சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் அடங்கிய பாக்கெட்டுகளில் 85 சதவீத இடத்தில் புகையிலைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு பற்றிய படத்துடனான எச்சரிக்கை இடம் பெற வேண்டும் என்ற புதிய விதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 24–ந்தேதி வெளியிட்டது.
இந்த அறிவிப்பு, கண்டிப்பாக 2016–ம் ஆண்டு ஏப்ரல் 1–ந்தேதி (இன்று) அமல்படுத்தப்பட்டு விடும் என ராஜஸ்தான் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு உறுதி அளித்தது. எனவே இன்று அது அமலுக்கு வருகிறது.
இது தொடர்பான பாராளுமன்ற நிலைக்குழு 50 சதவீத பட எச்சரிக்கை போதுமானது என பரிந்துரை செய்தும், அதை பொருட்படுத்தாமல் 85 சதவீத இடத்தில் பட எச்சரிக்கை இடம் பெற வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்து அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் உற்பத்தி செய்யப்படுகிற அனைத்து புகையிலை பொருட்கள் பாக்கெட்டிலும் பட எச்சரிக்கை 85 சதவீத இடத்தில் இடம் பெற்றிருக்கும் என மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.