மத்திய பிரதேசம் மாநிலத்தில் தண்ணீர் குடித்ததற்காக ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து வாலிபர் ஒருவர் ரெயில் ஜன்னலில் கட்டிவைத்து அடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் இடார்சி ரெயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடைபெற்று உள்ளது.
வாலிபர் சுமித்தின் தந்தையான(விவசாயி) ரகுநாத் காசி ரெயிலில் பயணி ஒருவரது தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து உள்ளார். இதற்கு தண்ணீர் பாட்டிலுக்கு சொந்தமான நபர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதனையடுத்து வாலிபர் சுமித்திற்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் ரெயிலின் ஜன்னலில் சுமித்தை கட்டிவைத்து மூன்று வாலிபர்கள் பெல்டால் கொடூரமான முறையில் தாக்கிஉள்ளனர். வாலிபர்கள் மூவரை அவரை கொடூரமான முறையில் தாக்கும்போது யாரும் தடுக்கவரவில்லை...
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. விவசாயி ஒருவர் தாகத்திற்காக தண்ணீர் குடித்ததற்கு இதுபோன்று ஒருவரை கொடூரமான முறையில் தாக்குவது மனித தன்மையற்ற செயல் என்று கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக போலீசார் மூன்று வாலிபர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து உள்ளனர், ஆனால் இதுவரையில் யாரையும் கைது செய்யவில்லை.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.