Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

சவுதி அரேபியா நம்பிக்கை: கத்தார் சரியான அரசியல் முடிவுகளை எடுக்கும் !


அண்டை நாடுகளின் கோரிக்கைகளை ஏற்று கத்தார் அரசு சரியான அரசியல் முடிவுகளை எடுக்கும் என்று நம்புவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் அடெல் அல்-ஜுபீர் இவ்வாறு கூறியுள்ளார். அண்டை நாடுகளின் கோரிக்கையை ஏற்று பழையபடி உறவை தொடரவே கத்தார் மக்கள் விரும்புகின்றனர் என்றார் அவர்.

மேலும் பேசிய அவர் கத்தார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நோக்கம், அதன் தவறான கொள்கைகளை திருத்துவது மட்டுமே. அந்த கொள்கைகளால் கத்தாருக்கு மட்டுமின்றி உலகிற்கே ஆபத்து ஏற்படும் என்றார். கத்தார் நல்ல பதிலை தரும் என எதிர்பார்கிறோம். கத்தார் அளிக்கும் பதிலை பொறுத்து அடுத்த என்ன செய்வது என்பது குறித்து சவுதி முடிவெடுக்கும் என்றார்.

கடந்த 23-ம் தேதி 13 அம்ச கோரிக்கைகளை கத்தாரிடம் உறவை துண்டித்த நாடுகள் ஒன்றிணைந்து முன்வைத்தன. அவற்றை நிறைவேற்ற கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கெடு நாளையுடன் முடிவடைகிறது.

அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கப்படும் என தெரிகிறது. பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி, ஈரானுடன் உறவு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை கூறி மற்ற அரபு நாடுகள் கத்தாரை தனிமைபடுத்தியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.