை செய்ய முடியவில்லை என்று சொன்னாள்.
அரசி, ""அப்படியா... ஆனால், நீ நாளைக்கு வேலையைத் தொடங்கி விட வேண்டும்,'' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
தனிமையில் ஷெரில் மீண்டும் அழுதாள். முகத்தை மூடிய கைகளின் விரல்களைச் சற்றுத் தளர்த்தியபோது விரல்களின் இடையே மூன்று கிழவிகள் தன் எதிரே நிற்பதைப் பார்த்தாள். இதுவரை அப்படிப்பட்ட பெண்களை அவள் பார்த்ததில்லை. விந்தையான தோற்றத்தில் அவர்கள் இருந்தனர்.
முதல் கிழவியின் வலதுக்கால், ஏறத்தாழ அகன்ற சதுரமாக இருந்தது.
இண்டாவது கிழவியின் கீழ் உதடு, மோவாய்க் கட்டை வரை மிகவும் தொங்கி இருந்தது.
மூன்றாவது கிழவியின் கையின் கட்டை விரல் மண்வெட்டி போலப் பெரிதாக இருந்தது.
எதிரே நின்ற மூவரும் ஷெரிலைப் பார்த்து, ""உன் கவலை என்ன?'' என்று கேட்டனர்.
தன் நிலையை அவள் எடுத்துச் சொன்னாள்.
""எல்லாவற்றையும் நாங்கள் செய்து கொடுத்தால் எங்களுக்கு நீ என்ன தருவாய்?'' என்று அவர்கள் கேட்டனர்.
அவள் எதையும் தருவதற்குத் தயாராக இருந்தாள்.
பின்னர், அந்த மூவரும், ""உன் திருமணத்திற்கு எங்களை அழைக்க வேண்டும். அனைவரிடமும் இவர்கள் என் அத்தைகள் என்று அறிமுகம் செய்ய வேண்டும். எங்களோடு நீயும், உன் கணவனும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும்,'' என்றனர்.
எதைப்பற்றியும் எண்ணிப் பார்க்காமல், ஷெரில் ஒப்புக் கொண்டாள்.
மூன்று கிழவிகளும் தங்கள் வேலையைத் தொடங்கினர். முதல் கிழவி நூலைச் சக்கரத்தில் செலுத்திச் சுற்றிவிட்டாள். இரண்டாவது கிழவி நூலை எச்சிலால் ஈரமாக்கினாள். மூன்றாவது கிழவி மற்ற வேலைகளைச் செய்தாள்.
இப்படி மூவரும் வேலை செய்வதைக் கண்ட ஷெரில் வியப்புற்றாள். இதுவரை வேறு எவரும் இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும் வேலை செய்ததில்லை.
இப்படி மூவரும் வேலை செய்வதைக் கண்ட ஷெரில் வியப்புற்றாள். இதுவரை வேறு எவரும் இவ்வளவு வேகமாகவும், திறமையாகவும் வேலை செய்ததில்லை.
ஓசை கேட்டு மேலே வந்தாள் அரசி. அப்போது அருகிலிருந்த அலமாரியில் மூவரையும் ஒளித்து வைத்தாள்.
அரசி அவளது வேலையைக் கண்டு, மன நிறைவு கொண்டாள். அவளைப் பெரிதும் பாராட்டினாள்.
அரசி திரும்பிப் போன பிறகு அவர்கள் வெளியே வந்து வேலையைத் தொடர்ந்தனர். அவர்கள் இருப்பது அரசிக்குத் தெரியவே தெரியாது.
சில நாட்களில் இரண்டு அறைகளிலிருந்த பஞ்சு மூட்டைகளும் தீர்ந்துவிட்டன. வேலை முடிந்த பின்னர் ஒருநாள் மாலை இருட்டும் வேளையில் அந்த மூவரும் போய் விட்டனர். போகும்போது, ""பெண்ணே, நீ எங்களுக்குத் தந்த உறுதிமொழியை நினைவில் வைத்துக் கொள். நாங்கள் திரும்ப வருவோம்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.
அடுத்த நாள் காலை வழக்கப்படி அரசி வந்தாள். மூட்டை மூட்டையாக இருந்த பஞ்சு அனைத்தும் நூல் கண்டுகளாக மாறி இருந்தன. சொன்ன சொல் தவறாத அரசி, ஷெரிலின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தாள்.
ஷெரில் அரசியைப் பார்த்து, ""எனக்கு மூன்று அத்தைகள் இருக்கின்றனர். என்னை மிகவும் அன்பாகப் போற்றி வளர்த்தவர்கள் அவர்கள். அவர்களைத் திருமணத்திற்கு அழைக்க வேண்டும்,'' என்றாள். அரசியும் ஒப்புக் கொண்டாள்.
திருமணம் நடந்தது. விருந்தின் போது மணமகன், மேஜையில் ஆடை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த அவர்களை, ""யார்' என்று கேட்டார். ஷெரில் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
திருமணம் நடந்தது. விருந்தின் போது மணமகன், மேஜையில் ஆடை அலங்காரத்துடன் அமர்ந்திருந்த அவர்களை, ""யார்' என்று கேட்டார். ஷெரில் அவர்களை அறிமுகப்படுத்தினாள்.
முதல் கிழவியைப் பார்த்து இளவரசன், ""உங்கள் பாதம் ஏன் இவ்வளவு பெரிதாக உள்ளது?'' என்று கேட்டான்.
""நான் எப்போதும் நூற்பு இயந்திரத்தைக் காலால் மிதிப்பதால்,'' என்றாள் அவள்.
இரண்டாமவளைப் பார்த்து, ""வியப்பாக இருக்கிறதே, இவ்வளவு நீண்ட உதடுகள். ஏன் இப்படி?'' என்று கேட்ட போது, அவள், ""எப்போதும் நூலை இதழால் தடவுவதால்,'' என்றாள்.
மூன்றாவது கிழவியைப் பார்த்து அவன், ""உங்களுக்கு இவ்வளவு பெரிய கட்டை விரல் எப்படி வந்தது?'' என்றான்.
அதற்கு அவள், ""என் வாழ்க்கை முழுவதும் நூல்களை அழுத்தி வேலை செய்வதால்,'' என்றாள்.
நூற்பதால் இந்தப் பயங்கர விளைவுகள் ஏற்படும் என்று நினைத்தான் இளவரசன். தன் பக்கத்தில் இருந்த புதிய மனைவி யாகிய ஷெரிலைப் பார்த்து, ""இனிமேல் என் அழகிய இளவரசி ஷெரில் நூல் நூற்கவே கூடாது,'' என்று உத்தரவிட்டான்.
அன்று முதல் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.
July 1, 2017
மிட்நைட் பிரியாணி சாப்பிடலாமா?
இரவு நேரத்தில் கீரை, தயிர், பருப்பு உள்ளிட்ட சில உணவுகளை சாப்பிடக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். காரணம் கேட்காமல் அதைப் பின்பற்றிக் கொண்டிருப்போம். இரவில் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை? ஏன் தவிர்க்க வேண்டும்? விளக்குகிறார் டயட்டீஷியன் வீணா சேகர்.
இரவில் இந்த உணவுதான் சாப்பிட வேண்டும், இதெல்லாம் சாப்பிடக்கூடாது என்று எந்த விதிமுறையும் இல்லை. அவரவர் உடல்நிலைக்கு தகுந்த உணவை அவரவரே தீர்மானிக்கலாம். சிலருக்கு சிறுவயதில் இருந்து சில உணவுகள் பழகி இருக்கும். அதனால், அவர்களுக்குப் பிரச்னை வராது. சிலருக்கு இதெல்லாம் ஆகாது என்று மனதில் பதிய வைத்திருப்பார்கள். அதனால் சாதாரணமாக ஏதாவது ஏற்பட்டால் கூட, அந்த உணவினால் தான் என்று நினைப்பார்கள். அந்தக் காலத்தில் இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்று சொன்னதற்கு காரணம் கீரைகளில் பூச்சி இருக்கும். விளக்கொளி இல்லாத காலகட்டத்தில் இருட்டில் தெரியாமல் சமைத்துவிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.
இப்போது பலரும் பகலில் வேலைக்குப் போவதால் கீரை போன்ற உணவுகளை சாப்பிட முடியாதவர்கள், இரவுதான் சாப்பிட வேண்டி இருக்கும். இல்லையென்றால் அதிலுள்ள சத்து கிடைக்காமலே போய்விடும். அவர்களுக்கு வேறு ஏதும் பிரச்னை ஏற்படவில்லை என்றால், தாராளமாக கீரை எடுத்துக்கொள்ளலாம். இருப்பினும், சில உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டி இருப்பதற்கு சில காரணங்கள் உண்டு. அப்படித் தவிர்க்க வேண்டியவை...
4டீ, காபிபொதுவாக டீ, காபி போன்ற உற்சாக பானங்களை (Stimulant drinks) சாப்பிடுவது தூக்கத்தைக் குறைக்கும். காபியில் இருக்கும் கஃபைன் (Caffeine), டீயில் இருக்கும் த்யோப்ரமைன் (Theobromine) ஆகியவை மூளைக்குச் சுறுசுறுப்பை அளிக்கும். அதனால்தான் பரீட்சை நேரங்களிலும், இரவில் வேலை செய்யும் போதும் 75 சதவிகித மக்கள் டீ, காபி குடிப்பார்கள். காலை நேரத்தில் மூளை சுறுசுறுப்பாக செயல்படுவதற்காகத்தான் தூங்கி எழுந்தவுடன் காபி, டீ குடிக்கிறோம்.
அசைவ உணவுகள் பொதுவாக பார்ட்டி என்கிற பெயரில் இரவு நேரத்தில் உணவகத்துக்குச் செல்பவர்கள் அதிகம். அங்கு அதிகபட்சம் அவைச உணவுகளே இடம் பெறும். பார்ட்டி என்பதால் பேசிக்கொண்டு, குஷியாக சாப்பிடுவதால் கட்டாயம் எப்போதையும் விட ஒரு பிடி அதிகப்படியாகவே சாப்பிடுவோம். அசைவ உணவு என்றால் எல்லாருக்கும் கொஞ்சம் அதிகம் சாப்பிடத் தோன்றும். அதைத் தொடர்கதை ஆக்காமல் இருப்பதே நல்லது. அசைவம் ஜீரணமாக 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை கூட ஆகக்கூடும். அதனால் ஜீரணக் கோளாறு, வாயுத்தொல்லை ஏற்பட்டு, இரவில் தூங்க முடியாமல் போகும்.
அசைவ உணவுகளை மதிய நேரத்திலோ, மாலை நேரத்திலோ சாப்பிடுவது நல்லது. காரம் மற்றும் எண்ணெய் சாப்பிட்டவுடன் நாம் மல்லாந்த நிலையில் படுப்போம். அதனால் காரம் மற்றும் எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை சாப்பிடும் போது ஆசிட் ரெஃப்ளெக்ஸ் ஏற்படும். ‘எதிர்த்துக்கிட்டு வருது’, ‘எதுக்களிப்பு’ என்று சொல்வோமே... அந்தப் பிரச்னைதான் இது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எண்ணெய், நெய் போன்றவற்றில் கொழுப்புச்சத்து அதிகமிருப்பதால், ஜீரணமாகவும் நேரம் எடுக்கும். பொதுவாக இரவு நேரங்களில் நாம் தூங்கும் அந்த 8 மணி நேரத்தில்தான் நம் உடலில் மூளை மற்றும் இதயம் தவிர மற்ற எல்லா பாகங்களும் ஓய்வு எடுக்கும். அந்த நேரத்தில் அவற்றுக்கு அதிகப்படி வேலை கொடுப்பது நல்லதல்ல. இதனால் பிற்காலத்தில் தொடர் ஜீரணக்கோளாறு பிரச்னைகள் ஏற்படலாம்.
