Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 30, 2016

இப்படியும் சில மனிதர்கள் !


ஐந்து வருடங்கள் நியுயார்க்கில் உள்ள சிட்டி பேங்க் தலைமையகத்தில் பணி. பிறகு அரசு நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் . முடித்த பின் சலிப்பு தட்டியது 28 வயது பெண்ணான 'மினு பாலின்'னுக்கு. 
கொச்சி எம்.ஜி. ரோட்டில் "பப்படவடா " என்ற உணவகத்தை துவக்கினார். (பப்படவடா என்பது நம் ஊர் தட்டைதான்) அதன் பின் தற்போது அது நவீனப்படுத்த வேண்டி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இன்னொரு கடையை கல்லூர் ஜங்க்ஷன் பக்கத்தில் தொடங்கி உள்ளார்.
வடை, பழம்பொறி, பப்படவடா , டீ , ஆப்பம், புட்டு மற்றும் பல கறி வகைள் என உள்ளூர் உணவுகளோடு துவக்கினார். அதன் பின் அவர் செய்த விஷயம்தான் முக்கியம். அவர் கடைக்கு முன் வைத்த " நன்ம மரம் " என்ற ஃப்ரிட்ஜ்தான் அது.
கடைக்கு முன் ஒரு ஃப்ரிட்ஜை வைத்து அதில் உணவுகளை வைக்கத் தொடங்கினார். ஏழை வறியவர்கள் அந்த ஃப்ரிட்ஜில் இருக்கும் உணவை எடுத்து உண்ணலாம் இலவசமாக. தினமும் 50 பேருக்கு தேவையான உணவு அந்த ப்ரிட்ஜில் 24 X 7 மணி நேரத்துக்கும் இருக்கும். மற்றவர் கூட அதில் தங்கள் உணவை வைத்து விட்டுச் செல்லலாம். உணவுப் பாக்கெட்களில் தயாரித்த தேதி குறிப்பிட ஒரு மார்க்கர் கூட அங்கே செருகப்பட்டு இருக்குமாம்.
" உங்களை யாராவது ஏமாற்றினால் ? " என்ற கேள்விக்கு நான் " எம் மக்கள் நல்லவர்கள் என்னை ஏமாற்றமாட்டார்கள் என்றே நம்புகிறேன் " என்கிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.