Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

May 22, 2015

பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கைது செய்த பொலிஸ்: மன்னிப்பு கோரி இழப்பீடு வழங்கிய நீதிமன்றம் !!


rape_victim_002பிரித்தானியாவில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணை கைது செய்து விசாரணை செய்த பொலிசாரை கண்டித்து பாதிப்புக்குள்ளான பெண்ணிற்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இங்கிலாந்தில் உள்ள Hampshire நகரத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு வாலிபர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் நடந்தபோது 17 வயதான அந்த இளம்பெண், பொலிசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.


இதனை தொடர்ந்து, இளம்பெண் பலாத்காரத்திற்குள்ளானது உண்மை தானா என நிரூபிக்க, அப்பெண்ணிடம் தடயவியல் துறை அதிகாரிகள் மருத்துவ பரிசோதனை செய்துள்ளனர்.


இந்த பரிசோதனையின் முடிவில், தடயவியல் துறை அதிகாரிகள் அந்த பெண் பலாத்காரத்திற்கு உள்ளாகவில்லை என தவறான பரிசோதனை முடிவுகளை பொலிசாரிடம் அளித்துள்ளனர்.


இதையடுத்து பொலிசாரிடம் பலாத்காரம் நடந்ததாக பொய் கூறியதாக கூறி, அப்பெண்ணை பொலிசார் கைது செய்து அவமதிக்கும் வகையில் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.


பொலிசாரின் நடவடிக்கைகளை தாங்கிக்கொள்ளாத அப்பெண் மனித உரிமை காப்பகம் மூலம் தனக்கு நேர்ந்துள்ள அநீதியை எதிர்த்து முறையிட்டுள்ளார்.


இதனை தொடர்ந்து, மனித உரிமை காப்பகத்தின் பரிந்துரையின் அடிப்படையில், அப்பெண்ணிற்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


இதில், அவர் பலாத்கார தாக்குதலுக்கு உள்ளானது உண்மைதான் என நிரூபிக்கப்பட்டதால் அதற்கு காரணமான வாலிபரை கைது செய்து கடந்த 2013ம் ஆண்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் விதித்தது.


இந்நிலையில், அந்த பெண் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தாங்கிக்கொள்ளாமல் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.


எனவே, முறையான விசாரணை நடத்தாமல் பாதிப்பிற்குள்ளான பெண்ணை அவமதித்த பொலிசார் மீது வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கு குறித்த விசாரணை நேற்று Hampshire நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.


வழக்கை விசாரித்த நீதிபதி பாதிப்பிற்குள்ளான பெண்ணை தவறதலாக கைது செய்த பொலிசாரை கண்டித்துள்ளார்.


மேலும், அப்பெண்ணிடம் மன்னிப்பு கோருவதுடன் அவருக்கு 20,000 பவுண்டுகள் இழப்பீடு வழங்க வேண்டும் என பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.