இன்னும் இரண்டு மாதங்களில் நிறுவன பணியாளர்கள் அனைவரையுமே மதிப்பீடு எனப்படும் அப்ரைஸல் என்ற ஒரு விஷயம் சுற்ற ஆரம்பித்துவிடும்.
அப்ரைஸலில் நம் ஒரு வருட செயல்பாடு, நிறுவனத்தில் எந்த அளவுக்கு நமது பங்களிப்பை அளித்துள்ளோம் என்பது உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்ந்து நமக்கு ஊதிய உயர்வு எவ்வளவு? நமது பணியை மேலும் தொடருவோமா என்பது வரை அனைத்தையுமே இந்த அப்ரைஸல்தான் முடிவு செய்யும்.
இந்நிலையில் நேற்று உலகக் கோப்பை போட்டியில் தோற்ற பின்னர், தோனி பேட்டி அளித்தபோது சொன்ன பதில்கள், ஒரு சிறந்த பணியாளர் எப்படி தனது அப்ரைஸலை எதிர் கொள்வது என்பதை விளக்கும் விதமாக இருந்தது.
பாசிட்டிவ் விஷயத்தை மையப்படுத்துங்கள்!
உங்கள் அப்ரைஸலில் முதல் கேள்வியே நீங்கள் இந்த வருடத்தில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறீர்களா? என்பதாகதான் இருக்கும். அதற்கு உங்களுடைய பாசிட்டிவ் விஷயங்களோடு ஆரம்பிக்க துவங்குங்கள். உங்களது ப்ளஸ் எதுவோ அதனை கூறுங்கள். அது உங்களை 1% கூட குறை கூற முடியாத அளவுக்கு இருக்க வேண்டும். அதையேதான் தோனியும் செய்தார். 'நான் நன்றாக ரன்களை ஓடி குவிக்கிறேனா?' என நிருபரிடம் கேட்டார். அதற்கு வழியே இல்லாமல் அவர், 'ரியலி ஃபாஸ்ட்' என்று பதிலளித்தார். இப்படிதான் முதல் கேள்விக்கான பதிலே உங்களை முழுமையாக நிரூபிக்க வேண்டும்.
தலைமை பண்பை நிரூபிக்க தவறாதீர்கள்!
நிறுவனத்தின் வளர்ச்சியில் உங்கள் அணியின் பங்களிப்பை பதிவு செய்யுங்கள், சிறப்பான நபர்களை மையப்படுத்துங்கள். கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் தனியாக செய்த சாதனை மற்றும் உங்கள் அணியை நீங்கள் வழிநடத்திய விதம், அதில் உங்களுடைய பங்கு ஆகியவற்றை மேற்கோள் காட்டுங்கள். கோலியின் ஆட்டத்தை புகழ்ந்தாலும் ஒட்டுமொத்த அணியாக இந்தியா சிறப்பாக செயல்பட்டதை தோனி சரியாக பதிவு செய்தார். அதனால்தான் அவரால் 2007 முதல் தொடர்ந்து கேப்டனாக இருக்க முடிகிறது.
மைனஸ்களை கெத்தாக சொல்லுங்கள்!
மைனஸ் இல்லாத மனிதரே கிடையாது. ஆனாலும் அதனை எப்படி சொல்கிறோம் என்பதுதான் விஷயம். மைனஸ்களை கூட அசாதாரணமாக டீல் செய்யுங்கள். தோல்வி பெரியது என்றாலும், அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அதனை மறுக்காதீர்கள். அதிலிருந்து கற்ற பாடங்களை தெரியப்படுத்துங்கள். அலுவலகத்தில் அந்த தவறு இனிமேல் நடக்கவே கூடாது என்பதற்கு தீர்வை கூறுங்கள். அதனைதான் அலுவலகமும் விரும்பும். தோனியும் இதனைதான் செய்துள்ளார். அரையிறுதி தோல்வி பெரிது என்றாலும், அதனை தோனி "இது இன்னொரு ஆட்டம்தான். நோ பால்கள் தவிர பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். இருந்தாலும் இன்றைய பிட்ச் அவர்களுக்கு கை கொடுக்கவில்லை. இது மாதிரியான போட்டிகளில் ஒரு ஓவர் ஆட்டத்தை மாற்றிவிடும் அதனை சமாளிக்க பந்துவீச்சாளர்கள் கற்றுக்கொள்வார்கள்" என்று கெத்தான பதிலை தந்தார்.

மிஸ்டர் கூலாக இருங்கள்!
உங்கள் செயல்பாடு சிறப்பாக இருக்கும் போதும், மோசமாக இருக்கும் போதும் உங்களை நோக்கி நிறைய விமர்சனங்கள் எழும். அதிலும் நீங்கள் குறுகிய காலத்தில் வெற்றி பெற்றாலோ அல்லது தோற்றாலோ கட்டாயம் விமர்சனங்கள் எழும். அதனை கூலாக எதிர் கொள்ளுங்கள். தோனியிடம், 'நீங்கள் ஓய்வு பெறலாமே? ' என்ற கேள்விக்கும், " நான் நல்லா ஓடுறேனா? அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா? " என்று கேள்வி கேட்டு நிருபரின் வாயிலிருந்தே பதிலை அளித்துள்ளார்.
தோனியை மேலாண்மை தத்துவங்களுடனும், அவரை தலைமை பண்புக்கு உதாரணமாகவும் கூறும் நேரத்தில், மீண்டும் ஒருமுறை தோனி தன்னை சிறந்த தலைவன் என்றும், அலுவலகத்தில் ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என்பதையும் உணர்த்தியிருக்கிறார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.