இனிப்புகள் மற்றும் சாக்லெட்
இனிப்பு மற்றும் சாக்லெட் வகைகள் பொதுவாக புத்துணர்ச்சி கொடுக்கக்கூடியவை. எனர்ஜி அளிக்கக்கூடியவை. திருமண ரிசப்ஷன் போன்ற இரவு நேர விழாக்களில் ஐஸ்க்ரீம், டெசர்ட்ஸ் போன்றவை அவசியம் இடம்பெறும். ஆசையில் அதிகமாகச் சாப்பிடாமல் அளவோடு எடுத்துக்கொண்டால் தூக்கத்துக்குப் பாதிப்பிருக்காது. இனிப்பு வகைகளில் சர்க்கரை அதிகமிருப்பதால் நீரிழிவுக்காரர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். கொஞ்சமாக சாக்லெட் சாப்பிடுவது தவறல்ல. அதைச் சாப்பிட்டுவிட்டு, அப்படியே தூங்கப் போகும் போது பற்களில் சொத்தை ஏற்படும். இஷ்டப்படி சாப்பிட்டுவிட்டு, ஜீரணமாக வேண்டும் என்று சிலர் சோடா குடிப்பார்கள். ஆனால், அதில் இருக்கும் சர்க்கரை உங்கள் இனிய கனவுகளை கட்டாயம் கலைக்கும்!
நீர்ச்சத்துள்ள உணவுகள் பார்லி
உடலில் இருக்கும் தேவையற்ற நீரை எடுக்கும். இரவில் அதைச் சாப்பிடும்போது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். நீரிழிவுக்காரர்களுக்கு இன்னும் கஷ்டம். பூசணி, புடலை, நீர்ச்சத்துள்ள காய்கறிகள், கோஸ், செலரி போன்ற காய்கறிகள் சாப்பிட்டாலும் இதே பிரச்னைதான். இதனால் இரவில் தூக்கம் பாதிக்கும்.
கரையா நார்ச்சத்து உணவுகள்
நார்ச்சத்தில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என்று உண்டு. கரையா நார்ச்சத்து அதாவது, கொஞ்சம் கடினமான நார்ச்சத்துள்ள உணவுகளான சில கீரைகள், பாகற்காய் போன்ற உணவுகள் ஜீரணிக்க நேரம் எடுக்கும். அதனால் அவற்றை இரவு நேரங்களில்
தவிர்க்கலாம். அல்லது கொஞ்சம் முன்னதாக சாப்பிடலாம்.
புளித்த உணவுப்பொருட்கள்
இட்லி, ஆவியில் வேக வைத்த சிறந்த உணவாக இருந்தாலும், புளிக்க வைத்த மாவில் செய்வதால், சிலருக்கு புளித்த ஏப்பம் ஏற்படும். அதனால்தான் இட்லி, தோசை ஆகியவற்றை காலை உணவாகவே நம் பாரம்பரியத்தில் பழக்கி உள்ளனர். இதனாலும் இனிய உறக்கம் தடைபடக்கூடும் என்பதால், இரவில் தவிர்க்கலாம். மற்றபடி ஆவியில் வேக வைத்த உணவுகள் ஓ.கே. குழந்தைகள் இரவில் இட்லி, தோசை சாப்பிடுவதில் பிரச்னை இல்லை.
ஜங் ஃபுட்
பொதுவாகவே ஜங் ஃபுட் உணவுகளை இரவில் குறைத்துக்கொள்வது நல்லது. அல்சர் உள்ளவர்கள் அசிடிட்டி நிறைந்த உணவுகளை இரவில் தவிர்க்க வேண்டும்.
இவையெல்லாம் பொதுவான விஷயங்கள். இதைத் தாண்டி ஒவ்வொருவரின் உடல் ஏற்றுக்கொள்ளும் திறனைப் பொறுத்து, உணவு எடுத்துக்கொள்ளலாம். இரவு நேரங்களில் அதிக அளவு சாப்பிட்டு உடனடியாக உறங்க செல்வது பருமனைக் கூட்டும். அதற்காகத்தான், அந்தக் காலத்தில், ‘பகலில் ராஜாவைப் போல (விருந்து) உண், இரவில் பிச்சைக்காரனைப் போல (கொஞ்சமாக) உண்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இரவில் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதை விட நம் உடலுக்கு தேவையான சத்துள்ள உணவுகளை சாப்பிடுவது ரொம்ப முக்கியம். அன்றைய நாளில் தேவையான கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், மினரல்கள் எடுத்துக்கொண்டோமா என்று பார்ப்பது நல்லது.
தூக்கமின்மை மற்றும் அஜீரண பிரச்னை உள்ளவர்கள் ஒரு மாத உணவு டைரி ஒன்றை ஏற்படுத்தி தினமும் 6 மணிக்கு மேல் என்ன சாப்பிடுகிறோம் என்பதை குறித்து வரவேண்டும். எந்த உணவு சாப்பிடும் போது மட்டும் பிரச்னை ஏற்படுகிறது? உணவு சாப்பிடும் முன்னர் எப்படி இருந்தது? சாப்பிட்ட பின்னர் எப்படி இருந்தது? இந்தத் தகவல்களையும் குறித்து வைக்க வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு மிகவும் பிரச்னை ஏற்படுத்தும் உணவுகளைத் தெரிந்து கொண்டு இரவில் தவிர்த்து விடலாம்.மொத்தத்தில்... மிட் நைட் பிரியாணிக்கு ‘நோ’ சொல்வதே நோய்களிலிருந்து தப்ப வழி!
@ குறியீட்டின் அறிமுகம். @ குறியீட்டுக்குப்பின்னே அனேக சங்கதிகள் உள்ளன!
தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் '@' குறியீட்டின் கதை தெரியுமா?
மின் அஞ்சல் மற்றும் இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் @ குறியீடு, 1971-க்குப் பிறகே பரவலான புழக்கத்துக்கு வந்திருக்கிறது.
இந்தக் குறியீடு ஒரு காலத்தில் தெளிவற்ற சின்னமாக இருந்தது. அப்போது கணக்கு ஏட்டுப் பதிவாளர்களால் மட்டுமே இந்த @ குறியீடு பயன்படுத்தப்பட்டுள்ளது.
அந்த நிலையை மாற்றி, இந்த மின்னணு யுகத்தில் அதனை அனைவர் மத்தியிலும் புழக்கத்துக்குக் கொண்டுவந்தவர் ரே டாம்லின்சன் ஆவார்.
தனது அலுவலகத்தில் மின்னஞ்சலைப் பரிமாற்றிக் கொள்வதற்கு, அவர் 1971-ல் இந்த @ குறியீட்டைப் பயன்படுத்தினார். மின்னஞ்சல் அனுப்புபவரின் பெயருக்கும் சென்றடையும் விலாசத்துக்கும் இடையே இது அப்போது இடப்பட்டது.
முன்பு கணினித் தொழில்நுட்பத்தில் @ குறியீட்டின் பயன்பாடு மிகவும் அரிதாகவே இருந்தது. எனவே, கணினியில் பயன்படுத்தப்பட்ட புரொகிராம் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியவற்றில் @ குறியீட்டின் பயன்பாடு சிக்கலை ஏற்படுத்தவில்லை.
பதினான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட குறிப்பு ஒன்றில் @ குறியீட்டைக் காணமுடிகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதிக்கு முன்பே தட்டச்சு எந்திரங்களின் பயன்பாட்டில் @ இருந்துள்ளது என நூலாசிரியர் ஹெய்த் ஹவுஸ்டன் கூறுகிறார். பின்னர் அது கணினி கீபோர்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
வர்த்தகக் கணக்குகளில், எவ்வளவு பொருள், என்ன விலையில் உள்ளன என்பதை சுருக்கமாகத் தெரிவிக்கும் ஒரு குறியீடாக @ பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்த ஹெய்த், முன்பு வர்த்தக நோக்கத்துக்காக கணினி பயன்படுத்தப்பட்டதால், அதில் @ குறியீடும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று விளக்குகிறார்.
ஆனாலும் பல்வேறு நாடுகளில், பல்வேறு விஷயங்களைக் குறிப்பதாக @ குறியீடு உள்ளது.
துருக்கியில் இக்குறியீடு ரோஜாப் பூவையும், நார்வேயில் பன்றியின் வாலையும், கிரீஸ் நாட்டில் தாரா பறவையின் குஞ்சையும், அங்கேரியில் புழுவையும் குறிக்கிறது.
பிரான்ஸ், இத்தாலி, போர்ச்சுக்கல் ஆகிய நாடுகளில் இது அரோபா எனப்படும் எடையை அளவீடு செய்யும் அலகாகக் கருதப்படுகிறது.
இத்தாலியில் இக்குறியீடு அம்போரா என அழைக்கப்படுகிறது. அங்கு, பண்டைய காலம் முதல் பயன்படுத்தப்படும் நீண்ட கழுத்து உடைய மண்பாண்ட ஜாடிகளை குறிப்பதாக உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டில் இக்குறியீடு, வர்த்தகப் பரிமாற்றத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன என்று இத்தாலிய கல்வி அறிஞரான ஜார்ஜியோ ஸ்டாபில் கூறுகிறார்.
இப்படி, சிறிய @ குறியீட்டுக்குப்பின்னே அனேக சங்கதிகள் உள்ளன!
தழும்புகளில் இருந்து தப்பிக்கணுமா?
நேற்றுவரை கண்ணாடி மாதிரி பளபளத்த சருமத்தில், இன்று திடீரென சின்னதாக ஒரு கரும்புள்ளியோ, பருவோ வந்தால் அது தரும் மன உளைச்சல் மிகவும் பெரியது. அதிலும் அந்தக் கரும்புள்ளியோ, பருவோ வந்தோமா, போனோமா என இல்லாமல், வந்துவிட்டுப் போனதன் தடமாக தழும்பை விட்டுச் சென்றால்?
தழும்புகளைப் பார்க்கும் போதெல்லாம் தன்னம்பிக்கை குறையும். தூக்கம் தொலையும். தழும்புகளற்ற சுத்தமான சருமத்துக்கு மனது ஏங்கும். ‘‘சரியான காரணம் தெரிந்து, சிகிச்சை அளித்தால், தழும்புகளை விரட்டுவது இன்று மிகவும் சுலபம் என்கிறார் அழகுக் கலை நிபுணரும், அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக். தழும்புகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றி லிருந்து தப்பிக்கவும் ஆலோசனைகள் சொல்கிறார் அவர்.
