முன்னொரு காலத்தில் அரபு நாட்டை அகிலேந்திரா என்ற அரசன் ஆண்டு வந்தார். அவர் அடிக்கடி மக்களைச் சந்தித்து, குறைகளைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுத்தார். அதனால், அவர் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.
அவருடைய அமைச்சராக, யாதிராஜ் என்பவர் இருந்தார். அவர் மீது அரசர் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார்.
அரசர் பக்கத்து நாட்டை சேர்ந்த இளவரசி தேன்மொழியை திருமணம் செய்தார். முன்பு ஆட்சியை நன்றாக கவனித்தவர், திருமணம் ஆனதும், அந்தப்புரமே கதி என்று கிடந்தார். இதனால், ஆட்சியை அவர் சரியாக கவனிக்கவில்லை. அமைச்சர் சொன்ன அறிவுரை எதுவும், அரசர் காதில் ஏறவில்லை.
வேறு வழி இல்லாததால், அமைச்சரே ஆட்சிப் பொறுப்பை கவனித்தார்.
ஆனால், நாட்டு மக்களோ, "அரசர் மிக நல்லவர். அமைச்சர்தான் சூழ்ச்சி செய்து அவரை இப்படியாக்கி விட்டார். அதனால்தான் அவர் அந்தப்புரத்திலேயே இருக்கிறார். அதிகார வெறி அமைச்சரைப் பிடித்து உள்ளது. நாடு இனி என்ன ஆகுமோ?' என்று பேசிக் கொண்டனர்.
மக்கள் தன்னைக் குறை சொல்வதை அறிந்த அமைச்சர் வருந்தினார்.
"அரசனைப் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் மக்களின் பழிச் சொல்லிலிருந்து தப்ப முடியும். அதற்கு என்ன செய்வது' என்று சிந்தித்தார் அமைச்சர்.
அந்தப்புரம் சென்று அரசனை வணங்கினார்.
"அரசே! நான் பல கோவில்களுக்குப் புனித யாத்திரை செல்லப் போகிறேன். திரும்பி வரச் சில மாதங்கள் ஆகும். எனக்கு அனுமதி தாருங்கள்,'' என்று வேண்டினார்.
அரசர் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
அங்கிருந்து புறப்பட்டார்.
நம்பிக்கைக்கு உரியவர் வேறு யாரும் இல்லை என்பதை அறிந்து, ஆட்சிப் பொறுப்பை அரசரே கவனிக்கத் தொடங்கினார்.
மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அமைச்சர் யாதிராஜ் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டார். வெகு தொலைவிலிருந்த தீவுக் கோவில் பற்றிக் கேள்விப் பட்டார். அங்கு சென்று வழிபடுவதற்காகக் கப்பலில் புறப்பட்டார். நடுக்கடலில் கப்பல் சென்று கொண்டிருந்தது.
திடீரென்று கடல் பரப்பிற்கு மேலே பொன் மரம் ஒன்று எழுந்தது. அதன் கிளையில் பேரழகி ஒருத்தி அமர்ந்து இருந்தாள். யாழ் மீட்டி இனிமையாகப் பாடினாள்.
கப்பலில் இருந்த எல்லாரும் அவளுடைய பாட்டின் இனிமையில் தங்களை மறந்தனர்.
சிறிது நேரத்தில் பெண்ணுடன் அந்த மரமும் கடலில் மூழ்கி மறைந்தது.
வியப்படைந்த அமைச்சர், "யார் இந்தப் பேரரழகி? இவ்வளவு இனிமையாகப் பாடிய இவள் ஏன் மறைந்து போனாள்?'' என்று அருகில் இருந்தவர்களைக் கேட்டார்.
"இந்த வழியாக நான் பலமுறை கப்பலில் வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் இவள் இப்படித் தோன்றிப் பாடுவதைக் கேட்டுள்ளேன். வேறு எதுவும் இவளைப் பற்றி எனக்குத் தெரியாது,'' என்றார் அருகிலிருந்தவர்.
பல மாதங்கள் சென்றன.
பயணம் முடிந்து நாடு திரும்பினார் அமைச்சர்.
அவரை வரவேற்ற அரசர், ""ஏதேனும் விந்தையான செய்தி உண்டா?'' என்று கேட்டார்.
கடலில் தோன்றிய பேரழகியைப் பற்றி விரிவாகச் சொன்னார் அமைச்சர்.
