சென்னையில் பிளாட்பார குழந்தைகள் கடத்தல் வழக்கில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் போலீசார் துப்பு துலக்கி வருகிறார்கள்.
குழந்தைகள் கடத்தல்
சென்னை வால்டாக்ஸ் சாலையில் கடந்த மாதம், பெருமாள்–லட்சுமி தம்பதி பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய போது, தங்களது 6 மாத பெண் குழந்தை சரண்யாவை பறி கொடுத்துவிட்டனர். காணாமல் போன குழந்தை சரண்யா இதுவரை மீட்கப்படவில்லை.
இதுபோல கடந்த 21–ந் தேதி அன்று அதிகாலையில், பிளாட்பாரத்தில் தூங்கிய மேலும் ஒரு ஆண் குழந்தை கடத்தப்பட்டது. அந்த ஆண் குழந்தை பிறந்து 3 மாதங்களே ஆன கைக்குழந்தை ஆகும்.
ரோகேஷ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த ஆண் குழந்தையின் தந்தை பெயர் விமல் (வயது 28). தாய் பெயர் நேத்தா (23). பாரிமுனையில் சட்டக்கல்லூரி போலீஸ் நிலையம் அருகே பிளாட்பாரத்தில் தூங்கும்போது குழந்தை ரோகேஷ் கடத்தப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக, சட்டக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடத்தப்பட்ட குழந்தைகளை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி, நடிகர் பார்த்திபன்,போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை சந்தித்து மனு கொடுத்தார்.
கண்காணிப்பு கேமரா மூலம்...
கூடுதல் கமிஷனர் சேஷசாயி, இணை கமிஷனர் ஜோசிநிர்மல்குமார், துணை கமிஷனர் செந்தில்குமார் ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை போலீசார் கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி,கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும், அதை அடிப்படையாக வைத்து இந்த வழக்கில் துப்பு துலக்கி குழந்தையை மீட்டு, குற்றவாளியை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 2 குழந்தைகளையும் ஒரே நபர்தான் கடத்தி சென்றிருக்கவேண்டும் என்றும் போலீசார் கருதுகிறார்கள்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.