Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

March 29, 2016

பல்லாவரம் அருகே தாயை கத்தரிக்கோலால் குத்திக் கொன்ற பெண் என்ஜினீயர் கைது


பல்லாவரம் அருகே வாய்த்தகராறில் பெற்ற தாயை கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த என்ஜினீயரிங் பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெண் என்ஜினீயர்
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகே உள்ள அனகாபுத்தூர், குருசாமி நகரை சேர்ந்தவர் வனஜா (வயது 58). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். மூத்த மகள் சுஜாதா திருமணமாகி கணவருடன் வசித்துவருகிறார். இளையமகள் காயத்ரி (26) வனஜாவுடன் வசித்துவந்தார்.
வனஜா வீட்டிலேயே துணிதைத்து கொடுக்கும் டெய்லர் வேலை பார்த்துவந்தார். காயத்ரி என்ஜினீயரிங் படித்துவிட்டு சரியான வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதில் அவருக்கு மனஅழுத்தம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
குத்திக்கொலை
இந்நிலையில் வனஜாவிற்கும் காயத்ரிக்கும் வீட்டில் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காயத்ரி துணி வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தரிக்கோலால் வனஜாவை சரமாரியாக குத்தினார். இதில் படுகாயமடைந்த வனஜா ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த காயத்ரி உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது வனஜா இறந்துவிட்டது தெரியவந்தது.
காயத்ரி கைது
இதுகுறித்து சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்துவந்து விசாரணை நடத்தினார்கள். வனஜாவின் உடலை பிரேதபரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயத்ரியை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.