தைரொய்ட் நோய் கழுத்தில் ஏற்படுகின்றது. மருத்துவ உலகம் உடல் பருமன் தைரொய்ட் நோய்க்குக் காரணம் எனக் கூறுகின்றது. இதற்கு அறுவைச் சிகிச்சை செய்யப்படுகின்றது. ஆனால் உண்மையில் சமைத்துண்ணும் பழக்கத்தால் தான் உடற்பருமன் ஏற்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. நரை, திரை, மூப்பு என எல்லாப் பிரச்சினைகளும் அதனால் ஏற்படுகின்றன. எந்நோய்க்கும் அறுவைச் சிகிச்சை அவசியமே இல்லை எனக் கூறுகின்றது இயற்கை உலகம். மேலும் மனிதருடைய அனைத்துநோய்களையும் ஒரே நேரத்தில் குணப்படுத்துவதும் இயற்கைதான். எந்த மருத்துவமும் எந்த நோயையும் குணப்படுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக ஒரு நோய்க்கு மருந்து உட்கொண்டுவிட்டுப் பல நோய்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறோம்.
தைரொய்டுக்கு மட்டுமல்ல, புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய், மூல நோய், குடலிறக்கம் ஆகிய பல நோய்களுக்கு உடனடியாக அறுவைச் சிகிச்சை செய்யாவிட்டால் உயிர் வாழவே இயலாது என மருத்துவ உலகம் கூறும். அதற்கு இயற்கையின் பேராற்றல் தெரியாது. பாமர நோயாளிகளை அச்சுறுத்தி, பண விரயம் செய்ய வைத்து நிரந்தரத் தீர்வு இல்லாது செய்து வருகின்றது. ஆனால் இயற்கை உலகம் எந்த வித நோய்க்கும் அறுவைச் சிகிச்சையும் தேவையில்லை. மாற்று உறுப்புப் பொருத்தவும் தேவையில்லை. பண விரயமும் வேண்டாம். எளிதில் விரைவாக நிரந்தரத் தீர்வு காணலாம். ஸ்கான், எக்ஸ்ரே மற்றும் எத்தகைய மருத்துவப் பரிசோதனையும் தேவையே இல்லை எனக் கூறி வருகின்றது.
ஆதலால், தைரொய்ட் நோய் உள்ளவர்கள் எந்த மருத்துவத்தையும் அணுக வேண்டாம். எந்த மருந்தையும் நம்ப வேண்டாம். அறுவைச் சிகிச்சையும் செய்ய வேண்டாம். மீறி எது செய்தாலும் நிரந்தரத் தீர்வு நிச்சயம் காண முடியாது. ஆனால், இயற்கையை முற்றிலும் நம்பி, மனதார அணுகினால் எவ்வித மருத்துவமின்றி, அறுவைச் சிகிச்சையும் இன்றி, பணச் செலவும் இன்றி, எளிதில் நமக்கு நாமே நிரந்தரத் தீர்வு காணலாம். நோய், மருந்து, மருத்துவம், மருத்துவப் பரிசோதனை ஆகிய சொற்களை, செயல்களை மறந்து நிம்மதியாக ஆனந்த ஆரோக்கிய வாழ்வு வாழலாம் எனஇயற்கை மருத்துவம் கூறுகிறது.
தைரொய்ட் நோயுள்ளவர்கள் மூன்று வேளை சமைத்துண்ணும் பழக்கத்தை படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும். சமைக்காமல் பச்சையாக உண்ணும் பழக்கத்திற்கு மாற வேண்டும். அதாவது இரவு மட்டும் தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது தேவையான தேங்காயை சில்லாகவோ, அல்லது துருவியோ உண்ட பின் தேவையான பழ வகைகளை தேவையான அளவு, கிடைக்கும் பழ வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக மென்று ரசித்து, ருசித்து, ஆற அமர உண்ண வேண்டும். மற்ற காலை, மதியம் இருவேளை உணவாக சமைத்த சைவ உணவு, அளவாக, அரை வயிறு உண்ண வேண்டும். பதினைந்து முதல் முப்பது நாட்கள் கழித்து காலையும் இரவும், சமைத்த உணவுகளைத் தவிர்த்து குளிர் சாதனப் பெட்டியில் வைக்காத தேங்காயும் பழ வகைகளையும் தேவையான அளவு உணவாக உண்ண வேண்டும். மதியம் ஒரு வேளை மட்டும் சமைத்த சைவ உணவு அளவாக உண்ண வேண்டும். தினம் அர்த்த சிரசாசனம் செய்து வரலாம். நடைப் பயிற்சி செய்து வரலாம். கழுத்துப் பயிற்சி செய்து வரலாம். மூச்சுப் பயிற்சி, தியானம் செய்து வரலாம். மனத்தை சாந்த நிலையில், அமைதி நிலையில் காத்துக் கொள்ளலாம்.
இவ்வாறாக மருத்துவத்தை சாராது, நமக்கு நாமே எளிய இயற்கை வழியைப் பின்பற்றி நோயை தவிர்த்துக் கொள்ளலாம். உடல் பருமனையும் குறைத்துக் கொள்ளலாம்.
கோப்பி,தேனீர், குளிர் பானங்கள், வெந்நீர் போன்ற அனைத்து செயற்கைப் பானங்களையும் தவிர்த்து, பச்சைத் தண்ணீர், இளநீர், தேங்காய் தண்ணீர், தேன் கலந்த பச்சைத் தண்ணீர், எலுமிச்சை, நெல்லி, திராட்சை, மாதுளை மற்றும் இதர பழங்கள் போன்ற பழச்சாறுகள் ஆகிய இயற்கை பானங்கள் அருந்த வேண்டும். உப்பு, வெள்ளைச் சீனி கலப்பதைத் தவிர்த்து இயற்கை பானங்களை அப்படியே அருந்த வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மாத்திரை, மருந்துகள் உட்கொள்வதை வாழ்க்ைகயில் தவிர்க்கலாம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.