வந்தவாசி என்னும் ஊரில் புகழ்பெற்ற அம்மன் கோவில் ஒன்று இருந்தது. வெள்ளிக் கிழமையில் அந்தக் கோவிலில் பெரும் பாலான பக்தர்கள் கூடுவர். அம்மனுக்கு ஆராதனை நடைபெறும். மக்கள் மகிழ்ச்சியோடு வீட்டிற்குத் திரும்புவர்.
அந்த அம்மன் கோவிலுக்குப் பின்னால் ஒரு புற்று இருந்தது. அதனுள் ஒரு கருநாகம் குடியிருந்தது. பக்தர்கள் அந்தப் பாம்பையும் தெய்வமாக வணங்கி வந்தனர். அந்தப் பாம்பு, சில நேரத்தில் பக்கத்திலுள்ள புதரிலும் பதுங்கியிருக்கும்.
அந்த ஊரில் இருந்த குறும்புக்காரச் சிறுவர்கள் சிலர் புதரில் பதுங்கியிருக்கும் பாம்பைக் கல்லைக் கொண்டும், தடியைக் கொண்டும் அடித்தனர். அந்த அடிகள் பாம்பின் மேல்படவில்லை என்றாலும் அது ஆபத்தான செயல் என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்களை பயமுறுத்துவதற்கு அது சீறியது.
இதை கவனித்த கோவில் பூசாரி, குறும்புக்காரச் சிறுவர்களைப் பார்த்து, "பாம்பென்றால் படையும் நடுங்கும் என்று சொல்வர். நீங்கள் அந்தப் பாம்பிடம் விளையாடுவது என்றாவது ஒருநாள் ஆபத்தாக முடியப்போகிறது. அதனால் அதனைத் துன்புறுத்தாதீர்கள்!'' என்று அறிவுரை கூறினார்.
குறும்புக்காரச் சிறுவர்கள் அவருடைய அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை.
"போய்யா பெரிசு. எல்லாம் எங்களுக்குத் தெரியும்,'' என்று அந்தப் பூசாரியை எடுத்தெறிந்து பேசினர்.
"நீங்களெல்லாம் பட்டால்தான் திருந்துவீர்கள்'' என்று கூறிவிட்டு அவர் அமைதியாக இருந்து விட்டார்.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை. மாணவர்களுக்கு அன்று விடுமுறை என்பதால், அந்தக் குறும்புக்கார மாணவர்கள் தங்கள் கைகளில் தடிகளையும், கற்களையும் எடுத்து, புதரில் பதுங்கியிருந்த பாம்பை அடிக்கச் சென்றனர். பிள்ளைகள் எல்லாம் எங்கோ விளையாடச் செல்கிறார்கள் என்று அவர்களுடைய பெற்றோர்களும் அமைதியாக இருந்து விட்டனர்.
இந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் புதருக்குள் இருந்த பாம்பை அடிக்கத் தொடங்கினர். அப்போது அருகில் இருந்த ஒரு சிறுவனை அந்தப் பாம்பு தீண்டிவிட்டது. மாணவர்கள் அனைவரும் அவனை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
ஊருக்குள் விஷயம் தெரிந்து, ஊர்ப் பெரியவர்கள் ஓடிவந்து அந்தச் சிறுவனைத் தூக்கி சென்று வைத்தியரிடம் காட்டினர். அவர் அந்தச் சிறுவனுக்குப் பச்சிலை மருத்துவம் செய்து காப்பாற்றினார்.
"பாம்பு தீண்டிய உடனேயே இந்தச் சிறுவனை என்னிடம் கொண்டு வந்ததால் தான் இவனுடைய உயிரை என்னால் காப்பாற்ற முடிந்தது. சிறிது தாமதம் ஏற்பட்டிருந்தால் கூட உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும். அந்தக் குறும்புக்காரச் சிறுவர்களை என்னிடத்தில் அழைத்து வாருங்கள். அவர்களிடம் நான் பேச வேண்டும்,'' என்றார்.
அந்த சிறுவர்கள் உடனே அவர் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். அந்த வைத்தியர் அவர்களிடம் பேசினார்.
"சிறுவர்களே! நம் ஊரில் விளையாடுவதற்கு எவ்வளவோ இடம் இருக்கிறது. விளையாடுவதற்கு எத்தனையோ விளையாட்டுகளும் இருக்கின்றன. அவற்றை விளையாடுவதை விட்டு, பாம்பை அடிக்கச் செல்வது விளையாட்டாகுமா?
"அவ்வாறு விளையாடியதால் இன்று ஒரு உயிரே போயிருக்கும். தெய்வாதீனமாக அந்த உயிர் பிழைத்தது. இனி இது போன்று ஆபத்தான விளையாட்டுகளை விளையாடாதீர்கள்,'' என்று அறிவுரை கூறினார்.
"ஐயா, இனி நாங்கள் பாம்புகளோடு விளையாட மாட்டோம்,'' என்று அந்தக் குறும்புக்காரச் சிறுவர்கள் ஒரே குரலில் கூறினர்.
மறுநாள் முதல் அந்தச் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தில் கபடி விளையாட தொடங்கினர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.