Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

மினி ஸ்டோரி - ஓநாயின் நாடகம்!


ஓர் ஆட்டு மந்தையினுள் புகுந்து ஆடுகளை அடித்துக் கொல்ல முயன்றது ஓநாய் ஒன்று.
அந்த ஆட்டு மந்தையின் காவலாக இருந்த நாய்கள் ஓநாயை துரத்திப் பிடித்து நன்றாகக் கடித்துப் போட்டு விட்டன.
படுகாயமடைந்த ஓநாய் நடக்க முடியாமல் வேதனையுடன் ஓரிடத்தில் படுத்திருந்தது. அதற்குக் கடுமையான பசி வேறு.
அந்தச் சமயத்தில் அந்த வழியாக ஓர் ஆடு சென்று கொண்டிருந்தது.
ஓநாய் அந்த ஆட்டைக் கூப்பிட்டது.
"ஆட்டு நண்பரே! என் எதிரிகளால் இப்படி படுகாயப்படுத்தப்பட்டு நடக்க முடியாமல் கிடக்கிறேன். தண்ணீர் தாகம் அதிகமாக இருக்கிறது. எனக்கு ஒரு கை கொடுத்து பக்கத்திலிருக்கும் நீரோடை வரை என்னைக் கொண்டு சென்று விட்டு விட்டால் நான் நீர் அருந்தித் தாகம் தீர்த்துக் கொள்வேன். தயவு செய்து உதவ வேண்டும்!'' என உருக்கமாக வேண்டிக் கொண்டது.
ஓநாயின் கபட நாடகத்தை உணராத ஆடு அதன் மீது அனுதாபம் கொண்டு அது நடப்பதற்கு உதவி செய்வதற்காக அதன் அருகே சென்றது.
கைக்கு எட்டும் தூரத்திற்கு ஆடு வந்ததும் ஓநாய் குபீரென அதன் மீது பாய்ந்தது. அதைக் கொன்று அதன் இறைச்சியை உண்டது.
குட்டீஸ்.... பிறர் கஷ்ட நிலையில் இருக்கும்போது நம்மால் இயன்ற உதவிகள் செய்ய வேண்டியது கடமைதான். ஆனால் நாம் யாருக்கு உதவி செய்கிறோம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.