Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

April 6, 2017

விமானத்தில் வாலிபர் சில்மிஷம் ஸ்பெயின் பெண் பயணி ரகளை


துபாயிலிருந்து எமரேட் ஏர்லைன்ஸ் விமானம் 262 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து கொண்டிருந்தது. அதில் சென்னையை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் 2 ஆண்டுகள் துபாயில் பணிபுரிந்துவிட்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருந்தார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த 45 வயது பெண் சுற்றுலா பயணியும் அதே விமானத்தில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது சென்னை வாலிபரிடம் ஸ்பெயின் பெண் பயணி கழிவறை எங்கே இருக்கிறது கேட்டுள்ளார். அப்போது, சென்னை வாலிபர் கழிவறை இருந்த திசையை சுட்டிக் காட்டியபோது, அவரது கை ஸ்பெயின் பெண் பயணி மீது தவறுதலாக பட்டுவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் பயணி கூச்சல் போட்டுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த விமான பணிப்பெண்களிடம், சென்னை வாலிபர், கழிவறையை சுட்டிக்காட்டியபோது தவறுதலாக கை பட்டுவிட்டது, என்று கூறியுள்ளார். ஆனால், ஸ்பெயின் பயணியோ வேண்டுமென்றே தன்னை சில்மிஷம் செய்ததாக தொடர்ந்து கூச்சல் போட்டார். இதையடுத்து, ‘விமானம் சென்னையில் இறங்கியதும் நாங்கள் இந்த வாலிபரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்து விடுகிறோம். நீங்கள் அவர்களிடம் புகார் கொடுங்கள். அதுவரை அமைதியாக இருங்கள்’ என்று கூறியுள்ளனர்.

நேற்று அதிகாலை 2.45 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் இறங்கியது. சுங்க அதிகாரிகளின் சோதனை முடிந்ததும், அந்த வாலிபரை விமான நிலைய போலீசாரிடம் விமானிகள் ஒப்படைத்தனர். ஆனால், காலை 10 மணி வரை சம்பந்தப்பட்ட ஸ்பெயின் பெண் பயணி புகார் கொடுக்க வரவில்லை. இதையடுத்து எமரேட் விமான நிறுவனத்துக்கு தொடர்பு கொண்ட போலீசார், ‘‘யாரும் புகார் கொடுக்க வில்லை என்றால் அந்த வாலிபரை அனுப்பி விடுகிறோம்’என்றனர். அதற்கு எமரேட் விமான நிறுவனமும் அனுப்பி விடுங்கள் என்று கூறியுள்ளது. இதையடுத்து அந்த வாலிபரை விமான நிலைய போலீசார் அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.