Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 31, 2016

கர்ப்பிணி மனைவியை தாக்கியதால் குழந்தை சாவு கணவனை சிறையிலடைக்க நீதிமன்றம் மறுப்பு


பழைய பல்லாவரம், பச்சையம்மன் நகர், இம்மானுவேல் தெருவை சேர்ந்தவர் சாலமன் ராஜா (30). ஐதராபாத்தில் தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். இவரது மனைவி நான்சி ஜெனிபர் (28). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. இதனிடையே, நான்சி 6 மாத கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி வீட்டில் தனது குழந்தைக்கு நான்சி கஞ்சி காய்ச்சினார். ஆனால், அது சரியாக வேகவில்லை என நான்சியிடம் மாமியார் ஜெயா கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. 

இதைப்பார்த்த சாலமன் ராஜா, ‘என் அம்மாவை எதிர்த்தா பேசுகிறாய்?’ என்று கேட்டு நான்சி ஜெனிபரின் வயிற்றில் காலால் ஓங்கி உதைத்து உள்ளார். இதனால் நான்சி ஜெனிபார் கடும் வயிற்று வலியால் அலறி துடித்தார். இதைத்தொடர்ந்து, அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், காரம்பாக்கத்தில் உள்ள அவருடைய தந்தை சாமுவேல் எபிநேசர் வீட்டில் சாலமன் ராஜா விட்டு சென்றுவிட்டார். பின்னர், தாய் வீட்டில் இருந்த நான்சி ஜெனிபார் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவரை பேரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஜெனிபரின் தந்தை சாமுவேல் எபினேசர் அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், நான்சி ஜெனிபர் வயிற்றில் இருந்த 6 மாத குழந்தை இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் நான்சி ஜெனிபரின் சித்தப்பா ஜான் வெஸ்லி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  சாலமன் ராஜாவை கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி, ‘இது குடும்ப ஒரு வழக்கு, நீங்கள் ஏன் சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தீர்கள், ‘இது மகளிர் காவல் நிலையத்தில் தான் விசாரிக்க வேண்டும், ஆனால் அப்படி விசாரிக்கப்பட வில்லை’ என சரமாரியாக போலீசாரிடம் கேள்வி எழுப்பபினார். மேலும் குற்றாவளியை சிறையில் அடைக்க மறுத்துவிட்டார். இந்த வழக்கை மகளிர் காவல் நிலையத்தில் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கு தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.