"அமைச்சரே! அந்தப் பேரழகியைப் பார்த்து விட்டுத்தான் நாடு திரும்புவேன். அதுவரை ஆட்சிப் பொறுப்பை கவனியும்,'' என்று அங்கிருந்து புறப்பட்டார் அரசர்.
கப்பல் ஏறினார் அரசர். அமைச்சர் குறிப்பிட்ட இடத்தில் கப்பல் சென்றது.
வழக்கம் போல, அங்கே பொன் மரம் தோன்றியது. அதில் அமர்ந்திருந்த பேரழகி ஒருத்தி யாழ் இசைத்துப் பாடிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் அவளும், மரமும் கடலினுள் மூழ்கி மறைந்தனர்.
"அமைச்சர் சொன்னதை விட இவள் மிகவும் பேரழகியாக இருக்கிறாளே. எப்படியும் இவளை திருமணம் செய்ய வேண்டும்' என்று நினைத்த அரசர், கடலில் குதித்தார்.
கடலுக்குள் மூழ்கிய அவர் அங்கே அழகிய மாளிகை ஒன்றைக் கண்டார். அதற்குள் அந்தப் பேரழகி இருந்தாள்.
"பேரழகியே! நீ யார்? இங்கே என்ன செய்கிறாய்? பொன் மரத்துடன் கடலில் ஏன் தோன்றுகிறாய்?'' என்று கேட்டார் அரசர்.
"நான் தேவர் உலகப் பெண். என் பெயர் யாழ் நங்கை. என் தந்தை என்னுடன் விருந்து உண்பதற்காகக் காத்திருந்தார். இதை அறியாமல் நான் மிகவும் தாமதமாகச் சென்றேன்.
"கோபம் கொண்ட அவர், "நீ கடலுக்கு அடியில் வாழ்வாயாக. கப்பல் ஏதேனும் வந்தால் நீ கடலின் மீது தோன்றுவாய். உன்னை அடைவதற்காக யாரேனும் கடலில் குதிப்பார்கள். நீ அவரை மணந்து ஒரு வாரம் மகிழ்ச்சியாக இருக்கலாம். பிறகு தேவர் உலகம் சேர்வாய்,'' என்ற சாபம் தந்தார் என்றாள்.
அவளை அழைத்துக் கொண்டு தான் நாட்டுக்கு வந்தார் அரசர்.
பேரழகியான தேவதை ஒருத்தியை அரசர் அழைத்து வந்துள்ளார். இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது என்பதை அறிந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரசனுக்கும், அவளுக்கும் சீரும் சிறப்புமாகத் திருமணம் நடந்தது.
ஒருவாரம் சென்றது. யாழ் நங்கை தேவர் உலகம் செல்லும் நாள் வந்தது.
அவளைப் பிரியப் போகிறோமே என்று அரசர் வருந்தினார். நாட்டு மக்களும் துன்பத்தில் ஆழ்ந்தனர்.
அரசனை வணங்கிய யாழ் நங்கை, "உங்களைப் பிரிய எனக்கு உள்ளம் வரவில்லை. "மந்திர ஆற்றல்கள் என்னை விட்டு நீங்கட்டும். மானுடப் பெண்ணாகவே நான் இருக்க விரும்புகிறேன்' என்று வேண்டினேன்.
"என் வேண்டுதல் நிறைவேறி விட்டது. இனி நான் மானுடப் பெண்தான். இனி நாம் பிரிய வேண்டியது இல்லை,'' என்றாள்.
இதைக் கேட்ட அரசர் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்தார்.
நடந்தது அனைத்தையும் பார்த்த அமைச்சர் உள்ளம் நொந்தான். தன் மாளிகைக்கு வந்தார். தாங்க முடியாத வருத்தத்தால் நெஞ்சு வெடித்து இறந்தார்.
அமைச்சர் ஏன் இறந்தார்? தான் விரும்பிய பேரழகியை அரசன் மணந்தான் என்பதற்காகவா அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவா?
விடை: அழகியான தேன்மொழியை மணந்ததற்கே ஆட்சி பொறுப்பை கவனிக்காமல் அந்தப்புரமே கதி என்று கிடந்தவர் அரசர்.
இப்போதோ பேரழகியான யாழ்நங்கையை திருமணம் செய்து கொண்டுள்ளார். திரும்பவும் ஆட்சிப் பொறுப்பை கவனிக்கப் போவது இல்லை.
இதற்கு நானே காரணமாகி விட்டேனே என நினைத்து வருந்தியதால், நெஞ்சு வெடித்து இறந்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.