Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 7, 2017

பேருந்து நிலையத்தில் தீயில் கருகிய பரிதாபம்: காதலனை நம்பி வந்த பெண் !


தமிழகத்தின் பண்ருட்டியில் காதலியை உயிருடன் எரித்துக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்ருட்டி அருகே கானாஞ்சாவடி பேருந்து நிலையத்தில் கடந்த 1ம் திகதி பெண் ஒருவர் தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அவரை அனுமதித்ததுடன் பொலிசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் முருகேசன் விசாரணை நடத்தியதில், அவர் பெயர் சக்தி என்றும், சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் கிருஷ்ணகிரியை சேர்ந்த முரளி என்ற வாலிபரை காதலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. பேஸ்புக்கின் மூலம் காதல் மலரவே, இருவரும் சேர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஊர் ஊராக சுற்றியுள்ளனர்.

பண்ருட்டி அருகே சாலையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இரு வீட்டாரும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதால் தற்கொலை செய்து கொள்ள சக்தி முடிவெடுத்தார்.

ஆனால் இதற்கு முரளி சம்மதம் தெரிவிக்காததுடன், சக்தியின் உடலில் டீசலை ஊற்றி தீ வைத்து விட்டு ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து முரளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது, இவர் கிருஷ்ணகிரியில் உள்ள செல்போன் கடையில் இருப்பது தெரியவந்தது.

விரைந்து சென்ற அதிகாரிகள் முரளியை கைது செய்தனர், விசாரணை நடத்தியதில் முரளிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும், செல்போன் கடை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.