‘‘அம்மைக்குப் பிறகு வந்தது, பருக்கள் விட்டுச் சென்றது என தழும்புகளில் 2 வகை உண்டு. இரண்டுக்கும் தனித்தனி அணுகுமுறையும் சிகிச்சையும் அவசியம். பருக்களைக் கிள்ளுவதாலோ, உடைப்பதாலோதான் பரு உண்டாகும் என்பது பரவலான கருத்து. அது மட்டுமே காரணமில்லை. பருக்களில் பல வகை உண்டு. அவற்றில் ஒன்று சிஸ்டிக் அக்னே என்பது. பாரம்பரியமாகத் தொடரக்கூடிய இந்த வகைப் பரு, அளவுக்கு அதிக எண்ணெய் சுரக்கும் சருமம் கொண்டவர்கள், தலையில் ஃபங்கஸ் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். இந்தப் பரு உள்ள நபர்களின் மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்தால் உள்ளே ஃபங்கஸ் மற்றும் பாக்டீரியா தொற்று இருப்பதைப் பார்க்கலாம்.
சிஸ்டிக் அக்னேவை கிள்ளாமலும், உடைக்காமலும்கூட அது தழும்பை விட்டுச் செல்லும். அந்தளவுக்குக் கொடுமையான குணம் கொண்டது. ஒன்றிரண்டு பரு கிளம்பும் போதே மண்டைப் பகுதியை ஸ்கேன் செய்து பார்த்து, இன்ஃபெக்ஷன் இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, மூல காரணத்தை அறிந்து அதற்கேற்ற சிகிச்சையைத் தொடங்கினால், தழும்புகளில் இருந்து தப்பிக்கலாம். டிஸ்க்ரன்ட்டேஷன் தெரபி என்கிற சிகிச்சையின் மூலம் இவர்களுக்குச் சுரக்கிற அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் பருக்களும் அதிகரிக்காது. தழும்புகளும் வராது.
- சிஸ்டிக் அக்னே உள்ளவர்களது சருமத் துவாரங்கள் அகண்டு, பெரிதாக இருக்கும். வெளியில் செல்லும் போது சருமத்துக்கு எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார்களானால், இவர்களது சருமத்திலிருந்து சுரக்கும் சீபம் என்கிற எண்ணெய் பசையானது வெளியே கசிந்து, வெளிப்புற மாசுடன் சேர்ந்து சருமத் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். துவாரங்கள் பெரிதாக இருப்பதால் பருக்களும் பெரிய கொப்புளங்கள் போலவே வரும். இவர்கள் தலையில் பொடுகு இருக்கிறதா என்பதற்கான பரிசோதனையை செய்து பார்த்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்டாலே பருவையும் அது விட்டுச் செல்கிற தழும்பையும் விரட்டலாம்.
இதெல்லாம் வராமல் தவிர்ப்பதற்கான வழிகள்.
ஏற்கனவே பரு வந்து, தழும்புகளும் தங்கி விட்டவர்கள் என்ன செய்யலாம்?
வெறும் ஃபேஷியல் மட்டுமே தழும்புகளைப் போக்காது. மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோதெரபி என்கிற இரண்டு சிகிச்சைகளும் இவர்களுக்குப் பலன் தரும். தழும்பு ஏற்பட்டவர்களது சருமத்தில் குழிகள் காணப்படும். மைக்ரோடெர்மாப்ரேஷன் என்கிற சிகிச்சை, சருமத்தை சமன்படுத்தி, குழிகளை மறைக்கும். 95 சதவிகிதம் தழும்புகள் மறையும். 100 சதவிகிதம் தெரியாமலிருக்க ஸ்கின் பீல் சிகிச்சை மட்டுமே தீர்வு. சருமத்தின் ஒரு லேயரை அப்படியே உரித்தெடுத்து, சருமத்தைப் புதுப்பிக்கச் செய்கிற இந்த சிகிச்சைக்குப் பிறகு சூரிய வெளிச்சமோ, வீட்டுக்குள் பல்பு வெளிச்சமோகூட படக்கூடாது. வெளிச்சம் பட்டால், ஸ்கின் பீல் செய்யப்பட்ட சருமம் கருப்பாகி, அது நிரந்தரமாகத் தங்கி விடும்.
மைக்ரோடெர்மாப்ரேஷன் மற்றும் மீசோ தெரபி சிகிச்சை களை 20 வயதுக்கு மேலானவர்கள் செய்து கொள்ளலாம். 30 வயதுக்கு மேலானவர்கள் வாரம் 2 முறை மைக்ரோடெர்மாப்ரேஷன் செய்து கொள்ளலாம். தழும்புகளை நீக்குவதில் அரோமாதெரபி சிகிச்சைக்குப் பெரும் பங்கு உண்டு. அது சருமத்தில் புதிய செல்கள் உருவாக உதவும்.மைக்ரோடெர்மாப்ரேஷன் சிகிச்சையுடன், சைப்ரஸ் ஆயில், நட்மெக் ஆயில், பெர்கமாட் ஆயில், பெடிட்க்ரெயின் ஆயில், சாண்டல்வுட் ஆயில் ஆகியவை கலந்த அரோமா தெரபியையும் சேர்த்துக் கொடுக்கும் போது, தழும்புகள் நீங்கி, சருமம் புத்துணர்வு பெறுவது துரிதப்படுத்தப்படும்.
வீட்டிலேயே என்ன செய்யலாம்?
தழும்புகள் சின்னதாக இருக்கும்போதே கவனித்து, சில சிகிச்சைகளைச் செய்ய ஆரம்பித்தால், அவை பெரிதாகாமலும் நிரந்தரமாகத் தங்காமலும் காக்கலாம்.
நெருஞ்சி முள் தூள் 100 கிராம், கறிவேப்பிலை தூள் 100 கிராம், கஸ்தூரி மஞ்சள் தூள் 100 கிராம், கசகசா தூள் 10 கிராம் ஆகியவற்றை காய்ச்சாத பாலில் குழைத்துக் கொள்ளவும், இரவு படுக்கப் போவதற்கு முன் சருமத்தில் தழும்புகளின் மேல் தடவிக் கொண்டு தூங்கவும். மறுநாள் காலையில் அதைத் தேய்த்துக் கழுவவும். சில நாட்களுக்குத் தொடர்ந்து இப்படிச் செய்து வர, சின்னத் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
முகச் சருமத்தை லேசாக, மிக மென்மையாகக் கிள்ளி விடுகிற சிகிச்சையை 20 வயதுக்கு மேல் எல்லோருமே ஒரு பயிற்சியாகச் செய்யலாம். சருமத்தின் மூன்றாவது அடுக்கான சப்கியூட்டேனியஸ் லேயரில்தான் சருமத்தின் மீள் தன்மைக்குக் காரணமான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் எனப்படுகிற கொழுப்பு செல்கள் இருக்கின்றன. லேசாகக் கிள்ளி விடுவதன் மூலம் இந்த செல்கள் தூண்டப்பட்டு மேலெழுந்து வரும். கன்னம் ஒட்டிப் போனவர்கள் கூட இந்த கிள்ளி விடுகிற பயிற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால், கன்னங்கள் ஓரளவு உப்பிப் பூரிக்கும். முகத் தசைகள் விரிவடைகிற போது, தழும்புகளின் அளவு சுருங்கும். பார்வைக்கு உறுத்தலாகத் தெரியாது.
தினசரி காலையில் பல் துலக்கும் போது, வாய் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளவும். வாய் வலிக்கும் வரை வாயிலேயே வைத்திருந்து விட்டு பிறகு துப்பவும். இப்படிச் செய்வதாலும் கன்னத் தசைகள் விரிவடையும். தழும்புகள் மறையும்.
மேலே சொன்னதெல்லாம் பருக்களால் உண்டான தழும்புகளுக்கு...
அடுத்தது அம்மைத் தழும்புகளுக்கான சிகிச்சை
அம்மை வந்த பிறகு ஏற்படுகிற தழும்புகள் அத்தனை சீக்கிரத்தில் மறையாது. லேசர், ஸ்கின் பீல் மாதிரியான நவீன சிகிச்சை களால் கூட 100 சதவிகிதம் போக்க முடியாது.
தழும்புகள் ஆழமாவதற்கு முன்பே அக்கறை எடுத்துக் கொண்டால், ஓரளவு இந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம். அம்மை வந்து கொப்புளங்கள் ஆறிய உடனே அந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டும். காலம் தாழ்த்தினால் தழும்புகள் ஆழமாகி விடும். கொப்புளங்கள் ஆறிய நிலையில் சருமமானது மிகவும் மென்மையாக இருக்கும். அம்மை வந்ததில் இருந்தே தினமும் இளநீர் குடிக்க வேண்டும். அது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதோடு, சருமத்துக்குத் தேவையான தண்ணீர் சத்தையும் தக்க வைக்கும்.
கார்ன் ஃப்ளோர் 1 டீஸ்பூன், புதினாவை காயவைத்து அரைத்த தூள் 1 டீஸ்பூன், மர மஞ்சள் தூள் 1 டீஸ்பூன், நட்மெக் ஆயில் 2 சொட்டு, ரோஸ்மெர்ரி ஆயில் 1 சொட்டு, சிடர்வுட் ஆயில் 1 சொட்டு எல்லாவற்றையும் சிறிது தண்ணீரில் குழைக்கவும். அம்மைத் தழும்புகளின் மேல் மென்மையாகத் தடவவும். அதை முற்றிலும் காய விடக் கூடாது. லேசான ஈரத்துடன் இருக்கும் போதே குளிர்ந்த தண்ணீர் விட்டு, மென்மையாகக் கழுவி விட வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு இப்படிச் செய்து வந்தாலே தழும்புகள் மறைந்து விடும்.
கடன்காரரும், புலவரும்!-சிறுகதை
ஒரு ஊரில் சொக்க நாதன் என்கிற புலவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகுந்த வறுமையில் வாடினார். ராஜவேலு என்ற வள்ளல் தன்னை நாடி வந்து உதவி கேட்கும் ஏழைப் புலவர்களுக்கு இல்லை என்று கூறாது வாரி வழங்குபவர். அதைக் கேள்விப்பட்டிருந்த சொக்கநாதர் ராஜவேலுவைப் பார்க்கப் புறப்பட்டார்.
காட்டுப் பாதையில் கொளுத்தும் வெயிலில் சொக்கநாதப் புலவர் நடந்து சென்று கொண்டிருந்தார். இளைப்பாற வேண்டி ஒரு குளத்தங்கரையில் இருந்த ஆலமரத்தடியில் அமர்ந்தார்.
'ராஜவேலு இருக்கும் ஊரின் பெயர் முல்லைவனம். அது இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்று தெரியவில்லை. வழி கேட்கலாம் என்றால் வழிப்போக்கர் யாரும் கண்களில் தென்படவில்லை. இன்னும் எவ்வளவு தொலைவுதான் நடந்து போக வேண்டியிருக்குமோ' என்று தனக்குத்தானே கூறிக் கொண்டார்.
அடிமரத்தில் தலையை வைத்துப் படுத்து சற்று இளைப்பாறியவர். அப்படியே உறங்கிவிட்டார்.
பொழுது சாயும் வேலை. மாலைச் சூரியனின் வெயில் பட்டு அந்தக் காடே பொன் னொளி வீசியது. அப்போது அவ்வழியாக சற்று தொலை வில் ஒரு பல்லக்கு வந்தது.
