Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

அக்கா பேச்சுதான் கேட்பேன்!-சிறுகதை


சரண்யாவும், சுகன்யாவும் உடன் பிறந்தவர்கள். மூத்தவள் சரண்யா; இளையவள் சுகன்யா. பள்ளியில் ஆசிரியை எதைப் போதித்தாலும் அதைப் பின்பற்றி நடக்க வேண்டும் என சரண்யா நினைப்பாள். ஆனால், சுகன்யாவோ எதிலுமே அலட்சியமாக நடந்து கொள்வாள்.
சுகன்யா எப்போது பார்த்தாலும் மூக்குக்குள் விரலை விட்டுக் குடைந்து கொண்டே இருப்பாள். எந்த இடம் என்று பார்க்காமல் மூக்கைச் சிந்துவாள். ஆனால், சரண்யா இதற்கு மாறுபட்டவள். தரையிலோ, சுவரிலோ மூக்கைச் சிந்த மாட்டாள். அடுத்தவர் மீது படும்படியாக இருமவோ, தும்மவோ மாட்டாள்.
நாள்தோறும் குளிக்கும்போது சரண்யா தண்ணீரில் மூக்கைச் சுத்தம் செய்வாள். தூய்மையான துணியால் மூக்கைத் துடைப்பாள். வாயையும், மூக்கையும் இருமலோ, தும்மலோ வந்தால் மூடிக் கொள்வாள். சரண்யா இப்படிச் செய்வதைப் பார்த்து சுகன்யா கிண்டல் பண்ணுவாள்.
கıலை நேரங்களில் சரண்யா தன் மூக்கின் இடப்புறம் துளையை மூடிக் கொண்டு வலப்புற மூக்கின் துவாரம் வழியாக சுவாசம் செய்து மூச்சுவிடும் பயிற்சி செய்வாள். இதைப் பார்த்து சுகன்யா தனக்குள் சிரித்துக் கொள்வாள்.
சுகன்யா தூங்கும் போது மூக்கால் சுவாசிக்காமல் வாயைத் திறந்து கொண்டு தூங்குவது பழக்கம்.
"ஏய் சுகன்யா, வாயைத் திறந்து கொண்டு தூங்கக் கூடாது,'' என கண்டித்தாள் சரண்யா.
"நான் எப்படித் தூங்கினால் உனக்கு என்ன? என் தூக்கத்தைக் கெடுக்காதே,'' என்பாள்.
நாளடைவில் சுகன்யா தொண்டை வலிப்பதாகக் கூறினாள். டாக்டரிடம் அவள் அப்பா அழைத்துப் போனார்.
"இவள் வாயைத் திறந்து கொண்டு தூங்கியதால் வாய் வழியாக தூசி நெஞ்சுக்குள் போய் நுரையீரலை ரொம்ப பாதித்திருக்கிறது. தொண்டைக்குள் சதை வேறு வளர்ந்திருக்கிறது. இதற்கு வேண்டிய சிகிச்சையை உடனே பண்ண வேண்டும்,'' என்றார் டாக்டர்.
"அக்கா, சுத்தமாக இருந்ததால் உனக்கு ஆபரேஷன் செலவே வரவில்லை. எனக்கு எவ்வளவு செலவு பார்த்தாயா?'' என வேதனைப்பட்டாள் சுகன்யா.
"நான் ஆசிரியர் சொன்னது போல் பின்பற்றி நடந்தேன். எனக்கு நோய் வரவில்லை. இனிமேலாவது, சுகாதார முறைப்படி நடந்துகொள்,'' எனத் தங்கையை எச்சரித்தாள்.
அக்காவை கண்டாலே எரிந்து விழும் தங்கை இப்போதெல்லாம் அக்கா பேச்சை தட்டுவதே இல்லை.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.