March 26, 2016
ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் அமெரிக்க முஸ்லீம்களுக்கு முக்கிய பங்குண்டு; அதிபர் ஒபாமா
அமெரிக்க அதிபர் வேட்பாளராக குடியரசுக் கட்சி சார்பில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு டிரம்ப் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்களை சர்ச்சைக்குரிய வகையில் முன்வைத்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்க முஸ்லீம்கள் குறித்து வாராந்திர வானொலி உரையில் பேசியவை பின்வருமாறு:-
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான எங்களது போராட்டத்தில் எங்களுக்கு ஆதரவாக இருக்கப் போகிறவர்கள் அமெரிக்க முஸ்லீம்கள்தான். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முஸ்லீம்கள் அதிகளவில் பங்காற்றியிருக்கிறார்கள். முஸ்லீம்களை அமெரிக்காவுக்குள் நுழையவிடாமல் தற்காலிக தடை விதிக்க வேண்டும் என டொனால்டு டிரம்ப் பேசி வருகிறார். இது அமெரிக்காவின் பாரம்பரியம், வரலாற்றுக்கு எதிரானது. அமெரிக்காவில் மதசுதந்திரம் உள்ளதா? என்ற சந்தேகத்தை எழுப்பும் பேச்சு. ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதே அமெரிக்க ராணுவத்தின் முதல் பணி. நாங்கள் அதில் வெல்வோம். தீவிரவாதிகள் தோல்வியை தழுவுவார்கள். எங்களது பாரம்பரியத்தையும், வாழ்க்கை முறையையும் கைவிட வேண்டும் என தீவிரவாதிகள் நினைக்கிறார்கள். ஆனால், நாங்கள் கைவிட மாட்டோம். பெல்ஜியம் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடு. தீவிரவாதத்தை வேரறுக்கும் வரையில் அமெரிக்கா ஓயாது.
இவ்வாறு அதிபர் ஒபாமா உரையாற்றினார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளை வீழ்த்துவதில் அமெரிக்க முஸ்லீம்களுக்கு முக்கிய பங்குண்டு; அதிபர் ஒபாமா
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
March 26, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.