பல்லக்கு சுமப்பவர்கள், 'ஐலேசா' என்ற குரல் எழுப்பிய படியே பல்லக்கை தூக்கி வந்தனர். அந்த ஓசை கேட்டு சொக்கநாதப் புலவர் தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்தார்.
பொழுது சாய்ந்து விட்ட தைக் கண்டு பதறினார்.
பல்லக்கு அவர் அருகில் வந்து சேர்ந்தது. பல்லக்கின் உள்ளே அமர்ந்திருந்தவர், பல்லக்கை நிறுத்தும்படி கூறினர்.
''என்ன, சொக்கநாதப் புலவரே! ஆலமரத்தடியில் அமர்ந்து காற்று வாங்கு கிறீரா?'' என்று கேட்டபடியே பல்லக்கை விட்டு வெளியே வந்தார்.
''அடடா! அமுதவாணப் புலவரா? ஆமாம். காற்று தான் வாங்குகிறேன்,'' என்று தன் பிழைப்பு காற்றடிக்கிறது என்பதை சொக்கநாதப் புலவர் உட்பொருளாக வைத்துக் கூறினார்.
''என்ன வறுமை இருந்தாலும், நம் திறமைக்கு வறுமை வந்து விடுமா?'' என்று சொக்கநாதப் புலவரின் திறமையைப் புகழ்ந்து குறிப்பிட்டார் அமுதவாணப் புலவர்.
இருவரும் நெடுநாள் நண்பர்கள்.
''என்ன சொக்கநாதப் புலவரே, எங்கே செல்வதற்கு புறப் பட்டு வந்தீர்?'' என்று அமுதவாணப் புலவர் கேட்டார்.
''அமுதவாணரே! ஏதேது, பல்லக்கு சவாரி எல்லாம் செய்கிறீர். எங்கிருந்து வருகிறீர்?'' என்று கேட்டார் சொக்கநாதர்.
''நானும், பல்லக்கும் இருக்கட்டும். நீர் எங்கே போகிறீர். அதைச் சொல்லும்,'' என்று கேட்டார் அமுதவாணர்.
''நான் ராஜவேலு வள்ளலை பார்க்கப் புறப்பட்டேன்...'' என்றார் சொக்கநாத புலவர்.
''ராஜவேலுவா? அவர் மாளிகையைச் சுற்றி ஒரே கடன் கொடுத்தவர்கள் கூட்டம்,'' என்று கூறி நிறுத்தினர் அமுதவாணர்.
கடன் கொடுத்தவர் கூட்டம் என்பதைக் கேட்டதும் சொக்கநாதப் புலவருக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது. 'பாவம், வள்ளல் ராஜவேலுவும் வறுமைக்கு ஆளாகிவிட்டார் போலிருக்கிறது. இனி என்ன செய்வது? எங்கே போவது? யாரிடம் போய் உதவி கோருவது?' என்று குழம்பினார்.
அவர் நிலைமையைக் கண்ட அமுத வாணர், ''என்ன சொக்கநாதரே! கலங்கிப் போய் விட்டீரா? ராஜவேலு மாளிகையைச் சுற்றிக் கடன் கொடுத்தவர்கள் கூட்டம் என்று தான் சொன்னேனே தவிர, வள்ளல் ராஜதுரை கடன் வாங்கினார் என்றா கூறினேன்?'' என்று அமுதவாணர் கேட்டார்.
''ஏற்கனவே குழப்பத்தில் உள்ள என்னை, ஏன் மேலும் குழப்புகிறீர்?'' என்று நொந்து கொண்டார் சொக்கநாதர்.
''ராஜவேலு வள்ளல் மாளிகைக்கு எந்தப் புலவர் வந்தாலும் வெறும் கையோடு திரும்பியதே இல்லை. உதவி தேடிச் செல்லும் புலவர்களுக்குப் பொருள் கிடைப்பது உறுதி. எந்தப் புலவன்தான் கடன் வாங்காமல் இருக் கிறான். வள்ளல் ராஜவேலுவின் குணத்தை, புலவர்களுக்குக் கடன் கொடுத்தவர்கள் புரிந்து கொண்டு விட்டனர்.
அதனால் எந்தப் புலவன் வந்தாலும் அவனோடு, கடன் கொடுத்தவர்களும் வந்து விடுகின்றனர். வள்ளலிடம் புலவர் உதவி பெற்றதும், தங்கள் கடன் பாக்கியை அவ்விடத்திலேயே வசூல் செய்து கொள்ளத் திட்டம். அதனால், ராஜவேலு மாளிகையைச் சுற்றி புலவர்கள் கூட்டத்தை விட, கடன் கொடுத்தவர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. அதைத்தான் அப்படிக் குறிப்பிட்டேன்,'' என்றார் அமுதவாண புலவர்.
ராஜவேலு மாளிகையைச் சுற்றிக் கடன் காரர் கூட்டம் என்று வள்ளலை இகழ்வது போல புகழ்ந்த அமுதவாணரின் புலமையை மெச்சினார் சொக்க நாதர்.
''சொக்கநாதரே! நானும் ராஜவேலு வள்ளலை சந்தித்துவிட்டுத்தான் திரும்பு கிறேன். நிறையபொருளுதவி செய்தார். உடன் வந்த கடன்காரர்களுக்கெல்லாம் கடனைத் தீர்த்தேன். என் முதுமையை எண்ணி, என் ஊர் வரை செல்ல, அந்த வள்ளல் பல்லக்கும் ஏற்பாடு செய்தார்,'' என்றார் அமுதவாணர்.
சொக்கநாதப் புலவரையும் அதே பல்லக் கில் ஏற்றி அனுப்பினார்.
''நீர் போய் ராஜவேலு ஊரில் இறங்கிக் கொண்டு பல்லக்கைத் திருப்பி அனுப்பும்,'' என்றார்.
அப்படியே சொக்கநாதப் புலவர் சென்று, வள்ளலிடம் போதிய உதவி பெற்றுத் திரும்பினார்.
அந்தக் காலத்தில் புலவர்களுக்கு வாரி வாரி கொடுத்து நம் தமிழ்மொழியை வளர்த்தனர். ஆனால், இக்காலத்திலோ தமிழில் பேசுவதே கேவலம் என்று நினைக்கிறோம். இதுதான் காலத்தின் கோலம் என்பது.
June 30, 2017
அதிசயக்குதிரை - தெனாலி ராமன் கதை
கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.
அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது.
குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.
ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர்.
அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.
அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.
குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.
அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.
அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.
June 28, 2017
புத்திசாலி ஜாக் - சிறுகதை
வயல் வெளியில் நிலா வெளிச்சம் ஜொலித்தது. நிலவில் குளிர் காய்ந்திட நண்டுகள் எல்லாம் வயல் வரப்பை விட்டு வெளியே வந்தன.
''ஆஹா! நிலவொளியில் குளிர் காய்வது சூப்பரா இருக்கு... இப்படியே நாம் விடிய, விடிய இருந்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது'' என நண்டுகள் எல்லாம் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன.
உடனே அந்தப் பக்கமாக பூனை ஒன்று, 'மியாவ்... மியாவ்...' என்று கத்திக் கொண்டே வந்தது.
பூனையின் சப்தத்தைக் கேட்டதும் நண்டுகள் எல்லாம் வளையினுள் ஒளிந்துக் கொண்டன.
''ஆஹா! நிலா வெளிச்சம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கு! இந்த இடத்தில் நம்மைத் தவிர வேறு எவருமே இல்லை போன்று தெரிகிறது. வயல் வரப்புகளில் தவளைகளோ, இல்லை நண்டுகளோ ஏதாவது என் எதிரே தென்பட்டால் நான் அவைகளைப் பிடித்து சாப்பிடுவேன். ஆனால், இப்போது எதுவுமே என் எதிரே தென்படவில்லையே! நான் என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறிய படியே சென்றது.
அந்த நேரத்தில் பூனையின் எதிரே ஓர் பாம்பு வந்தது.
''பூனையாரே! ஏதோ புலம்பியபடி தனியாக வருகிறீரே! உமது வருகையானது எனக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது,'' என்றது பாம்பு.
''பாம்பே! இந்த இடத்தில் உன்னை சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது நான் உன்னை சந்திப்பதால் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்,'' என்றது பூனை.
''பூனையே! இந்த நேரத்தில் இந்த இடத்தில் உனக்கும், எனக்கும் ஏதாவது இரை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இங்கே நம் இருவருக்கும் இரை கிடைப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இல்லை. எனவே நீ என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது.
''பாம்பே! நீ என்ன செய்யப் போகிறாய்? அதனை முதலில் சொல்!'' என்று கேட்டது பூனை.
''பூனையே! நான் இந்த இடத்தை விட்டுச் செல்லாமல் சிறிது நேரம் காத்திருந்து... எனக்கு ஏதாவது இரை கிடைக்குமானால், அதனைப் பிடித்துச் செல்வேன்,'' என்றது பாம்பு.
''பாம்பே நீ காத்திருக்கும் போது, நானும் உன்னோடு காத்திருக்கலாமே! நாம் இருவரும் காத்துக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லையென நினைக்கிறேன்,'' என்றது பூனை.
''சரியாகச் சொன்னாய் பூனையே! இந்த நேரத்தில் உனக்கு நான் துணை! எனக்கு நீ துணை! நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வரப் போரத்தில் நண்டுகள் ஏதாவது வந்தால் பிடித்து தின்னலாம்,'' என்றது.
அதன் பின்னர் பாம்பும், பூனையும் அதே இடத்திலேயே காத்துக் கொண்டிருந்தன.
வளைக்குள் இருந்து இதைக் கவனித்த நண்டுகளோ எரிச்சலடைந்தது.
''ஐயோ! இதென்ன கொடுமை! நாம் எதிர் பார்க்காதபடி இந்த பூனையும், பாம்பும் இந்த இடத்தில் வந்துள்ளனவே! நாம் இவைகளை இந்த இடத்தை விட்டு எப்படியாவது விரட்டிட வேண்டும். அப்போதுதான் நாம் எல்லாரும் நமது கூட்டத்தினருடன் இந்த இடத்தில் குளிர் காய முடியும்,'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டன.
அந்த நண்டுகளின் கூட்டத்தில் 'ஜாக்' என்ற நண்டு இருந்தது. அது தன்னுடைய நண்பர்களின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியென்று ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருந்தது. அது சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ஜாக்கின் மனதில் ஓர் யோசனை தோன்றியது.
ஜாக் இருந்த வளையானது குறுஞ்செடிகளும், புற்களும் மறைத்துக் காணப்பட்டதால் அந்த வளையின் வெளியே மெல்ல தனது கொடுக்கை நீட்டி ஒரு குச்சியை எடுத்து சற்று மேலே தூக்கியவாறு அப்படியும், இப்படியும் ஆட்டியது.
நண்டோ, தவளையோ வெளியே வருகிறதா என்ற கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்த பூனையானது அப்படியும், இப்படியுமாக ஆடுகின்ற கம்பைக் கண்டு திடுக்கிட்டது.
உடனே அது அருகில் அமர்ந்திருந்த பாம்பை நோக்கியது.
