சிவாவும், ஜீவாவும் நண்பர்கள். சிவா, ஜீவாவின் மேல் உண்மையான அன்பு செலுத்தினான். தனக்கு எது கிடைத்தாலும், அதை ஜீவாவுக்கு கொடுத்துவிட்டுத்தான் அவன் சாப்பிடுவான்.
ஊர்மக்களுக்கு சிவா பல பொதுச் சேவைகள் செய்தான். தெருவைக் கூட்டுவது, கடைகளுக்குச் சென்று மக்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி வருவது போன்ற சேவைகளை அவன் செய்தான்.
இதனால் ஊர் மக்கள் அவனைப் பெரிதும் பாராட்டினர். அவன் மேல் அன்பும் செலுத்தினர்.
ஜீவா, சிவா மேல் உண்மையான அன்பு செலுத்தவில்லை. வெறும் உதட்டளவில் மட்டுமே அவன் மேல் அன்பு செலுத்தினான். ஊர்மக்கள் சிவாவிடம் மட்டும் அதிக அன்பு செலுத்துகின்றனர் என்பதற்காக, அவன் மேல் பொறாமை கொண்டான். இவனை ஊர்மக்கள் முன்னிலையில் ஒருநாள் அவமானப்படுத்த வேண்டும் என்று மனதில் எண்ணிக் கொண்டான். மனதில் இத்தகைய வஞ்சகத்தை வைத்தவாறு வெளியில் சிவாவின் உயிர் நண்பனாக நடித்தான்.
ஒருநாள் கோவில் உண்டியல் திருடு போய்விட்டது. அதில், 50 ஆயிரம் ரூபாய் இருந்ததாகப் பூசாரி கூறினார். அந்த உண்டியலை எடுத்தவன் ஜீவா. ஆனால், அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. சிவாதான் உண்டியலைத் திருடினான் என்றும், அதைத் தான் நேரில் பார்த்தாகவும் பொய் சாட்சி கூறினான். ஊர்மக்கள் சிவாவை வெறுப்போடு பார்த்தனர்.
உடனே சிவா, ''டேய் ஜீவா, நான் உண்டியைத் திருடினேனா? அதை நீ கண்ணால் பார்த்ததாக வேறு பொய்சாட்சி சொல்கிறாய். இது தவறு. உனக்கு நான் எந்தத் துரோகமும் செய்ய வில்லையே... ஏன் இப்படி என் மீது நீ வீண்பழி சுமத்துகிறாய்?'' என்று கலங்கிய கண்களுடன் கேட்டான்.
''உண்டியலைத் திருடியவன் நீதான். இதை நான் என் இரண்டு கண்களால் பார்த்தேன். அதை நீ எங்கே வைத்திருக்கிறாய்? எடுத்து வந்து கொடுத்துவிடு. அது தெய்வத்தின் பணம். ஊருக்குக் கெடுதல் வரும்,'' என்று ஊர்மக்களின் முன்னிலையில் வஞ்சமாக நடித்தான் ஜீவா.
அப்போது, அங்கே ஒருவர் தம் கையில் கோவில் உண்டியலை எடுத்தவாறு சம்பவ இடத்திற்கு வந்தார். ஊர்மக்கள் பெரிதும் மகிழ்ந்தனர்.
சாமி உண்டியல் கிடைத்துவிட்டதனால் தான் அந்த மகிழ்ச்சி. அதில் இருந்த பணத்தை எண்ணிப் பார்த்த போது கோவில் பூசாரி கூறியதைப் போலவே 50,000 ரூபாய் சரியாக இருந்தது.
கோவில் உண்டியலைக் கொண்டு வந்தவரிடம், ''உண்டியல் எப்படி தங்கள் கையில் கிடைத்தது?'' என்று ஊர்மக்கள் கேட்டனர்.
அதற்கு அந்த மனிதர், ''நான் ஒரு வேலை விஷயமாக ஜீவாவை பார்க்க அவன் வீட்டிற்குச் சென்றிருந்தேன். வெளியிலிருந்து குரல் கொடுத்தேன். உள்ளேயிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சரி, உள்ளே போய் பார்க்கலாம் என வீட்டிற்குள் நுழைந்தேன். அங்கேதான் கோவில் உண்டியல் இருந்தது. அதை இங்கே எடுத்து வந்தேன். இதைக் கோவிலிலிருந்து திருடி, தன் வீட்டில் வைத்தவன் ஜீவாதான்; சிவா அல்ல. அவன் நிரபராதி,'' என்றார் அந்த மனிதர்.
தன் குட்டு வெளிப்பட்டதை அறிந்த ஜீவா மெதுவாக கூட்டத்திலிருந்து ஓடுவதற்கு முயன்றான். அதற்குள் ஊர்மக்கள் அவனைப் பிடித்துக் கொண்டனர்.
பொய் சாட்சி கூறிய அவனுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, அவனை ஒருமாதம் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர்.
நிரபராதியான சிவாவை சந்தேகப்பட்டதற்காக ஊர்மக்கள் அவனிடம் மன்னிப்பு கேட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.