Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

ஆஸ்திரேலியாவை வீழ்த்த கோலி-தோனி எப்படி திட்டமிட்டிருந்தார்கள் தெரியுமா?


விராட் கோலியின் அற்புதமான ஆட்டத்தால் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி 51 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.

போட்டி குறித்து கருத்து தெரிவித்த கோலி, கடைசி 3 ஓவர்களில் 39 ரன்கள் என்ற சூழ்நிலையில் ஒருபோதும் விளையாடியதில்லை என்று கூறினார். 

அதனால் 18-வது ஓவரை வீசிய பவுல்க்னரை தாம் குறி வைத்தாக அவர் தெரிவித்தார். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள், இரு சிக்ஸர் என மொத்தம் 19 ரன்கள் எடுக்கப்பட்டது.

தன்னுடைய ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக துணையாக தோனி இருந்தது என்று கோலி கூறினார்.

”எனக்கு மிகவும் உதவியாக இருந்தது 2 ரன்கள் ஓடுவதற்கு தோனி ஒத்துழைத்துதான். இது எதிரணியினரை பீதியடைய செய்து விட்டது. பதற்றம் இல்லாமல் ஒரு ஓவருக்கு 12 மேல் சேர்த்தது அவர்களை ஒரு நிலையில் இல்லாமல் ஆக்கி விட்டது.

இந்த பெருமைகள் தோனியை சேரும். முதலில் அவர் என்னை பதற்றமடையாமல் அமைதிப்படுத்தினார். உங்களுடைய ஏரியாவை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்றார்.

அவர் அளித்த ஊக்கம் எனக்கு உறுதுணையாக இருந்தது. எங்களது பாட்னர்ஷிப் நெருக்கடியில் இருந்து மீள உதவியாக இருந்தது.”

இவ்வாறு தெரிவித்தார்.

கோலி-தோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 31 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தது. இதில் 9 ஒரு ரன்னும், 16-வது ஓவரில் 4 இரண்டு ரன்களும், 18-வது ஓவரில் 2 இரண்டு ரன்களும் எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.