''பாம்பே! பாம்பே! நமக்கு ஓர் அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதோ அந்த இடத்தில் அப்படியும், இப்படியுமாக கம்பு ஒன்று ஆடிக் கொண்டிருக்கின்றதே! அதனைப் பார்த்தாயா?'' என்று நடுக்கத்துடன் கேட்டது பூனை.
பூனையின் நடுக்கத்தைப் பார்த்ததும் பாம்பிற்கும் நடுக்கம் வந்தது.
உடனே, அது ஆடிக் கொண்டிருக்கும் கம்பை நோக்கியது.
அதற்கு அக்காட்சியைப் பார்த்ததும் மேலும் நடுக்கம் ஏற்பட்டது.
''பூனையே! இன்று பவுர்ணமியல்லவா! ஒருவேளை இந்த இடத்தில் பேய்களின் தொல்லை அதிகமாகயிருக்கும் போல் தோன்றுகிறது. வரப்போரத்தில் கிடக்கும் கம்பானது தானாக ஆடுகிறது என்றால் அதனை நாம் பேயின் வேலை என்றுதான் நம்பவேண்டும்,'' என்றது பாம்பு.
''ஆமாம் பாம்பே! நீ சொல்வது உண்மை தான். நான் இந்த வயல் பக்கம் வந்த போது இந்த இடமே அமைதியாகத் தானிருந்தது. எனவே, இந்த இடத்தில் நிச்சயமாகப் பேய்களின் நடமாட்டம் இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது. எனவே, நாம் உடனடியாக இந்த இடத்தினை விட்டுச் சென்றிட வேண்டும்! இனிமேல் பகல் நேரத்தில் கூட நாம் இந்தப் பக்கமாக வரக்கூடாது!'' என்றது பூனை.
அதனைத் தொடர்ந்து பூனையும், பாம்பும் அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓட்டமெடுத்தன.
அவை இரண்டும் அந்த இடத்தை விட்டு ஓடிய பின்னர், வளைக்குள் இருந்த நண்டுகள் எல்லாம் மெல்ல வெளியே வந்தன.
எல்லா நண்டுகளும் வெளியே வருவதைக் கண்டதும் ஜாக் நண்டு, உற்சாகத்துடன் வெளியே வந்தது.
நண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபடி ஜாக்கை பாராட்டின.
''நண்பனே! உன்னுடைய சாகசச் செயலினால் நம் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்த பூனையையும், பாம்பையும் விரட்டி விட்டாய்! இனிமேல் அவை பகல் நேரத்தில் கூட இந்தப்பக்கம் வரமாட்டோம் என்று உறுதியளித்தபடி ஓடிவிட்டன. உனக்கு எங்கள் எல்லாருடையப் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றன நண்டுகள்.
''நண்பர்களே! பகைவர்களை கண்டு பயப்படாமல், அவர்களை புத்திசாலித்தனமாக விரட்ட வேண்டும்!'' என்று அறிவுரை கூறியது ஜாக்.
அனைத்து நண்டுகளும், ஜாக்கின் அறிவுரைக் கேட்டுக்கொண்டன.
''ஆஹா! நிலவொளியில் குளிர் காய்வது சூப்பரா இருக்கு... இப்படியே நாம் விடிய, விடிய இருந்து கொள்ளலாம் போலத் தோன்றுகிறது'' என நண்டுகள் எல்லாம் ஒன்றோடொன்று பேசிக் கொண்டன.
உடனே அந்தப் பக்கமாக பூனை ஒன்று, 'மியாவ்... மியாவ்...' என்று கத்திக் கொண்டே வந்தது.
பூனையின் சப்தத்தைக் கேட்டதும் நண்டுகள் எல்லாம் வளையினுள் ஒளிந்துக் கொண்டன.
''ஆஹா! நிலா வெளிச்சம் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கு! இந்த இடத்தில் நம்மைத் தவிர வேறு எவருமே இல்லை போன்று தெரிகிறது. வயல் வரப்புகளில் தவளைகளோ, இல்லை நண்டுகளோ ஏதாவது என் எதிரே தென்பட்டால் நான் அவைகளைப் பிடித்து சாப்பிடுவேன். ஆனால், இப்போது எதுவுமே என் எதிரே தென்படவில்லையே! நான் என்ன செய்வது?'' என்று கவலையுடன் கூறிய படியே சென்றது.
அந்த நேரத்தில் பூனையின் எதிரே ஓர் பாம்பு வந்தது.
''பூனையாரே! ஏதோ புலம்பியபடி தனியாக வருகிறீரே! உமது வருகையானது எனக்கு வியப்பாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது,'' என்றது பாம்பு.
''பாம்பே! இந்த இடத்தில் உன்னை சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது நான் உன்னை சந்திப்பதால் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்,'' என்றது பூனை.
''பூனையே! இந்த நேரத்தில் இந்த இடத்தில் உனக்கும், எனக்கும் ஏதாவது இரை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், இங்கே நம் இருவருக்கும் இரை கிடைப்பதற்கான எந்தவிதமான சூழ்நிலையும் இல்லை. எனவே நீ என்ன செய்யப் போகிறாய்?'' என்று கேட்டது.
''பாம்பே! நீ என்ன செய்யப் போகிறாய்? அதனை முதலில் சொல்!'' என்று கேட்டது பூனை.
''பூனையே! நான் இந்த இடத்தை விட்டுச் செல்லாமல் சிறிது நேரம் காத்திருந்து... எனக்கு ஏதாவது இரை கிடைக்குமானால், அதனைப் பிடித்துச் செல்வேன்,'' என்றது பாம்பு.
''பாம்பே நீ காத்திருக்கும் போது, நானும் உன்னோடு காத்திருக்கலாமே! நாம் இருவரும் காத்துக் கொண்டிருப்பதில் எந்தத் தவறும் இல்லையென நினைக்கிறேன்,'' என்றது பூனை.
''சரியாகச் சொன்னாய் பூனையே! இந்த நேரத்தில் உனக்கு நான் துணை! எனக்கு நீ துணை! நாம் இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து வரப் போரத்தில் நண்டுகள் ஏதாவது வந்தால் பிடித்து தின்னலாம்,'' என்றது.
அதன் பின்னர் பாம்பும், பூனையும் அதே இடத்திலேயே காத்துக் கொண்டிருந்தன.
வளைக்குள் இருந்து இதைக் கவனித்த நண்டுகளோ எரிச்சலடைந்தது.
''ஐயோ! இதென்ன கொடுமை! நாம் எதிர் பார்க்காதபடி இந்த பூனையும், பாம்பும் இந்த இடத்தில் வந்துள்ளனவே! நாம் இவைகளை இந்த இடத்தை விட்டு எப்படியாவது விரட்டிட வேண்டும். அப்போதுதான் நாம் எல்லாரும் நமது கூட்டத்தினருடன் இந்த இடத்தில் குளிர் காய முடியும்,'' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டன.
அந்த நண்டுகளின் கூட்டத்தில் 'ஜாக்' என்ற நண்டு இருந்தது. அது தன்னுடைய நண்பர்களின் மகிழ்ச்சியே தன் மகிழ்ச்சியென்று ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருந்தது. அது சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தது.
சிறிது நேரத்திற்குப் பின்னர் ஜாக்கின் மனதில் ஓர் யோசனை தோன்றியது.
ஜாக் இருந்த வளையானது குறுஞ்செடிகளும், புற்களும் மறைத்துக் காணப்பட்டதால் அந்த வளையின் வெளியே மெல்ல தனது கொடுக்கை நீட்டி ஒரு குச்சியை எடுத்து சற்று மேலே தூக்கியவாறு அப்படியும், இப்படியும் ஆட்டியது.
நண்டோ, தவளையோ வெளியே வருகிறதா என்ற கவனமுடன் பார்த்துக் கொண்டிருந்த பூனையானது அப்படியும், இப்படியுமாக ஆடுகின்ற கம்பைக் கண்டு திடுக்கிட்டது.
உடனே அது அருகில் அமர்ந்திருந்த பாம்பை நோக்கியது.
''பாம்பே! பாம்பே! நமக்கு ஓர் அதிர்ச்சிக் காத்துக் கொண்டிருக்கின்றது. அதோ அந்த இடத்தில் அப்படியும், இப்படியுமாக கம்பு ஒன்று ஆடிக் கொண்டிருக்கின்றதே! அதனைப் பார்த்தாயா?'' என்று நடுக்கத்துடன் கேட்டது பூனை.
பூனையின் நடுக்கத்தைப் பார்த்ததும் பாம்பிற்கும் நடுக்கம் வந்தது.
உடனே, அது ஆடிக் கொண்டிருக்கும் கம்பை நோக்கியது.
அதற்கு அக்காட்சியைப் பார்த்ததும் மேலும் நடுக்கம் ஏற்பட்டது.
''பூனையே! இன்று பவுர்ணமியல்லவா! ஒருவேளை இந்த இடத்தில் பேய்களின் தொல்லை அதிகமாகயிருக்கும் போல் தோன்றுகிறது. வரப்போரத்தில் கிடக்கும் கம்பானது தானாக ஆடுகிறது என்றால் அதனை நாம் பேயின் வேலை என்றுதான் நம்பவேண்டும்,'' என்றது பாம்பு.
''ஆமாம் பாம்பே! நீ சொல்வது உண்மை தான். நான் இந்த வயல் பக்கம் வந்த போது இந்த இடமே அமைதியாகத் தானிருந்தது. எனவே, இந்த இடத்தில் நிச்சயமாகப் பேய்களின் நடமாட்டம் இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது. எனவே, நாம் உடனடியாக இந்த இடத்தினை விட்டுச் சென்றிட வேண்டும்! இனிமேல் பகல் நேரத்தில் கூட நாம் இந்தப் பக்கமாக வரக்கூடாது!'' என்றது பூனை.
அதனைத் தொடர்ந்து பூனையும், பாம்பும் அந்த இடத்தைவிட்டு வேகமாக ஓட்டமெடுத்தன.
அவை இரண்டும் அந்த இடத்தை விட்டு ஓடிய பின்னர், வளைக்குள் இருந்த நண்டுகள் எல்லாம் மெல்ல வெளியே வந்தன.
எல்லா நண்டுகளும் வெளியே வருவதைக் கண்டதும் ஜாக் நண்டு, உற்சாகத்துடன் வெளியே வந்தது.
நண்டுகள் எல்லாம் ஒன்று சேர்ந்தபடி ஜாக்கை பாராட்டின.
''நண்பனே! உன்னுடைய சாகசச் செயலினால் நம் மகிழ்ச்சிக்கு இடையூறாக இருந்த பூனையையும், பாம்பையும் விரட்டி விட்டாய்! இனிமேல் அவை பகல் நேரத்தில் கூட இந்தப்பக்கம் வரமாட்டோம் என்று உறுதியளித்தபடி ஓடிவிட்டன. உனக்கு எங்கள் எல்லாருடையப் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்கிறோம்,'' என்றன நண்டுகள்.
''நண்பர்களே! பகைவர்களை கண்டு பயப்படாமல், அவர்களை புத்திசாலித்தனமாக விரட்ட வேண்டும்!'' என்று அறிவுரை கூறியது ஜாக்.
அனைத்து நண்டுகளும், ஜாக்கின் அறிவுரைக் கேட்டுக்கொண்டன.
