ஆடைகள் நம்முடைய அழகை அதிகமாக்கிக் காட்டுகின்றன. அதே நேரத்தில் ஆடைகளுக்கு பொருத்தமான அணிகலன்களை அணிந்து கொண்டால் அழகு மேலும் கூடுகிறது. பெண்கள் தாங்கள் அணிந்தி ருக்கும் உடைகளின் கலருக்கும், ஸ்டைலுக்கும் பொருத்தமான அணிகலன்களைத் தேர்வு செய்து, அணியும்போது பார்ப்பவர்கள் மூக்கின்மேல் விரல் வைத்து ஆச்சரியப்படுவர். எனவே உடைகளுக்கு பொருத்தமானதாக இருக்கும் அணிகலன்களை தேர்வு செய்வதில் கவனம் எடுத்துகொள்ள வேண்டும். அணிகலன்கள் என்றாலே ஒருவிதமான சந்தோஷத்தையும், அழகின்மேல் ஈர்ப்பையும் ஏற்படுத்துகின்றன.
நகைகளை மட்டும் அணிகலன்கள் என கருத கூடாது. நகைகளோடு சேர்த்து காலணிகள், ஹேண்ட்பேக், கண்ணாடி, வாட்ச், வாசனை திரவியங்கள், துப்பட்டா, போன்றவையும் அந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை நகைகள். இன்றைக்கு நகைகளை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் நகைகள் மீது பிரியம் இருந்தாலும், பெண்களின் பிரியமே அதிகமாக இருக்கிறது. பெண்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்த அவர்களுடைய உணர்வுகளில் கலந்த ஒன்றாக நகைகள் மாறிவிட்டன.பெண்கள் எங்கு சென்றாலும், அது திருமண விழவாக இருந்தாலும், அல்லது விருந்து நிகழ்ச்சியாக இருந்தாலும் அல்லது வேலை செய்யும் இடமாக இருந்தாலும் உடைகளோடு சேர்ந்து நகைகளும் பிறரால் கவனிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு வரும் தங்களுக்கு பிடித்த விதவிதமான நகைகளை அணிந்து பிறரை கவர்கின்றனர். சிலருக்கு பாரம்பரிய நகைகள் பிடிக்கும், சிலருக்கு பேஷன் நகைகள் பிடிக்கும், இன்னும் சிலருக்கு மரம், கண்ணாடி, சணல் பேப்பர் போன்றவற்றில் தயாரான நகைகள் பிடிக்கும்.இதே போல், எந்த மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு எந்த மாதிரியான நகைகளையே அணிந்து செல்ல வேண்டும் என்றதொரு வரைமுறை உள்ளது. இந்த வரைமுறை மாறும்போது அல்லது மீறப்படும்போது அது பிறரை ரசிக்க வைப்பதற்கு மாறாக முகம் சுளிக்க வைக்கும். குறிப்பாக உடைகளுக்கு பொருந்தும் நகைகளையே அணிய வேண்டும். உதாரணமாக பட்டு புடவை கட்டினால் அதற்கு பொருத்தமான நெக்லஸ், ஆரம், முத்துமாலை, போன்றவற்றை அணியலாம்.
இந்த நேரத்திற்கு இந்த கலர் நகைகளை அணிந்தால் நன்றாக இருக்கும் என்ற நடைமுறையும் உண்டு. அப்படி பார்த்தால், பகல் நேரத்தில் சில்வர் கலர் நகைகளும், மாலை நேரத்துக்கு கோல்டு நகைகளும் ஏற்றவை. நகைகளை பொறுத்தவரை பார்மல், கேஷுவல், ரைடல், ஈவ்னிங், ஸ்பிரிச்சுவல் என 5 வகையாக பிரிக்கலாம். இந்த ஐந்தும் வடிவமைப்பாலும், பயன்படுத்தப்படும் நேரத்தாலும், தயாரிக்கப்படும் பொருட்களாலும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை.
பார்மல்: திருமணம், அலுவலகம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் இவை. நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், மோதிரம், காது வளையம் போன்றவை. அதில் குறிப்பிடத்தக்கவை, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம, சிபி, துருபிடிக்காத எக்கு போன்றவற்றால் தயாரிக்கப்படுகின்றன. ரத்தினம், கிரிஸ்டல், அலங்காரக்கல் போன்றவையும் இந்த நகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.
கேஷுவல்: தினமும் அணிந்து கொள்ளக்கூடிய நகைகளை கேஷுவல் லிஸ்ட்டில் சேர்க்கலாம். இவை தண்ணீரில் நனைந்தாலும் பாதிப்படையாது. கைவேலைபாடுகள் மிகுந்த நகைகளும், இதில் அடங்கும். சணல், மரம், பேப்பர் போன்றவற்றால் இவை தயாரிக்கப்படும். செயின், வளையல், மோதிரம், போன்றவை கேஷுவல் நகைகளில் குறிப்பிடத்தக்கவை. சிப்பிகளால் தயாரிக்கப்படும் இதுபோன்ற நகைகளை இளம்வயதினர் விரும்பி வாங்குகின்றனர்.
ரைடல்: திருமண பெண் அணிந்து கொள்ளக்கூடிய நகைகள் ரைடல் எனப்படும். இவை ஒயிட் மெட்டல், ஒயிட் கோல்டு, மஞ்சள் கோல்டு, வைரம், ரத்தினம் போன்றவற்றால் தயாரிக்கப்படும். இதுபோன்ற நகைகள் மணப்பெண்ணுக்கு என்றே விசேஷமாகத் தயாரிக்கப்படுகின்றன. பலவிதமான வெரைட்டிகளுடன் இந்த நகைகள் உருவாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஈவ்னிங்: மாலை நேரங்களில் நடைபெறும் பார்ட்டிகள். ரிசப்ஷன் போன்றவற்றிக்கு அணிந்து செல்லக்கூடிய நகைகள். துருபிடிக்காத எக்கு, ஒயிட் மெட்டல், பிளாக் மெட்டல், களிம கிரிஸ்டல் போன்றவற்றால் செய்யப்படும். செயின், வளையல், பெரிய காது வளையம் போன்றவை இதில் குறிப்பிடத்தக்கவை.
ஸ்பிரிச்சுவல் :மதம் சார்ந்த, வழிபாடு சார்ந்த நகைகள் இவை. மதக் குறியீடுகளுடனும், அடையாளங்களுடனும் இந்த நகைகளை ஆண், பெண் என இருவருமே பயன்படுத்துகின்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.