பொள்ளாச்சி என்றாலே இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு என்று அர்த்தம்.மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான, ரம்மியமான வானிலையே நிலவுகிறது. சுற்றுலா செல்வதற்கு, வருடம் முழுவதும் ஏற்ற இடமாக இருப்பினும், மிகவும் இனிய வானிலை நிலவக்கூடிய மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்நகரம், மிகுந்த பொலிவுடன் காணப்படும்.
இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது.
அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன.
இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன.
நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.
பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.