அந்தரங்கங்களை செல்போனில் பதிவு செய்பவர்களுக்கு சில அறிவுரைகள்
நீங்க எந்த காதலாவது பண்ணுங்க. ஆனா கண்ணை மூடிகிட்டு நம்பாதிங்க. கொஞ்சமாவது மனசாட்சி உள்ளவனா, நல்லவனா பாருங்க. அது தெரியாம வெப் கேம்ல காட்டரது, போட்டோ எடுத்து அனுப்பரது எல்லாம் வேண்டாம். தூக்கி நெட்ல போட்டு போய்கிட்டே இருக்கானுங்க.
டேட்டிங், ஹனிமூன் போற புண்ணியவான்களே! உங்க பொண்டாட்டி / லவ்வர வித விதமான போஸ்ல போட்டோ எடுப்பதை நிறுத்துங்க. அப்படி இல்லைனா தனி மெம்மரி கார்ட் யூஸ் பண்ணுங்க. ஊர் சுற்றும் போட்டோ எல்லாம் எடுப்பதுரு அதோ மெம்மரி கார்டில் அந்தரங்க போட்டோவும் எடுக்கறது, அதுக்கு அப்புறம் அந்தரங்க போட்டோ எல்லாம் கம்பியூட்டருக்கு மாத்திட்டு டெலிட் பண்ணிட்டு பிரிண்டிங் கொடுக்கறது. ஆனா இன்னைக்கு இருக்க டெக்னாலஜிக்கு அழிக்கபட்ட போட்டோஸ் தேடி எடுக்கறதே சிலருக்கு வேலை. சுலபமா உங்க பர்சனல் லைப் நெட்க்கு போய்டும்.
சில அதிமேதாவிங்க செல்போன்ல மெம்மரி கார்டுக்கு லாக் போட்டு இருக்கும் தைரியத்தில் யாரிடம் வேண்டுமானலும் செல்போனை கொடுத்துட்டு போறது. அப்புறம் எப்படி வெளியே போச்சினு அழறது. அதே மாதிரி லாப்டாப்ல இருக்க ப்ரவுசர்ல பாஸ்வேர்ட் எல்லாம் சேவ் பண்ணி வைக்கிறது. அதுக்கு அப்புறம் அந்த லாப்டாப் நண்பர்கள் கிட்ட கொடுக்கறது. அவங்க ப்ரவுஸர் ஓப்பன் பண்ணதும் அது தானா உங்க மெயில் உள்ள போய்டும். உங்க ராணுவ ரகசியமும் போகும். அதனால லாப்டாப்பில் எப்பவும் இரண்டு அக்கவுண்ட் வச்சி இருங்க. இல்லைனா guest அக்கவுண்ட் ஆன் பண்ணி வைங்க.
டெக்னிக்கல் சிங்கங்கள்கிட்ட Remote Access (அவங்க உங்க கம்பியூட்டர் ஸ்கீரின் பாக்கறது, உங்க கம்பியூட்டரை ஆப்ரேட் பண்றது) கொடுத்தா வேலை முடிஞ்சதும் அந்த சாப்ட்வேரை (Teamviewer, logmein) தூக்குங்க. அவசர உதவி ஏதாவது தேவைபட்டு உங்க இ-மெயில் பாஸ்வேர்ட் கொடுத்து இருந்தா அதையும் மாற்றுங்கள். யாரையும் நம்பாதிங்கன்னு சொல்ல வரவில்லை. உங்க நம்பிக்கை வேற எதிலாவது காட்டுங்க
June 20, 2017
வீர முழக்கம் முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாற்று தகவல்கள் !!
இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து
April 14, 2017
திருந்திய எழிலன் - சிறுகதை
எழிலனின் தந்தை கல் உடைக்கும் தொழிலாளி. வெயிலில் மாதம் முழுவதும் உழைத்தாலும் கூட அவருக்கு மாத வருமானம் மிகவும் குறைவுதான். அந்த வருமானத்திலேயே அவர் குடியிருக்கும் வீட்டுக்கு வாடகையும் கொடுக்க வேண்டும். உணவு மற்றும் இதரச் செலவுகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும். தான் படும் கஷ்டங்களைத் தன்மகன் படக்கூடாது என்பதற்காக எழிலனை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என எண்ணினார்.
எழிலன் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். ஏதோ பள்ளிக்குப் போகிறோம் என்ற கடமைக்காக அவன் பள்ளிக்குப் போவானே தவிர, ஒழுங்காகப் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற அக்கறை அவனுக்குச் சிறிது கூட இல்லை.
பள்ளியில் சிறிதுநேரம் இருப்பான். பிறகு, வெளியில் கிளம்பிவிடுவான். சில மாணவர்களுடன் சேர்ந்து ஊர்சுற்றியும், அருகில் இருந்த திரையரங்குகளுக்குச் சென்று திரைப்படம் பார்த்தும், வயதான பெரியவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தும், பொய் பேசியும் வீணாக பொழுதைப் போக்கி வந்தான். மேலும் இது குறித்து அவன் ஒருநாள் கூட கவலைப்பட்டதே இல்லை.
தன் தந்தையிடம் செலவுக்குக் காசு வாங்கிக் கொள்வான். அவர், எழிலன் ஒரே மகன் என்பதாலும் படிக்கும் மாணவர்கள் ஏதாவது வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்றும் எண்ணி அவன் கேட்கும் பொழுதெல்லாம் பணம் கொடுத்து வந்தார்.
எழிலன், தன் தந்தையார் கொடுத்த பணத்தை வாங்கிச் சாப்பிடாமல், தீய நண்பர்களுடன் சேர்ந்து சூதாட்டம் ஆடினான். மற்றவர்கள் அவன் கெட்டவன் என வெறுத்து ஒதுக்கும்படி அவனுடைய செயல்கள் இருந்தன.
அவனுடைய வகுப்பாசிரியர், அவனுடைய நடவடிக்கைகள் சரியில்லை என்று கண்டித்தார். பிறகு, அவனுடைய அப்பாவிடம் அவனைக் கண்டித்து வளர்க்குமாறும் சொன்னார். ஆனால், இவற்றால் எந்தப் பயனும் ஏற்படவில்லை. எழிலனின் தந்தையார் அவனுடைய செயல்களால் பெரிதும் மனம் வருந்தினார்.
ஒருநாள் காவல்துறையினர் 10 பேரை சாலையில் அடித்து உதைத்தபடி, இழுத்துச் சென்று கொண்டிருந்தனர்.
இதை பார்த்த எழிலன் கூடியிருந்தவர்களிடம், ''அவர்களை ஏன் காவல் துறையினர் அடிக்கிறார்கள்?'' என்று கேட்டான்.
''அவர்கள் சூதாட்டம் ஆடிக் கொண்டிருந்தவர்கள்,'' என்று கூறினர்.
பலநாள்கள் அவர்கள் அகப்படவில்லையென்றும், இன்று வகையாக அகப்பட்டுக் கொண்டார்கள் என்றும் அவர்கள் அவனிடம் மேலும் கூறினர்.
அதைக் கேட்டதும் எழிலனுக்கு உதறல் எடுத்தது. 'மற்றவர்கள் வெறுக்கும் படி நடந்தால் இப்படித்தான் உதைபட வேண்டும். போலிருக்கிறது,' என்று எண்ணி அன்றிலிருந்து திருந்திவிட்டான்.
அன்றிலிருந்து தீய நண்பர்களுடன் சேராமல், தந்தையிடம் பணம் வாங்காமல் பள்ளிக்கு ஒழுங்காக சென்று பாடங்களை நன்றாக படித்து வந்தான். தன் மகன் எழிலன் திருந்தியதைக் கண்ட அவன் தந்தையார் மகிழ்ந்தார்.
March 3, 2017
இரு துருவங்கள்!-சிறுகதை
வெகு காலத்துக்கு முன், ஒரு சிறிய நாட்டை ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவர் பெயர் அச்சலேந்திரா.
அச்சலேந்திரா ஏழைகளிடத்தில் இரக்க குணம் கொண்டவர். தன்னால் ஆன எல்லா உதவிகளை ஏழைகளுக்கு செய்து வந்தார். அதே போல் பிறரை ஏமாற்றி பொருளை அபகரிப்பவர்களையும் வெறுத்தார்.
அச்சலேந்திரா அடிக்கடி மாறுவேடத்தில் தன் நாட்டைச் சுற்றிப் பார்க்க புறப்பட்டு விடுவார். அவர் அப்படி செல்லும் போது தன்னுடன் யாரையும் அழைத்துச் செல்ல மாட்டார். தனியாக செல்லும் அரசர், தன் நாட்டில் வறுமையில் வாடும் யாரையாவது கண்டால், அவர்களை மறுநாள் தன் அரசவைக்கு அழைத்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்கள் சுகமாக வாழ வழி செய்து வந்தார்.
ஒருநாள் அச்சலேந்திரா மாறுவேடத்தில் தான் நாட்டை சுற்றிப் பார்க்க புறப்பட்டார். அவருக்கு பலவிதமான அனுபவங்கள் கிடைத்தன.
ஒரு ஊரில் இரண்டு பேர் வீதியில் கண்டெடுத்த பணமுடிப்புக்காக சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். மாறுவேடத்தில் அங்கு வந்த அரசனைப் பார்த்த இரண்டு பேரும் வந்தவர் அரசன் என்று தெரியாமல் அவரிடம் நியாயம் கேட்டனர்.
பணமுடிப்புக்கு உண்மையான சொந்தக்காரன் ஒரு விவசாயி. அவன் தன் மகளின் திருமணத்திற்காக தன் வயலில் விளைந்த நெல்லை சந்தையில் விற்றுவிட்டு கிடைத்த பணத்தை, ஒரு சிறிய துணிப்பையில் போட்டு அதை ஒரு பண முடிப்பு போல் எடுத்து வரும் போது, தவறுதலாக வீதியில் தவறவிட்டு விட்டான். சிறிது தூரம் சென்ற விவசாயி பண முடிப்பு காணமல் போனதை அறிந்து, திரும்பி வந்து பார்த்தபோது மிக அருகில் ஒருவன் பணமுடிப்பை கையில் வைத்திருப்பதைப் பார்த்தான். உடனே விவசாயி பணமுடிப்பு என்னுடையது என்று, பண முடிப்பை வைத்திருப்பவனிடம் கூறினான்.
பணமுடிப்பை வைத்திருந்தவன் பண முடிப்பு தன்னுடையதுதான் என்று சற்று உரத்த குரலில் கூறினான்.
பணமுடிப்புக்கு உண்மையான சொந்தக்காரனான விவசாயிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றான். அந்த நேரத்தில் தான் மாறு வேடத்தில் இருந்த அரசர் அச்சலேந்திரா அங்கு வந்தார்.
''விவசாயி மாறுவேடத்தில் இருந்த அரசரிடம், ஐயா! உங்களைப் பார்த்தால் ஒரு பெரிய இடத்து மனிதர் போல் தோன்றுகிறது. நீங்கள் தான் என்னுடைய பணமுடிப்பை வாங்கித் தர வேண்டும்,'' என்று கூறினான்.
