Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 6, 2015

வாழ்க்கையில் ஒரு முறையாவது போகவேண்டும் என்ற இடம் என்றால் அது இந்த இடம் தான் !!


2005குன்றுகளின் ராணி, கோடை காலப்புகலிடம் என்று பல பெயர்களோடு அழைக்கப்படும் சிம்லா, அதிகளவில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த வண்ணம் உள்ளது.

எத்தனை முறை சென்றுவந்தாலும், சலிக்காமல் மீண்டும் சுற்றுலாப்பயணிகளை அழைக்கிறது இந்த சிம்லா.

இமாசலப்பிரதேசத்தில் தலைநகரமாக விளங்கும் சிம்லா புகழ்பெற்ற பனிச்சறுக்குக்களமாகும். குளிர்காலத்தில் இந்த இடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருக்கும் மேலும் இது பனிச்சறுக்கு விளையாட்டிற்கு உகந்த நேரமாக உள்ளது.

மலையேற்றமும் இங்கு பிரபலமாக உள்ளது. ஜுங்கா, செயில், சுர்தார், ஷாலி பீக், ஹட்டு பீக் மற்றும் குல்லு போன்ற இடங்கள் சிம்லாவுடன் பல்வேறு வழிகளில் இணைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள் இரு சக்கர வாகனத்தின் மூலம் (mountain biking) சிம்லாவிலிருந்து நல்தேரா மற்றும் சலோக்ராவை சுற்றிப்பார்க்கலாம். பியாஸ், ராவி, செனாப் மற்றும் ஜீலம் போன்ற நதிகள் பார்வையாளர்களுக்கு படகு செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

சிம்லா, ஆகாய,சாலை மற்றும் ரயில் போன்ற முக்கிய போக்குவரத்து வழிகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

சிம்லாவின் மிக நெருக்கமான விமான தளமாக ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் (Jubbarhatti Airport) விளங்குகிறது.

இந்த விமான தளத்திற்கு இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து அடிக்கடி விமானங்கள் உள்ளன.

சுற்றுலா பயணிகள் கால்கா ரயில் நிலையத்தின் மூலமும் இலக்கை அடையலாம்.

[gallery size="medium" ids="59970,59971,59972,59973,59974,59975,59976,59977,59978,59979,59980,59981,59982,59983"]

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.