அரசர் அச்சலேந்திரா பணமுடிப்பு வைத்திருந்தவனைப் பார்த்து சற்று பணிவாக, ''ஐயா! உங்கள் கையில் உள்ள பணமுடிப்பு இதோ என் அருகில் நிற்பவருடையது என்று கூறுகிறார், இந்த பணமுடிப்பு உங்களுடையது என்று நிரூபிக்க உங்களிடம் ஏதாவது ஆதாரம் உள்ளதா?'' என்று கேட்டார்.
பணமுடிப்பை கையில் வைத்திருந்தவன், தன்னை கேட்டவர் மாறு வேடத்தில் இருக்கும் அரசர் என்று தெரியாமல், ''ஐயா! உங்களைப் பார்த்தால் பெரிய இடத்து மனிதர் போலவும், நன்கு படித்தவர் போலவும் தெரிகிறது. பண முடிப்பு என் கையில் இருக்கும் போது, அது என்னுடையது என்பதற்கு, இதைத் தவிர என்ன ஆதாரம் வேண்டும்,'' என்று சற்று ஏளனமாக அரசனைப் பார்த்துக் கூறினான்.
அச்சலேந்திரா தன் எதிரில் இருக்கும் இரண்டு பேரையும் பார்த்து, ''ஒரு பணமுடிப்புக்கு, இரண்டு பேர் சொந்தம் கொண்டாடுகிறீர்கள், அதனால் பணமுடிப்புக்கு உண்மையான சொந்தக்காரன் யார் என்பதை எப்படி கண்டு பிடிப்பது என்பது எனக்குத் தெரியும்,'' என்றார் அரசர்.
அச்சலேந்திராவுடன் இரண்டு பேரும் பேசிக் கொண்டிருந்த போது அவர்களை சுற்றி கூட்டம் கூடி விட்டது.
அச்சலேந்திரா பணமுடிப்பு வைத்திருந்தவனைப் பார்த்து, ''பண முடிப்பில் எவ்வளவு பணம் உள்ளது?'' என்று கேட்டான்.
பணமுடிப்பு வைத்திருந்தவன் என்ன பதில் சொல்வதென்று புரியாமல் திகைத்தபடி, ''பணமுடிப்பில் என்ன இருக்கும்... பணம்தான் இருக்கும்!'' என்று அலட்சியமாக பதில் சொன்னான்.
அரசர் விவசாயியைப் பார்த்து, ''பணமுடிப்பில் எவ்வளவு பணம் உள்ளது?'' என்று கேட்டார்.
விவசாயி சற்றும் தாமதிக்காமல், ''நூறு வெள்ளி காசுகளும், ஒரு மோதிரமும் உள்ளதாகக் கூறினான்!''
மாறுவேடத்தில் இருந்த அரசனும், கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒரு முதியவரை அழைத்து, ''ஐயா! பணமுடிப்பு வைத்திருப்பவரிடம் உள்ள பண முடிப்பை வாங்கி அதில் உள்ள பணத்தை எண்ணிப் பாருங்கள்,'' என்று கூறினான்.
அரசன் கூறியதைக் கேட்டவுடன் பண முடிப்பு வைத்திருந்தவன், தான் எப்படியும் மாட்டிக் கொள்வோம் என்ற எண்ணத்தில் பண முடிப்பை முதியவரிடம் கொடுத்து விட்டு, கூட்டத்தின் நடுவில் சென்று அங்கிருந்து நகரப் பார்த்தான். அதை கவனித்த அரசன் உடனே, அவனை நகரவிடாமல் பிடித்துக் கொள்ளுமாறு கூட்டத்தினரைப் பார்த்து கூறினார்.
முதியவர் பணமுடிப்பை பிரித்து அதில் நூறு வெள்ளி காசுகளும், ஒரு மோதிரமும் இருப்பதாகக் கூறினார். அரசன் பணமுடிப்பை முதியவரிடம் இருந்து வாங்கி விவசாயிடம் கொடுத்து, மகள் திருமணத்தை நல்லவிதமாக நடத்தும்படி வாழ்த்தி அனுப்பினான்.
கூட்டத்தினர் பிடித்து வைத்திருப்பவனை, அரசன், அந்த ஊர் நீதிபதியிடம் அழைத்துச் சென்றான். அரசன் நீதிபதியிடம், தான் மாறுவேடத்தில் இருக்கும் இந்த நாட்டின் சிற்றரசன் என்று கூறினான். நீதிபதியும் வந்திருப்பது அரசன் அச்சலேந்திரா என்று தெரிந்ததும் வணங்கி நின்றார்.
''பிறர் பொருளை அபகரிப்பதும், ஏமாற்றுவதும், திருடுவதும் ஒரே மாதிரியான தீய செயல்கள் தான். என் நாட்டில் இது போன்ற ஏமாற்றுக்காரர்கள் இருக்கக் கூடாது. அதனால் நான் அழைத்து வந்த இந்த குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கி, இவனுக்கு கிடைக்கும் தண்டனையை பார்க்கும் மக்கள் தவறு செய்ய பயப்பட வேண்டும்,'' என்று கூறினான். பிறகு அவன் தன் அரண்மனைக்குச் சென்றுவிட்டான்.
சில நாட்கள் அரசாங்க காரியங்களில் மூழ்கி இருந்த அரசன், தன் நாட்டை சுற்றிப் பார்க்க நேரம் இல்லாமல் அரண்மனையிலேயே இருந்து வந்தான். திடீர் என்று ஒருநாள் அரசன் மாறுவேடம் ஏதும் அணியாமல், தன் குதிரை மீது அமர்ந்து அரச உடையிலேயே நாட்டை சுற்றிப் பார்க்க புறப்பட்டான்.
குதிரை மீது அமர்ந்தவாறே பல கிராமங்களை சுற்றிப் பார்த்த அரசன், தன் அரண்மனைக்கு திரும்பும் வழியில், ஒரு ஊருக்கு மத்தியில் இருந்த வீதி வழியே சென்று கொண்டிருந்தான். வீதியில் ஒரு முதியவர்
April 4, 2016
மாரடைப்பால் மரணம் வியாபாரியின் உடலை வாங்க 2 மனைவிகள் போட்டி
மாரடைப்பால் இறந்த வியாபாரியின் உடலை வாங்க அவரது 2 மனைவிகள் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் போட்டி போட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வியாபாரி
சென்னை திருவொற்றியூர், ராஜாஜி நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ்(வயது 45). அந்த பகுதியில் மளிகை கடை வைத்து இருந்தார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.
அனிதாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் கோவிந்தராஜ் அம்மு என்ற பெண்ணை 2–வதாக திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. கடந்த 10 வருடங்களாக 2–வது மனைவி அம்முவுடன் கோவிந்தராஜ் வசித்துவந்தார்.
2 மனைவிகள் போட்டி
கோவிந்தராஜுக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள், வழியிலேயே கோவிந்தராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
அப்போது ஆஸ்பத்திரிக்கு வந்த 2 மனைவிகளும் கோவிந்தராஜ் உடலை தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு விரைந்துவந்த போலீசார், போட்டி போட்ட 2 பெண்களையும் சமரசம் செய்துவைத்தனர். பின்னர் கோவிந்தராஜ் உடலை முதல் மனைவி சம்மதத்துடன் 2–வது மனைவி அம்முவிடம் ஒப்படைத்தனர்.
மற்றொரு சம்பவம்
சென்னை வண்ணாரப்பேட்டை, கெனால் தெருவைச் சேர்ந்தவர் சாந்தி(55). இவருக்கு கவுசல்யா, மஞ்சுளா, அனிதா, கல்பனா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். 4 பேருக்கும் திருமணமாகி தங்கள் கணவர்களுடன் தனித்தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த சாந்தி நேற்று காலை இறந்துவிட்டார்.
அவரது உடலை அவரது மகள்களான கவுசல்யா, மஞ்சுளா, கல்பனா ஆகிய 3 பேரும் தங்களிடம் தான் ஒப்படைக்க வேண்டும். நாங்கள் ஓட்டேரியில் வைத்து நல்லடக்கம் செய்கிறோம் என்றனர். சாந்தியின் மற்றொரு மகள் அனிதாவும், தாய் கன்னியம்மாளும் வண்ணாரப்பேட்டையில் தான் சாந்தியின் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றனர்.
தாயாரிடம் ஒப்படைப்பு
இதையடுத்து தனது தாயின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வண்ணாரப்பேட்டை போலீசில் கவுசல்யா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார், சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
அங்கு பிரேத பரிசோதனை முடிந்த பிறகு சாந்தியின் உடல் அவரது தாயார் கன்னியம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது.
அம்பத்தூர் அருகே பரிதாபம் கோவில் குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 2 பேர் பலி
அம்பத்தூர் அருகே கோவில் குளத்தில் மூழ்கி 7–ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
7–ம் வகுப்பு மாணவர்கள்
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் எல்லையம்மன் நகரைச் சேர்ந்தவர் காசிநாதன். வக்கீல். இவருடைய மனைவி கவுரி. இவர்களது மகன்கள் அஜய்குமார் (வயது 13), குரு (6). இவர்களில் அஜய்குமார், கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி. இவர்களது மகன்கள் காந்திராஜன் (15), திருமுருகன் (13). இவர்களில் திருமுருகன், மற்றொரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான்.
அஜய்குமார், திருமுருகன் இருவரும் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்தாலும் இருவரின் வீடுகளும் அருகருகே இருப்பதால் நண்பர்களாக பழகி வந்தனர்.
குளத்தில் மூழ்கி பலி
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்கள் இருவரும் காலையில் நடைபயிற்சி சென்று விட்டு வருவதாக தங்கள் வீட்டில் கூறி விட்டு ஏரிக்கரை ஓரமாக உள்ள சியாத்தம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்குள்ள குளத்தின் கரையை சுற்றியவாறு இருவரும் நடைபயிற்சி மேற்கொண்டனர்.
பின்னர் குளத்தில் இறங்கி கால்களை கழுவி கொண்டிருந்த அஜய்குமார், திருமுருகன் இருவரும் எதிர்பாராதவிதமாக குளத்துக்குள் தவறி விழுந்து விட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டனர்.
பிணமாக மிதந்தான்
இதற்கிடையில் காலையில் நடைபயிற்சி செல்வதாக கூறிச்சென்ற தங்கள் மகன்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவர்களின் பெற்றோர், பல்வேறு இடங்களில் சென்று தேடினர். ஆனால் எங்கேயும் அவர்களை காணவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் சியாத்தம்மன் கோவிலுக்கு சென்ற ஒருவர் குளத்தின் அருகில் சென்று பார்த்த போது குளத்தில் திருமுருகன் பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் அந்த பகுதி பொதுமக்களிடம் தெரிவித்தார்.
பெற்றோர் கதறல்
பொதுமக்களே குளத்தில் மிதந்த திருமுருகன் உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் காசிநாதன் மற்றும் சுரேஷ் குடும்பத்தினரும் அங்கு ஓடி வந்தனர். சுரேஷின் மனைவி முத்துலட்சுமி தனது மகன் திருமுருகன் உடலை பார்த்து கதறி அழுதார்.
இதையடுத்து பொதுமக்களில் சிலர் குளத்தில் இறங்கி தேடினர். அப்போது குளத்தில் இருந்து அஜய்குமாரையும் பிணமாக மீட்டனர். அவனது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். ஒரே நேரத்தில் பள்ளி மாணவர்கள் இருவரும் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பொதுமக்கள் கோரிக்கை
இதுபற்றி தகவல் அறிந்து வந்த கொரட்டூர் போலீசார், பலியான மாணவர்கள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கடந்த மாதம் இதேபோல் வில்லிவாக்கத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் இந்த கோவில் குளத்தில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பலியானார். எனவே அந்த குளத்தை சுற்றிலும் இரும்பு வேலி அமைத்து உயிர் பலி ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
April 3, 2016
வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.??
லேன்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை இண்டர்நெட் செயலிகளான ஸ்கைப், வாட்ஸ்ஆப் அல்லது வைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை வழங்குவோர் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே சேர்த்திணைத்த ஒப்பந்தங்களுக்கு அரசு அனுமதி அளித்திருப்பதை தொடர்ந்து இந்த சேவை வழங்கப்பட இருக்கின்றது.
புதிய சேவை வழங்கப்படும் நிலையில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் குறைக்கப்படலாம். ஆனால் இந்த சேவையை பயன்படுத்த அதிவேக இண்டர்நெட் தேவை என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
புதிய சேவை வழங்கப்படும் நிலையில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் குறைக்கப்படலாம். ஆனால் இந்த சேவையை பயன்படுத்த அதிவேக இண்டர்நெட் தேவை என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகின்றது.
வாட்ஸ்ஆப் செயலியில் தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..
- முதலில் போனின் இன்டர்னெல் மெமரி அல்லது SD Card சென்று Whatsapp > Databases ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- டேட்டாபேசஸ் ஃபோல்டரில் msgstore-2014-01-04.1.db.crypt. என்ற பெயரில் பல்வேறு ஃபைல்களை காண முடியும். இதோடு அவைகளில் என்று உருவாக்கப்பட்டது என்பதை குறிப்பிட தேதியும் காணப்படும், கூடவே msgstore.db.crypt என்ற ஃபைல் தெரியும். அது தான் முக்கியமான ஃபைல் ஆகும்.
- அடுத்து ஃபைலின் பெயரை மாற்றியமைக்க வேண்டும், அதாவாது msgstore.db.crypt என்ற ஃபைலை backup-msgstore.db.crypt என்ற பெயருக்கு மாற்ற வேண்டும்.
- அடுத்து ஃபைலின் பெயரை மாற்றியமைக்க வேண்டும், அதாவாது msgstore.db.crypt என்ற ஃபைலை backup-msgstore.db.crypt என்ற பெயருக்கு மாற்ற வேண்டும்.
- மீண்டும் msgstore.db.crypt ஃபைலின் பெயரை மாற்ற வேண்டும். இதற்கு Setting > Applications > manage applications > Whatsapp, சென்று Clear Data என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.
- இனி msgstore.db.crypt ஃபைல் ரீஸ்டோர் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்தால் பேக்கப் ஃபோல்டரில் இருந்து குறுந்தகவல்களை ரீஸ்டோர் செய்யும் ஆப்ஷன் உங்களது திரையில் தெரியும். இங்கு ரீஸ்டோர் பட்டனை க்ளிக் செய்தால் அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கப்பட்டு விடும்.
மண்டையை பிளக்கும் வெயில்... பரவும் மஞ்சகாமாலை... தடுக்கும் வழிகள்!
மழை காலத்தில் வழக்கமாக நகரவாசிகள் சொல்வார்கள், “எப்பா... வெயில் அடிச்சாக் கூட திட்டிக் கிட்டே வேலை பார்த்துடலாம்... ஆனா இந்த மழை வாட்டி எடுக்குப்பா... எங்கேயும் வெளியில கூட போக முடியல...” ஆம். நாம் அப்படி பழகி விட்டோம். மழை, குளுமை குறித்த சித்தரிப்புகள் நம் மனதளவில் இருந்தாலும், பணம், பிரதானமான நம் நடைமுறை வாழ்க்கையில் நம்மையும் அறியாமல் மழையையை விட, வெயிலை தான் அதிகம் விரும்புகிறோம். வெயில் வெப்பத்தையும், வெளிச்சத்தையும் மட்டும் தரவில்லை. அது, சில நோய்களையும் வழங்கி வருகிறது. அதில், பிரதானமானது மஞ்சள் காமாலை.
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல:
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது நோய்கான குறியீடு ஆகும். உடலில் ஏற்பட்டுள்ள தொற்று நோய்க்ளையும், புற்று நோய்களையும் வெளிப்படுத்தும் அறிகுறிதான் மஞ்சள் காமாலை. கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மஞ்சள் காமாலை ஏற்பட காரணம். தரமற்ற குடிநீர், புகை மது பழக்கம் ஆகியவைகளால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு கல்லீரல் கெட்டு, அது மஞ்சள் காமாலையாக வெளிப்படுகிறது. கண் மஞ்சள் நிறமாவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது ஆகியவை மஞ்சள் காமாலைக்கான் அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், முறையான ரத்த பரிசோதனை மூலம் நோயை கண்டறிவதுதான் சிறந்தது.
மஞ்சள் காமாலை வகைகள்:
ஆங்கில மருத்துவமுறையில் மஞ்சள் காமாலையை ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ என்று பல வகைகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், ஹெபடைடிஸ் சி, மற்றும் டி வகைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
ஹெபடைடிஸ் ஏ, பி க்கான காரணம் நாம் தினந்தோறும் பருகும் மோசமான குடிநீர், உண்ணும் தரமற்ற உணவு மற்றும் ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட ஊசியை இன்னொருவருக்கு செலுத்துவது ஆகியவை சொல்லப்படுகின்றன. இதற்கு தடுப்பூசி உண்டு.
மன உளைச்சலும், மஞ்சள் காமாலையும்:
சிலருக்கு தூய்மையான நீர், தரமான உணவு அருந்தினாலும் மஞ்சள் காமாலை வரும். அதற்கு காரணம் அதிக வேலை அழுத்தமும், அது தரும் மன உளைச்சலும்தான். வாரத்திற்கு ஒரு நாளாவது அனைத்து அழுத்தங்களிலிருந்தும் விட்டுபட்டு, மனதிற்கு பிடித்தமான வேலை செய்வது மூலமும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம்.
உணவு காட்டுபாடு:
மஞ்சள் காமாலைக்கு உணவு கட்டுபாட்டைவிட சிறந்த மருந்து இல்லை. ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ள வேண்டும். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
வருமுன் காப்போம்:
மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து, கீழாநெல்லி. தினமும் பச்சையாக சில இலைகளை உணபதன் மூலம் மஞ்சள் காமாலையை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.
வெயில் காலத்தில் ஆண்கள் சனி, புதன்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும்.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, ஆவாரை, சோற்றுக் கற்றாழை இவற்றில் எது கிடைத்தாலும், அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால் சூடு குறைவதுடன், கல்லீரல் இயல்பாகச் செயல்பட ஏதுவாக இருக்கும்.
அதிகம் மசாலா கலந்த உணவு பொருட்களை வெயில் காலத்தில் தவிர்ப்பது நலம்.
நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய் போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது வெயில் காலத்திற்கு மிக நல்லது.
வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்போதும் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பது மிக நல்லது.
மதியம் வேலைகளில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த இரண்டு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல:
மஞ்சள் காமாலை என்பது ஒரு நோய் அல்ல. அது நோய்கான குறியீடு ஆகும். உடலில் ஏற்பட்டுள்ள தொற்று நோய்க்ளையும், புற்று நோய்களையும் வெளிப்படுத்தும் அறிகுறிதான் மஞ்சள் காமாலை. கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் மஞ்சள் காமாலை ஏற்பட காரணம். தரமற்ற குடிநீர், புகை மது பழக்கம் ஆகியவைகளால் உடல் உஷ்ணம் ஏற்பட்டு கல்லீரல் கெட்டு, அது மஞ்சள் காமாலையாக வெளிப்படுகிறது. கண் மஞ்சள் நிறமாவது, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போவது ஆகியவை மஞ்சள் காமாலைக்கான் அறிகுறிகளாக இருக்கின்றன. ஆனால், முறையான ரத்த பரிசோதனை மூலம் நோயை கண்டறிவதுதான் சிறந்தது.
மஞ்சள் காமாலை வகைகள்:
ஆங்கில மருத்துவமுறையில் மஞ்சள் காமாலையை ஹெபடைடிஸ் ஏ, பி, சி, டி, ஈ என்று பல வகைகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், ஹெபடைடிஸ் சி, மற்றும் டி வகைகள் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
ஹெபடைடிஸ் ஏ, பி க்கான காரணம் நாம் தினந்தோறும் பருகும் மோசமான குடிநீர், உண்ணும் தரமற்ற உணவு மற்றும் ஏற்கெனவே நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்ட ஊசியை இன்னொருவருக்கு செலுத்துவது ஆகியவை சொல்லப்படுகின்றன. இதற்கு தடுப்பூசி உண்டு.
மன உளைச்சலும், மஞ்சள் காமாலையும்:
சிலருக்கு தூய்மையான நீர், தரமான உணவு அருந்தினாலும் மஞ்சள் காமாலை வரும். அதற்கு காரணம் அதிக வேலை அழுத்தமும், அது தரும் மன உளைச்சலும்தான். வாரத்திற்கு ஒரு நாளாவது அனைத்து அழுத்தங்களிலிருந்தும் விட்டுபட்டு, மனதிற்கு பிடித்தமான வேலை செய்வது மூலமும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம்.
உணவு காட்டுபாடு:
மஞ்சள் காமாலைக்கு உணவு கட்டுபாட்டைவிட சிறந்த மருந்து இல்லை. ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மாவுச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ள வேண்டும். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
வருமுன் காப்போம்:
மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்து, கீழாநெல்லி. தினமும் பச்சையாக சில இலைகளை உணபதன் மூலம் மஞ்சள் காமாலையை தடுக்கலாம், குணப்படுத்தலாம்.
வெயில் காலத்தில் ஆண்கள் சனி, புதன்கிழமையும், பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமையும் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடல் உஷ்ணத்தை குறைக்கும், மஞ்சள் காமாலை வருவதை தடுக்கும்.
கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி, ஆவாரை, சோற்றுக் கற்றாழை இவற்றில் எது கிடைத்தாலும், அரைத்து உடலில் தேய்த்துக் குளிப்பதால் சூடு குறைவதுடன், கல்லீரல் இயல்பாகச் செயல்பட ஏதுவாக இருக்கும்.
அதிகம் மசாலா கலந்த உணவு பொருட்களை வெயில் காலத்தில் தவிர்ப்பது நலம்.
நீர் சத்து மிக்க சௌசௌ, பூசணி, வெள்ளரி, பீர்க்கங்காய் போன்றவற்றில் ஒன்றை மதிய உணவில் சேர்த்துக் கொள்வது வெயில் காலத்திற்கு மிக நல்லது.
வெயில் காலத்தில் மட்டுமல்ல எப்போதும் சீரகம் கலந்த தண்ணீரை குடிப்பது மிக நல்லது.
மதியம் வேலைகளில் தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இந்த இரண்டு மாத காலத்துக்கு அதனை மாற்றி எலுமிச்சை சாறு அல்லது மோர் குடித்து வரலாம்.




















